ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 5, 2020

நம் பையன் சீராகப் படிக்கவில்லை என்றால்... உடல் நலம் சரியில்லை என்றால் எப்படித் தியானிக்க வேண்டும்...?


அந்தத் துருவ மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும். அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா பெறவேண்டும் என்று நமக்குள் முதலில் வலு ஏற்றிக் கொள்ள வேண்டும்.

1.என் பையன் உடல் முழுவதும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் படர வேண்டும்
2.அவன் அறியாது இருள்கள் நீங்க வேண்டும்
3.பொருள் காணும் உணர்வுகள் அவன் பெறவேண்டும்.
4.அறிந்துணர்ந்து செயல்படும் சக்தி அவன் பெறவேண்டும் என்று
5.இப்படி இந்த உணர்வைத் தாய் தனக்குள் சமைத்து அந்த உணர்வுடன் பையனை உற்று நோக்கி
6.ஒரு உணவுப் பொருளைக் கையிலே கொடுத்து... இதை நீ சாப்பிடப்பா...
7.உனக்கு நல்ல ஞாபக சக்தியும் ஞான சக்தியும் வரும் என்று சொல்லுங்கள்.

அதைப் போல சந்தர்ப்பத்தில் குழந்தைகளுக்கு உடல் நலம் இல்லை என்றால் என்ன செய்ய வேண்டும்...?

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டுமென்று தாய் தனக்குள் எண்ணி வலுவாக்கிய பின்
1.தன் பையன் இந்த உடல் நோய் நீங்க வேண்டும் என்ற உணர்வை இந்தத் தாய் எடுத்து
2.சிறு விபூதியோ ஏதோ ஒன்றை எடுத்துக் கொடுத்தாலும்
3.இந்த உணர்வு கலந்து அந்த உடல் ஆரோக்கியம் பெறும் சக்தி கிடைக்கும்
4.கடினமான மருந்தும் தேவையில்லை.

அகஸ்தியன் பல தாவர இனங்களின் தன்மையை விஷத்தின் தன்மையை ஒடுக்கியவர். அந்த உணர்வின் தன்மை பெற்று விஷம் கொண்ட மிருகங்களையும் அடக்கியவர்.

இப்படி அந்த அகஸ்தியன் பல தீமைகளை வென்று தீமைகளை வென்றிடும் உணர்வை வளர்த்துத் துருவனாகி திருமணமான பின் தன் மனைவியின் உடலில் அதை எல்லாம் பாய்ச்சிக் கணவனும் மனைவியும் இரண்டறக் கலந்து நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றியவர்கள். துருவ நட்சத்திரமாக இன்றும் உள்ளார்கள்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நுகர்ந்து
1.உங்கள்  குழந்தைக்கு அந்தச் சக்தி பெற வேண்டும் என்று எண்ணத்தில்
2.அவனைக் கண் கொண்டு உற்றுப் பார்த்து
3.அவன் கண்ணின் நினைவிற்குள் அவன் இந்த நோயிலிருந்து விடுபட வேண்டும் என்று
4.எதாவது ஒரு ஆகாரத்தை எடுத்து ஜெபித்துக் கொடுங்கள்.

அந்தக் குழந்தை உடல் நலமாகும் பார்க்கலாம்.

மருந்துகளை டாக்டர் கொடுத்தாலும் நாம் அடிக்கடி இந்த முறைப்படி செய்தோமென்றால் கடும் நோயாக உருவாகாதபடி அவனைக் காத்திடலாம்... நோயை தடுத்திடலாம்.

இதெல்லாம் நமக்குள் ஒரு பழக்கத்திற்கு வர வேண்டும்.

ஒரு பையன் சீராக வரவில்லை என்றால் இதைப் போல அந்தத் துருவ மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும். துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று எண்ணி அந்த பையனுக்கு நல்லொழுக்கமும் நல்ல ஞானமும் உலகை அறிந்திடும் அருள் ஞானமும் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

இதைப் போல எண்ணி அவனுக்கு எதாவது பிரசாதத்தைக் கொடுத்து இதை உட்கொள்ளச் சொல்லுங்கள்.
1.நீ ஞானி ஆவாய்... உலகை அறிவாய்... உலக ஞானம் பெறுவாய்...!
2.நல்லொழுக்கம் பெறுவாய் பிறர் போற்றும் நிலையில் உன் வாழ்க்கை அமையும் என்று
3.இதைப் போன்ற உயர்ந்த வாக்கினை நீங்கள் கொடுத்துப் பாருங்கள்.

இந்த உணர்வின் தன்மை அவனுக்குள் பதிவாகி... நீங்கள் சொன்னது அவனுக்குள் மீண்டும் நினைவாகி... நீங்கள் எண்ணிய உணர்வு அங்கே இயக்கப்பட்டு... அவன் தீமையில் இருந்து விடுபடும் நிலை பெறுகின்றான்... நோயிலிருந்தும் விடுபடுகின்றான்.