எறும்பிற்கும் உணர்வுண்டு… சிறு மண் புழுவிற்கும் உணர்வுண்டு…! இஜ் ஜீவத்
துடிப்பு நிலையுள்ள அனைத்து ஜீவராசிகளுக்குமே இவ்வுணர்வு நிலையுண்டு.
ஆனால் தாவர வர்க்கங்களுக்கு இஜ் ஜீவத் துடிப்பு நிலை இல்லாததினால்
தாவரங்களுக்கு உணரும் தன்மை இல்லை.
சில வகைத் தாவரங்கள் மனிதனின் உடல் உறுப்புகள் பட்டவுடனே சுருங்கும் தன்மை
பெறுகின்றன. உணர்வில்லாமல் அவை எப்படிச் சுருங்குகின்றன என்று எண்ணுவீர்...?
இவ்வுணரும் சக்தி பெற்ற ஜீவஜெந்துக்கள் அதற்குகந்த அவை ஈர்த்து வளர்ந்த
அமிலத் தன்மைக்குகந்த காந்த சக்தி நிலையுண்டு.
இச்சக்தியினால் அத்தாவரங்களின் மேல் இச்ஜீவஜெந்துவின் சக்தி நிலை பட்டவுடன்…
அந்தத் தாவரம் எந்த நிலைகொண்ட சக்தி பெற்று எந்த அமிலத்தை ஈர்த்து வளர்ந்ததோ… அந்நிலைக்கும்
இந்நிலைக்கும் எதிருண்ட நிலை அடைவதினால்… “மற்ற ஜீவ ஜெந்துவின் உறுப்புகள்
பட்டவுடன் அது சுருங்கும் நிலைக்கு வருகின்றது…”
அஜ் ஜீவ ஜெந்துவின் வெப்ப நிலையும் அத்தாவரத்தின் வெப்ப நிலையும் மாறுபட்ட
நிலையில் உள்ளதினாலும் இந்நிலை பெறுகிறது.
சில வகைத் தாவரங்கள் சில நிலை கொண்ட மனிதரின் தீய எண்ணத்தையே ஈர்த்து நச்சு
நிலையில் வாழ்பவரின் உஷ்ண நிலை அவர் அந்நிலையில் எடுக்கும் சுவாச நிலை அந்தத் தாவரங்களின்
மேல் பட்டாலே அத்தாவரம் கருகும் நிலை பெறுகிறது.
இன்னும் சிலரின் நிலையில் அவர்கள் விதை விதைத்தால் அவ்விதை வளர்ந்திடாது.
அவ்விதையே இவர் கையில் ஏந்தி வைத்துள்ள நிலையிலேயே அவர் எடுக்கும் சுவாச நிலை கொண்டு
அவர்களின் அங்க சக்தியைக் கொண்டு அவ்விதைக்கு வளரும் சக்தியற்றுப் போகிறது.
அந்நிலையில் அவர் விதைக்கும் விதையும் வளர்வதில்லை.
1.சிலரின் சுவாசத்தினால் இவ்வுலக சக்தியையே சக்தியாகக் காணும் நல் நிலை
உள்ளது
2.சிலரின் சுவாசத்தினால் அவர்களின் எண்ணத்தின் நிலையினாலேயே
3.எந்த நிலைக்குச் சென்றிட்டாலும் சோர்ந்த நிலை பெறுகின்றனர்.
சக்தி நிலை பொதுவானதே…! இவ்வெண்ண நிலையினால்தான் மாறுபட்ட நிலைகளெல்லாம்…!
தாவரங்களின் நிலைக்கு இவ்வுணரும் நிலையும் எண்ண நிலையுமில்லை. உயிரணுவாய் ஒரே நிலையில்
சக்தியை ஈர்த்து எந்நிலை கொண்ட அமில சக்தியை ஈர்த்து வளர்த்தனவோ
அந்நிலைக்கொப்பத்தான் அவற்றில் விளையும் பூவும் காயும் கனியும் தானிய வகைகளும்
இருக்கும்.
தாவர வர்க்கங்களை நாம் அதில் வளரும் பூவையும் காய்கனியையும் சில கீரைகளின்
மேல் நிலையில் உள்ள கொழுந்துகளையும் நாம் பறித்து எடுக்கும் பொழுது அதன் நிலை
மென்மேலும் வளரத்தான் செய்கிறது.
அவற்றுக்கு ஜீவத் துடிப்பும் உணரும் தன்மையும் இல்லாமல் ஒரு நிலை கொண்ட
சக்தியை ஈர்த்து வளரப் பெற்றதினால் ஒவ்வொன்றும் அதனதன் குறிப்பிட்ட கால நிலைப்படி
அதன் பயன் நிலை கொண்டு சக்தியளித்து நமக்குப் பயன் தருகின்றது.
1.இந்த இயற்கையின் சக்தியில் பல நிலை கொண்ட ஒவ்வொன்றிற்கும் மாறுபட்ட நிலையில்
2.நம் எண்ணத்திற்கும் நம் உணர்விற்கும் எட்டாத பல கோடி நிலைகள் உள்ளன.
சில தாவரங்கள் பல நாட்கள் வளர்ந்தாலும் பலன் தராததை வைத்தும் இன்னும் சில வகைத்
தாவரங்களுக்கு ஒன்றுக்கெதிரில் அதே நிலைகொண்ட (ஜாதி) அதன் நிலை பெற்ற தாவரம்
இருந்திட்டால்தான் இவை இரண்டுமே பலனளிக்கும்.
தாவரங்களில் சில பலன் தராத நிலை பெற்றதை ஆண் தாவரம் என்கின்றனர்.
தாவரங்களுக்கு இவ் ஆண் பெண் என்ற நிலையில்லை. உயிரணுவாய் இப்பூமியில் தோன்றிடும்
எவ்வுயிரணுக்களுக்குமே இவ் ஆண் பெண் நிலையில்லை.
உயிரணுவாய் இருந்து ஜீவ ஆத்மாவிற்கு வந்த பிறகுதான் இவ் ஆண் பெண்
நிலையெல்லாம். ஆவி உலகத்திலும் இவ் ஆண் பெண் நிலையில்லை.
இவ்வாவி உலகிலிருந்து ஜெனனத்திற்கு வருபவர்களின் ஆவி ஆத்மாவின்
எண்ணப்படிதான் இஜ்ஜீவ ஆத்மாவிற்கு ஆணாகவும் பெண்ணாகவும் வந்து பிறப்பது எல்லாம்.
1.அவரவர்கள் எண்ண நிலைக்கும் உணர்வு நிலைக்கும் தக்கப்படிதான்
2.அவ்வாவி உலக ஆத்மா இஜ் ஜீவ உடலுக்கு வருகின்றது.