சூரியனிலிருந்து வெளிப்படும் அமிலத் தன்மையான
பல நிலை கொண்ட உயிரணுக்கள் இப்பூமி தன்னுள் ஈர்த்து அவ்வுஷ்ண அலைகளை வெளிப்படுத்திக்
கொண்டே தான் உள்ளது.
ஆக... பல மாறுபட்ட நிலைகள் கொண்ட அமில சக்திகள்
இப்படர்ந்த காற்றினில் உள்ளதினால் அவ்வமிலத்தின் மேல் இச்சூரிய ஒளி பட்டவுடன்
1.மென்மேலும் பல நிலை கொண்ட அமிலத்தன்மையும்
வளர்ந்து
2.உயிரணுக்களும் வளர்ந்து கொண்டேதான் உள்ளன.
இப்பூமியின் வளரும் நிலை கொண்ட அனைத்து சக்திகளுமே
ஜீவன் கொண்ட உயிரணுக்கள் தான்.
ஒவ்வோர் உயிரணுக்களும் எச்சக்தியில் உயிரணுவாய்
எவ்வமில சக்தியைப் பெற்று உதித்தனவோ அவ்வமிலத் தன்மை உடைய காந்த சக்தியை உடைய உயிரணு
அச்சக்தி நிலை கொண்ட அமிலத்தைக் காந்த நிலையுடனே மென்மேலும் ஈர்த்து வளர்கிறது.
அவ்வாறு வளரும் நிலையில் அது அது ஈர்த்த
நிலை கொண்டு தாவரங்கள் கல் மண் நீர் மற்ற பூமிக்கு அடியில் உள்ள திரவப் பொருள்கள் உலோகங்கள்
(கனி வளங்கள்) இப்படி வளரும் உயிரணுக்கள் சில. இன்னும் சில நிலை கொண்ட உயிரணுக்கள்
ஜீவ உடல் பெற வருகின்றன.
இப்பூமியில் இருந்து வளரும் இப்பொழுது சொல்லிய
உயிரணுக்கள் எல்லாம் இப்பூமியின் மேல் படர்ந்து பூமியுடனே ஐக்கியப்பட்டு பூமிக்குள்ளே
இருந்து வளர்ந்த நிலை பெற்ற இயற்கை வளம் கொண்ட உயிரணுக்களின் நிலை தான் இவையெல்லாம்.
ஆனால் இஜ்ஜீவ உடலை ஏற்கும் உயிரணுவானது இக்காற்றில்
படர்ந்து கொண்டே இக்காற்றில் உள்ள அமில சக்தியை மென்மேலும் தன்னுள் ஈர்த்துச் சுற்றிக்
கொண்டுள்ள நிலையில் வளர்ச்சி கொண்ட நிலையில் உள்ள பொழுது அடுத்து... கருவாக அதாவது
உடல் பெறுவதற்கு வருகிறது.
தாய் தந்தை என்ற இரண்டு ஜீவ உடல் நிலை கொண்ட
இனங்கள் ஒன்றுபடும் பொழுது இவ்விரண்டு ஜீவ உடல்களின் அமில சக்தி ஒன்றுபட்டவுடன் காற்றில்
கலந்துள்ள அந்த உயிரணு தன் நிலைக்கு ஒப்ப அமில நிலை கொண்ட காந்த சக்தியுடைய உயிரணுவின்
சக்தி இவ்வொன்றுபட்ட சக்தியுடன் வந்து உயிர் கொள்கின்றது.
இவ்விரண்டு ஜீவ உடல்களின் அமில சக்தி ஒன்றுபட்டவுடன்
அவ்வுயிரணுவின் சக்திக்குகந்த பிறப்பிடமாக இவற்றை ஏற்றுத்தான் அவ்வுயிரணு கருவாகின்றது.
கரு உருவாகி வளரும் போது அத்தாயின் கருவிலே...
தான் ஈர்த்துப் பழக்கப்பட்ட அமில சக்தியைத்தான் எடுக்கிறது. அத்தாய் சுவாசிக்கும்போது
தன் நிலைக்கு ஒப்ப... தனக்கு வேண்டிய அமிலத்தை மட்டுமே ஈர்த்து வளர்ச்சி பெற்று வளர்கின்றது.
1.சூலுண்ட நிலையில் உள்ள ஜீவ உடல் கொண்ட
தாயின் ஜீவ ஆத்மாவிற்கும்
2.தனித்த நிலையிலுள்ள ஜீவ உடல் கொண்டவரின்
துடிப்பு நிலைக்கும்
3.சூலுண்ட நிலையிலுள்ள ஜீவ உடல் கொண்ட ஜீவன்களின்
துடிப்பு நிலைக்கும் மாறு கொண்ட நிலை இருந்திடும்.
தாவர வர்க்கங்களின் நிலையை ஜீவ அணுவாய் வளர்ந்த
நிலை என்று உணர்த்தினேன். ஜீவன் கொண்ட ஜீவ அணுக்கள்தான்... துடிப்பு நிலையில்லா வர்க்கங்கள்...
இவை...!
1.ஆனால் ஜீவ ஆத்மாக்கள்தான் ஜீவ உடல் கொண்ட
ஆத்மாக்களாய்
2.உதிர ஓட்டமுடன் துடிப்பு நிலை கொண்ட அங்கங்களை
உருவாக்கி வளர்ந்திடும் ஜீவ ஆத்மாக்கள்.
அனைத்துமே உயிரணுவாய் இயற்கையுடன் இவ்வுலகில்
உயிர் பெற்றாலும் ஒவ்வொன்றிற்கும் அவையவை ஈர்த்த காந்த அமில சக்தி கொண்ட இப்பூமியில்
படர்ந்து பூமியுடன் ஐக்கியப்பட்டு பூமியிலிருந்து வெளிப்படும் உஷ்ண அலைகளை ஈர்த்தே
வாழ்கிறது.
அதாவது இயற்கை வளங்களாகவும்... காற்றுடனே
ஆவியாகப் படர்ந்த நிலையில் தன் சக்திகளை ஈர்த்தும்...
1.வளர்ந்திடும் உயிரணுக்கள்தான் ஜீவ உடல்
கொண்ட ஆத்மாவாக
2.ஊர்வன பறப்பன நீரில் வாழ்ந்திடும் நீரினங்கள்
மிருக வர்க்கங்கள் இம் மனித உடல்கள் எல்லாமே.
3.உயிரணுவாய்த் தோன்றிய நாளிலேயே அது ஈர்க்கும்
அமில சக்தியைக் கொண்டு தன் தன் பிறப்பு நிலை எய்துகிறது.
4.உயிரணுவாய் உதித்த நாளிலேயே தன் தலை எழுத்தைத்
தானாகவே எழுதிக் கொள்கின்றது.
இக்காற்றில் படர்ந்துள்ள உயிரணுக்கள்தான்
ஜீவாத்மாவாகி என்றும் அழியாமல் மீண்டும் மீண்டும் ஜென்மம் பெறுவதற்கு வருகிறது என்பதல்ல.
இப்பூமியுடன் ஐக்கியப்பட்டு வளர்ந்த அனைத்துமே
இந்நிலையில்தான் தத்தம் இனத்துடன் அவையவை சேருகின்றன.