ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 25, 2020

உயிரின் துடிப்பால் உடலில் உண்டாகும் உஷ்ண நிலை பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

வான் வீதியில் வட்டமிட்டுக் கொண்டே உள்ள மண்டலங்களும் நட்சத்திர மண்டலங்களும் இந்தப் பால்வெளி மண்டலத்தில் வளர்ச்சி கொண்டுள்ள சில நிலைகளும் ஒன்றைத் தாண்டி ஒன்று ஓடும் நிலைக்கும் ஜீவன் வேண்டும்.
 
உஷ்ண அலைகளைக் கொண்ட நிலையில்தான் அததற்கு உயிர்த் துடிப்பே வருகின்றது.
1.அதி உஷ்ணத்தை எதுவும் ஏற்பதில்லை.
2.அதி குளிர்ச்சி பனிக்கட்டியாக உறைந்த நிலையிலும் தாவர இன வளர்ச்சி வளர்வதில்லை.
 
இன்று நம் பூமியின் நிலை எந்த நிலையில் அது சுழலும் தன்மை கொண்டு காற்று மண்டல வட்டத்திற்கு மேல் உஷ்ண அலைகளை நம் பூமி வெளிப்படுத்துகின்றதோ அந்த நிலையில்தான் ஒவ்வொரு கோளங்களுக்கும் அதன் சுழற்சியில் காற்று மண்டலமும் அம்மண்டலம் கக்கும் உஷ்ண நிலையும் செயல் கொள்கின்றது.
 
மனித உடலுக்கும் சரி ஒவ்வொரு ஜீவனுக்கும் சரி…
1.அதனைச் சுற்றி சப்த அலை உண்டு
2.சப்த அலைக்குச் சிறிது தள்ளி உஷ்ண அலை உண்டு.
3.இந்த மனிதனின் உடல் வெப்ப நிலையும் அம்மனிதனைச் சப்த அலையின் வெப்பக் காற்றும் ஒன்றாய்த்தான் இருந்திடும்.
 
தாவரங்களுக்கும் இந்த நிலையுண்டு. இதைப் போல் இவ்வுலகம் மற்ற எல்லா மண்டலங்களுக்குமே இப்படிப்பட்ட உஷ்ண அலைகள் உண்டு.
 
சந்திரனின் நிலை குளிர்ந்த நிலை என்று முன்னர் உணர்த்தினேன். ஒவ்வொன்றிற்கும் அதனதன் சுழலும் வேகம் கொண்டு இவ்வுஷ்ண அலைகள் மாறுபடுகின்றன.
 
இவ்வுஷ்ண அலை கக்கும் நிலையே எந்த மண்டலத்திற்கும் ஓர் இடத்தில் இருக்கும் நிலை மற்றொரு இடத்தில் இருந்திடாது. எல்லா ஜீவராசிகள் தாவரங்களின் நிலைக்கும் இத்தகைய நிலை உண்டு.

அது போல் சூரிய மண்டலத்திற்குச் சென்றிட முடியாது… “அது உஷ்ணமான கோளம்…” என்று விஞ்ஞானத்தில் உணர்த்துகின்றனர். ஆனால் அங்கே அப்படி இல்லை…!