நாம் எடுக்கும் சுவாசம் ஒரே நிலை கொண்டதாக இருந்திடல் வேண்டும். பல
எண்ணங்களின் நிலையுடன் எடுக்கும் சுவாசத்தில் நம் நிலைக்கு நாம் பெறும் சக்தி நிலை
தடைப்படுகின்றது.
1.வாழ்க்கையில் பல நிலைகள் மோதுண்டாலும்…
2.நம் எண்ண சக்தி அவ்வீசனின் ஜெபம் கொண்டதாக
3.நம்முள்ளே உள்ள ஈசனை வணங்கிய நல் சக்திக்கு வர வேண்டும்.
காட்சி:
இல்லத்தில் தூசி அண்டிக் கொண்டே இருந்திட்டாலும் அதனை நாம் பெருக்கி தூய்மைப்படுத்திக்
கொண்டே உள்ளோம்.
அதே போல் ஒரு தீபத்தை ஏற்றும் பொழுது அத்தீபத்தில் உள்ள எண்ணெய் குறையக் குறைய
மீண்டும் அவ்வெண்ணையை ஊற்றித் தீபத்தின் திரியைத் தூண்டுகின்றோம்.
அப்படித் தூண்டினால்தான் அத்தீபம் ஒளி அளித்துக் கொண்டே இருக்கும்.
1.அதே போல்… நம் எண்ணத்தை எண்ணெயாக்கி
2.நம் ஆத்மாவின் ஜோதி என்னும் ஒளிரும் சக்தியில்
3.இவ் எண்ணமான எண்ணெயை குறையக் குறைய ஊற்றினால்
4.தீபம் சுடர் விட்டுப் பிரகாசிப்பது போல் நம் சக்தியை நாம் உணர்ந்து உணர்வுகள்
ஒளியாகும் நல் சக்தி பெற வேண்டும்.
தாவர வர்க்கங்கள் ஒரே நிலை கொண்ட சக்தியை மட்டும் ஈர்த்து எப்படி அச்சக்தியின்
நிலை கொண்ட செயலில் வளர்கின்றனவோ அந்த நிலை போல் நம் நிலையும் இருந்திடல்
வேண்டும்.
தாவரங்கள் அதன் இயற்கையின் சக்தியில் ஒரே நிலை கொண்டு அவ்வணு வளர்வதினால்
ஒரே சக்தியில் ஈர்த்து வளர்கின்றன.
ஆனால் ஜீவ ஆத்மாக்கள் (நாம்) பல நிலைகளை எண்ணும் நிலையில் உள்ளத்தினால்
எந்தெந்த எண்ணங்களை எண்ணுகின்றோமோ அந்ந்தந்த நிலைக்குகந்த சக்தி நிலையும் நம்
உடலுக்குள் செல்லுகின்றது.
அதிகோப நிலையும் சலிப்பு நிலையும் பயந்த நிலையும் இப்படி ஒவ்வொரு நிலை
கொண்ட எண்ணமுடன் நாம் உள்ள நிலையில்
1.நாம் எடுக்கும் சுவாசத்தினால் இக்காற்றில் உள்ள அமிலத்தில் இருந்து அவைகள்
நம் உடலில் வந்து குவிந்து
3.நம் உடலின் நிலையை மாறுபடச் செய்கின்றது.
ஆக… நாமாக ஏற்பதுதான் நம் வாழ்க்கை நிலையும் ஆயுள் நிலையும்.
எண்ண சக்தி கொண்டு உயிராத்மாவாய்ப் பிறந்து இவ்வெண்ணமுடனே வளர்ந்து
இவ்வெண்ணத்துடனே உடலை விட்டு ஆத்மா பிரிந்தும் இவ்வெண்ணத்துடனே ஆவி உலகில்
சஞ்சரித்தும் பிறகு இவ்வெண்ண நிலைகொண்டு தான் இப்பூமிக்கு மறு பிறப்பிற்கும்
வருகின்றோம்.
உயிரணுவாய்த் தோன்றிய நாள் தொட்டே அந்த நிலைகொண்டு வளர்ச்சியுற்று எல்லா
நிலைகளுமே இந்த ண்ணத்துடன்தான் செயல்படுகின்றன.
எண்ண சக்தியை நாம் பெற்ற மானிடனாக இப்பூமியில் வாழ்ந்திடும் காலத்திலேயே
1.நாம் பிறந்ததின் பயனை உணர்ந்து
2.நம் ஆத்மாதான் நமது தெய்வம்
3.அவ்வாத்மாவிற்கு நாம் ஈர்க்கும் சுவாசம் கொண்டும்… நாம் சேமிக்கும் சக்தி
நிலையைக் கொண்டும்…
4.நம் நிலையை நல் நிலை ஆக்கிடும் நிலைக்கு நம்மை நாம் பக்குவப்படுத்தி
வாழ்ந்திடும் எண்ணத்தை வழிப்படுத்துதல் வேண்டும்.
உயிரணுவாய் உள்ள தாவரங்களின் நிலையுடன் இயற்கை அன்னை அளித்துள்ள நல்ல
கனிகளையும் உண்டிட்டே நம் நிலையில் அவற்றின் சக்தியைக் கொண்டே வளர்த்திடல்
வேண்டும்.
உயிரணுவாய் உள்ள இத் தாவரங்களுக்கு மட்டும் ஜீவனில்லையா..? இவ் இயற்கையுடன்
பூமியில் உள்ள அனைத்துமே ஜீவனுடன் உள்ள பொழுது மிருகங்கள் பறவைகள் இவற்றின்
மாமிசத்தைப் புசித்திடலாகாது. இத்தாவரங்களை நசித்து உண்ணலாமா…? என்றுரைப்பீர்.
தாவரங்கள் இப்பூமியைப் போன்ற நிலை பெற்றவை. உயிர் அணுவாய் ஒரே நிலை கொண்ட
சக்தியை ஈர்த்து அச்சக்தியின் நிலையின் தொடர்பு கொண்டு நம்மை வளரச் செய்பவை.
1.இத்தாவரங்கள் உயிரணுவாய் வளரப் பெற்றவைதான்
2.ஆனால் இச்சரீர நிலை கொண்ட ஆத்மாவுடன் கூடிய ஜீவத்துடிப்பு இல்லாதவை.
இஜ்ஜீவனுடன் ஜீவன் பெற்ற அனைத்து ஆத்மாக்களுக்குமே அது ஈர்க்கும் சக்தி
கொண்ட உஷ்ண அலைகளின் வெக்கை நிலையும் அதன் உடல் ஆரோக்கிய நிலையைப் பொறுத்துக்
கூடிக் குறையும் நிலை அஜ் ஜீவனுடனே அஜ் ஜீவனே ஏற்படுத்திக் கொள்கிறது.
தாவரங்களின் நிலையில் நம் பூமி வெளியிடும் உஷ்ண சக்தியின் நிலைதான்
அந்நிலையில் வளர்ந்திடும் தாவரங்களுக்கும் இருந்திடும்.
1.ஜீவத் துடிப்பும் ஜீவ எண்ணமும் தாவரங்களுக்கில்லை
2.தாவரங்களின் சக்தியெல்லாம் ஒரே நிலைகொண்ட சக்தியை ஈர்த்து வளர்ந்திடும்
நிலைதான்…!