ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 17, 2020

சாவித்திரி தன் கணவனை எமனிடமிருந்து மீட்டினாள் - விளக்கம்

காலையில் எப்படி இருந்தாலும் நீங்கள் கணவனும் மனைவியும் அந்தத் துருவ மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும். துருவ நட்சத்திரத்தின் சக்தி பெற வேண்டும் என்று ஒரு பத்து நிமிடமாவது தியானிக்க வேண்டும்.
 
1.பின் தன் மனைவிக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி கிடைக்க வேண்டும் என்று கணவன் எண்ண வேண்டும்
2.அதே போல் மனைவியும் தன் கணவனுக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி கிடைக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்
3.இதை ஒரு பழக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
 
ஒவ்வொரு நாளும் இரண்டு பேரும் இந்த அருள் உணர்வை எடுத்துச் சேர்க்க வேண்டும். இப்படி இருவருமே எடுத்து உணர்வை ஒளியாக மாற்றினால்தான் அந்த ஒளியின் அணுவாக மாற்றும் தன்மை அடைகின்றது.
 
அதைத் தான் எமனிடம் இருந்து சாவித்திரி தன் கணவனை மீட்டினாள் என்று சொல்வது...!
 
உதாரணமாக குடும்பத்திலோ அல்லது உறவினர்களோ நோய்வாய்ப்பட்டிருந்தால் பற்று கொண்ட நிலையில் அவரின் உணர்வை நுகர்ந்து விட்டால் அது நமக்குள்ளும் அணுவாக விளைகின்றது.
 
அந்த நோயாளி இறந்து விட்டால் அந்த ஆன்மா நமக்குள் வந்து நோயாக உருவாக்குகின்றது. இது போன்ற நிலைகள் வருவதைத் தடுக்க வேண்டும்.
 
என் கணவர் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டுமென்றும் அதே போல் என் மனைவி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்றும் இந்த உணர்வின் தன்மையை அதனோடு இணைக்கப்படும்போது “எமனிடம் இருந்து சாவித்திரி தன் கணவனை மீட்டினாள்...” என்ற நிலை வருகிறது.
 
ஏனென்றால் நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள்...
1.அன்புடன் பரிவுடன் நோய் உள்ளோரைக் கேட்டறிந்தால்
2.அந்த உணர்வு நமக்குள் எமனாகின்றது...
3.இந்த எண்ணம்தான் எமனாகின்றது.
 
எந்தக் குணத்தின் தன்மையைப் பெறுகின்றோமோ “வேதனை வேதனை...” என்றால் அதன் வழி கொண்டு நம்மை அழைத்துச் சென்று விடுகின்றது.
 
வேதனை என்பதே விஷம்...!
 
உடலுக்குள் வேதனை அதிகமானால் இந்த உடலை விட்டு அகன்ற பின் அந்த விஷம் கொண்ட உடலாக நம் உயிர் உருவாக்கிவிடுகிறது. பாம்பினமாகவோ அல்லது விஷம் கொண்ட ஜெந்துக்களாகவோ அழைத்துச் சென்று விடுகின்றது.
 
ஆக... இந்த வாழ்க்கையில் நாம் எடுக்கும் வேதனை உடல் முழுவதும் விஷமாகி விட்டால் மனிதனுடைய நல்ல சிந்தனை இழக்கப் படுகின்றது.
 
அப்பொழுது நாம் எங்கே செல்கின்றோம்...?
 
மனைவிக்குக் கணவன் இல்லை... மனைவியும் இதே போல் வேதனைப்பட்டால் கணவனுக்கும் மனைவி இல்லை...!
 
ஏனென்றால் நாம் எடுக்கும் உணர்வு
1.மற்றொன்றோடு ஒன்றி வரப்படும்போது இங்கே தன் மனைவியைப் பிரிக்கின்றது அல்லது கணவனைப் பிரிக்கின்றது.
2.அருள் ஒளியைக் குறைக்கின்றது... நஞ்சு என்ற நிலையை வளர்க்கின்றது. 
3.நஞ்சிற்குள் நம் நல்ல உணர்வுகள் அடிமையாகின்றது.
 
அடிமையான பின் அதன் உணர்வின் உடலாக மாற்றிவிடுகின்றது இது எல்லாம் நம் உயிரின் வேலை.
 
ஆகவே கணவன் மனைவியும் இருவருமே இதைப் போல காலை துருவ தியானத்தின் மூலம் துருவ நட்சத்திரத்தின் சக்தியைக் கூட்டிக் கொள்ள வேண்டும்.
 
நீங்கள் எந்த ஊரிலும் இருந்தாலும் சரி... அல்லது எங்கே சென்றிருந்தாலும் சரி... உங்களுக்குள் பதிவு செய்த நினைவை எடுத்து மனைவிக்கு மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும்.. அதன் பார்வையில் சர்வ பிணிகளையும் போக்கும் அந்த அருள் சக்தி பெற வேண்டும்... என்று கணவன் எண்ணுதல் வேண்டும்.
 
அதே மாதிரி மனைவியும் இதைப்போல எண்ணி தன் கணவருக்கு அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வெண்டும்... அவர் உடல் நலம் பெற வேண்டும்.... அருள் ஒளி பெற வேண்டும்... அவர் பார்வையில் இருள் நீங்க வேண்டும். மெய்ப் பொருள் காணும் திறன் பெற வேண்டும். அவரின் அருட்பார்வை என்றைக்கும் எனக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்ற இந்த உணர்வின் தன்மையை இருவருமே இப்படி எண்ணிப் பழக வேண்டும்.
 
இப்படி எண்ணினால் மனிதன் என்ற முழுமை அடையலாம்.
 
1.எப்படி இரக்கம் கொண்டு எண்ணியபின் ஒரு ஆத்மா நமக்குள் வந்து விடுகின்றதோ...
2.இதைப்போல கணவன் மனைவி இருவரும் ஒன்றானால் இரு உயிரும் ஒன்றாகின்றது.
 
ஆனால் இந்த உணர்வுடன் மற்றவர்கள் உணர்வுகள் நம்முடன் ஒன்றினால் இணைந்த நிலை மாற்றப்பட்டு “உயிரைப் (இருவரையும்) பிரித்து விடுகின்றது...”
 
ஆனால் அதே சமயம் இரு உயிரும் ஒன்றாக்கிடும் நிலையாக... இரண்டையும் பிணைத்து அருள் ஒளியைக் கூட்டும் போது உடலை விட்டுச் சென்ற பின் இரு உயிரும் ஒன்றாகி அந்த ஒளியின் சரீரமாக... பேரருள் பேரொளியாக மாற்றிக் கொண்டே இருக்கும்.
 
இப்படித்தான் அக்காலத்தில் கணவன் மனவியாக வாழ்ந்த அகஸ்தியன்... விஷத்தின் தன்மையை வென்று... அருள் ஒளிச் சுடராகி... துருவனாகி துருவ மகரிஷியாக ஆனது...!

அவன் திருமணம் ஆனபின் தான் இந்த நிலையை அடைகின்றான். துருவ நட்சத்திரமாக இன்றும் உள்ளான். ஆகவே அந்த அகஸ்தியனும் அவன் மனைவியும் ஒன்றி வாழ்ந்த வழிப்படி நாமும் வாழ வேண்டும் என்று பிரார்த்திப்போம்.