நம் முன்னோர்கள்... ஆத்மா
பிரிந்த உடலில் அவ் உடலிலிருந்து உற்பத்தியாகும் உயிரணுக்கள் தோன்றாத நிலைப்படுத்தி
அவ்வுடலுடன் அவ்வுடல் கெடாத பக்குவ நிலைப்படுத்தி அடக்கம் செய்து வைத்தார்கள்.
இன்று இக்கலியில் மக்களின்
தொகை பெருகுவதினால் அனைத்து ஆக்க சக்திகளும் அதிகரிக்கும் நிலைக்காக மக்களின் தொகையையே
குறைக்கும் நிலையில் பல வழிகளைச் செய்கிறார்கள்.
மனிதனே மனிதனின் இன வர்க்கத்தை
நிறுத்தப் பார்க்கின்றான் இன்று வாழும் மனிதன்.
ஆவி உலகில் பல மனித இன
ஆவிகள் தன் எண்ணத்தை ஈடேற்றச் சுற்றிக் கொண்டே உள்ள நிலையில்தான்
1.இன்று பல இடங்களில் ஒரு
தாய் ஒரு மகவு பெறும் நிலை மட்டும் இல்லாமல்
2.ஒரு தாய் ஒரே சூலில்
பல மகவுகளை ஈனும் நிலையில்
3.மிருக வர்க்கத்தின் நிலைக்கு
ஒப்ப வந்து பிறக்கின்றன.
பிறக்கும் மகவுகளைக் குறைக்க
வழி காண்கின்றான் இக்கலியின் மனிதன். ஆனால் இறக்கும் உடலை எந்நிலையில் சிதற விடுகின்றான்...?
இந்த நிலையைப் புரிந்து கொண்டால் பல நிலைகளில் இந்நிலையை மாற்றிடலாம்.
ஆவி உலகிலுள்ள ஆத்மாக்கள்
மட்டும் பிறவி எடுத்தால் இன்றுள்ள மக்கள் தொகையுடன் கூடி வராதா...? என்பீர்.
ஆவி உலகிலுள்ள மனித ஆத்மாக்கள்
எவையுமே உடனே பிறவி எடுக்கும் ஜென்ம ஆசையில் வந்து பிறப்பதில்லை. ஆவி உலகில் உள்ள ஆத்மாக்களுக்குத்தான்
இவ்வுலகில் உடலுடன் வாழும் மனிதர்களின் நிலை புரிகின்றதே.
இப்புதிய புதிய உயிரணுக்கள்
தோன்றும் நிலையை இம் மனிதன் மாற்றும் வழியை ஏற்படுத்தி வாழ்ந்தாலே...
1.மனிதனிலிருந்து மிருகம்
மிருகத்திலிருந்து மற்ற ஜெந்துக்கள் இவற்றின் நிலையும் மாறி
2.சூரியனிலிருந்து வரும்
சக்தியினால் தாவர வர்க்கங்கள் செழித்து வளரும் உன்னத நிலை பெறலாம்.
சூரியனிலிருந்து வரும்
சக்தியில் குறைந்தோ அதிகப்பட்டோ வருவதில்லை. என்றும் ஒரே நிலைப்படித்தான் வந்து குவிகிறது.
இவ்வுலகினில் தோன்றிடும்
உயிரணுக்களின் ஈர்ப்பு சக்தியின் துரிதத்தினால் (ஜீவன் பெற்ற உயிரணுக்களின் பெருக்கத்தினால்)
தாவர வர்க்கங்களின் நிலை குறைந்துவிட்டன.
இன்று தாவரங்களுக்குப்
பல செயற்கை நிலை கொண்ட பக்குவம் (உரங்கள்) ஏற்றினாலும் முன் காலத்தில் உள்ளதின் சுவையும்
மணமும் இன்றில்லை.
பூமியிலிருந்து வெளிப்படும்
சக்தியையே மற்ற ஜீவன் பெற்ற உயிரணுக்கள் ஈர்த்து வாழ்கின்றன. இனப் பெருக்கம் ஆக ஆக
இப்பெருக்கத்திலுள்ள ஜீவன்களுக்குத்தான் இப்பூமித்தாயும் நம் சூரியனும் தரும் சக்திகள்
சரிப்படுகின்றன.
தாவர வர்க்கங்களின் நிலைக்கு
அதன் ஈர்ப்புத் தன்மைக்கு உகந்த சத்துத் தன்மை குறைந்தே வருகிறது.
ஜீவன் பெற்ற உயிரணுக்களின்
பெருக்கத்தின் சுவாசத்தினாலும் இன்று செயற்கையினால் வந்த வினை கொண்டு இக்காற்று மண்டலத்திலுள்ள
சக்தியின் தன்மை குறைந்ததினாலும் இக்காற்றே கடும் விஷத்துடன் சுற்றிக் கொண்டுள்ளது.
அதனால் தாவர வர்க்கங்கள் செழித்து வளரும் நிலையில்லை.
1.கலியான இம்மனிதன் தன்
சக்தியின் சக்தியெல்லாம்
2.செயற்கையின் பேய்க்குப்
பலியிட்டதின் பாவத்தை
3.உணரும் தன்மைக்கு வந்து
விடுவான்... வந்து விட்டான்...!