ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 20, 2026

தியானத்தில் இருந்தால் மட்டும் பத்தாது…!

தியானத்தில் இருந்தால் மட்டும் பத்தாது…!


மைனர்கள் எல்லோரும் தியானத்தில் இருந்தால் மட்டும் பத்தாது…” நீங்கள் ஒவ்வொருவரும் வழிகாட்டியாக அமைய வேண்டும் உலகத்திற்கு எடுத்துக்காட்டாக ஞானிகளாக மாற வேண்டும்.
 
சாமி மீது உங்களுக்குப் பற்று அதிகமாக இருக்கலாம் ஆனால்
1.பற்று எதுவாக இருக்க வேண்டும்…?
2.அந்த அருளைப் பற்ற வேண்டும் இருளைப் போக்க வேண்டும்.
3.அந்த அருள் பற்று தான் நமக்குத் தேவை.
 
சாமியினுடைய உடல் பற்றல்ல…!
 
1.சாமியைக் கௌரவிப்பதும் சாமியை உயர்வாகச் சொல்வதும் உடலைத் தான்.
2.சாமியிடம் கேட்கும் உபதேசங்களை… அந்த அருளைப் பற்றி அதை நாம் போற்றுதல் வேண்டும்.
 
சாமியிடம் இருக்கும் அருள் பற்று எப்படி இருக்க வேண்டும்…?
1.ஞானத்தை வளர்த்தால் சாமியின் உடல் பற்று வராது.
2.சாமியின் ஞானப்பற்று தான் உங்களுக்கு வரவேண்டும்.
 
எங்கள் சாமி உயர்ந்தவர்…” என்று சொல்வதைக் காட்டிலும்
1.”அந்த உயர்ந்த உணர்வு என்னிலே வளர்கிறது…” என்று
2.உலகிற்கு நீங்கள் எடுத்துக் காட்டினால் வழி நடத்தினால் ருள் பற்று வருகின்றது.
 
இந்தத் தியானத்தைக் கடைபிடிப்போர்கள் இதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
 
நீங்கள் அனைவரும் இன்னொரு வேலை செய்ய வேண்டும். என்னுடைய உபதேசங்களை எழுத்து வடிவிற்குப் புத்தகமாகக் கொண்டு வர வேண்டும்.
1.அதை எழுதி என்னிடம் கொடுங்கள் திருத்தங்களைச் சொல்லிக் கொடுக்கின்றேன்
2.ஒவ்வொருவரும் அருள் ஞானத்தை வெளிப்படுத்தும் நூல் ஆசிரியராக வாருங்கள்.
 
அந்த மாதிரிப் பழகிக் கொண்டால் பகைமைகள் புகாது தடுக்கலாம். அருளைப் பெருக்கலாம்.ருண்ட உலகில் இருந்து மீட்டித் தெளிந்த மக்களாக கொண்டு வர முடியும்.
 
விஞ்ஞானத்தின் விளைவுகளிலிருந்து நம்மையும் நாட்டையும்  உலகையும் காக்க முடியும்.
 
ஒரு வித்தை மண்ணில் ஊன்றினோம் என்றால் அது உபயோகமற்றதாக மாறுகின்றது. பின் செடியாக வளர்ந்து தன் இனத்தின் வித்தைக் கவர்ந்து எல்லோருக்கும் பசியாற்றுகின்றது.
 
இதைப் போன்று கருவில் வளரும் சிசுக்களுக்கெல்லாம் அருள் ஞான வித்துக்களைப் பதிவு செய்து ஊன்றினால் அவன் வளர்ந்து அருள் ஞானத்தைக் கொண்டு அனைவரையும் காக்கும் திறன் கொண்ட ஞானி ஆகின்றான் நாட்டைக் காக்கும் ஞானியாகின்றான்.
 
இத்தகைய அருள் ஞானிகளை வளர்த்தால் தான்
1.இனி அரசாங்கங்க நிர்வாகத்தைத் தனதாக மாற்றி
2.“நாம்…” என்ற நிலைகளில் ஒன்றுபட்ட இயக்கமாக அவன் கொண்டு வருவான்.
 
இப்பொழுது உலகெங்கிலும் நடக்கும் அரசாங்கங்கள் அனைத்தும் நான்…” என்ற நிலையில் தான் நடக்கிறது.
 
நாம் என்ற நிலையில் அத்தகைய அரசாங்கத்தை உருவாக்கி மகிழ்ந்து வாழும் மக்களாக நாம் உருவாக்க வேண்டும். அத்தகைய ஞானிகள் உருவானால் அனைவரையும் பிறவி இல்லா நிலை அடையச் செய்யும் அரும்பெரும் சக்தியாக அது மாறும்.
1.ஆகவே ஞானிகளை உருவாக்குவோம்.
2.நமக்கு இனி ஒரு பிறப்பு வேண்டாம் நம்முடைய எல்லை ஒளி உடல் பெறுவது தான்.