மனிதனாக உருப்பெறக் காரணமாக இருந்த நம் தாய் தந்தையை முதலில் அவர்களைக்
கடவுளாக நாம் மதித்துப் பழகுதல் வேண்டும்.
ஏனென்றால் எத்தனையோ தொல்லைகள் பட்டுத்தான் அவர்கள் மனிதரானார்கள். ஆனால்
நாம் ஈயாக எறும்பாக தேளாக பாம்பாக இருந்திருப்போம்.
அதை அடித்திருப்பார்கள். அந்த உயிர் அவர் உடலில் ஈர்ப்புக்குள் சென்றது. அவர்
உடலில் சேர்த்த அந்த உணர்வைக் கவர்ந்தது. நம் உயிர் அவர் உடலுக்குள் சென்றால் அவர்
வளர்த்துக் கொண்ட உணர்வின் தன்மையை அது கவர்ந்தது… மனிதனாக உருப்பெரும் சந்தர்ப்பமாகின்றது.
தாய் கருவில் இருக்கக்கூடிய காலத்தில்… தாய் நல்லதைப் பற்றி
ஏங்கியிருந்தால் நல்ல உணர்வாகக் கருவுக்குள்ளும் சேர்த்து நல்ல உடலாக உருவாக்குகிறது.
ஆனால் நாம் கருவிலே இருக்கப்படும்போது
1.தாய் வேதனையும் துயரமும் அதிகமாக எடுத்திருந்தது என்றால்
2.நம் உடலில் பல நோய்களும்… ஊனமான உடலாக உருவாக்கும் தன்மை கூட வருகின்றது.
ஆகவே நம்முடைய சந்தர்ப்பம்… கருவில் இருக்கும்போது தாய் எடுத்துக் கொண்ட மகிழ்ந்த
நிலை உணர்வுக்குத்தக்க தான் நம்மை நல்ல மனிதனாக உருவாக்கியது… சிந்தித்துச் செயல்படும்
திறனாகவும் பெற்றது.
தாயின் உணர்வால் நாம் நல்லவராகவும் சிந்திக்கும் தன்மையும் பெற்று
இப்பொழுது நல்ல உபதேசங்களைக் கேட்கும் அருளும் கிடைக்கிறது.
1.தாயின் உடலில் கருவாக இருக்கும் பொழுது அத்தகைய நல் உணர்வை எடுத்தவர்கள் தான்
2.அந்த வலுக் கொண்டு இதைக் கேட்கும் சக்தியுடன் இங்கே அமர்ந்திருப்பார்கள்
3.அந்த உணர்வின் தன்மை இருந்தால் தான் கவர முடியும்.
அப்படிப்பட்ட பூர்வ புண்ணியம் இல்லாதவர்கள் உபதேசம் கேட்டுப் பார்ப்பார்கள்.
1.அதிலே தனக்கு வேண்டியதை எதிர்பார்ப்பார்கள்
2.அது இல்லையென்றால் போய்க் கொண்டே இருப்பார்கள்.
அது மட்டுமல்ல…! நல்ல உணர்வு பெற வேண்டுமென்ற தாய் எடுத்த உணர்வின் தன்மையே
உங்களை இங்கு அமர்ந்து இதைக் கேட்கும்படி செய்கிறது.
1.எத்தனை தொல்லைகள் இருப்பினும்
2.எத்தனை துயரங்கள் இருப்பினும்
3.இந்த அருள் உணர்வை நீங்கள் பெறும் தகுதி ஏற்படுத்துவது உங்கள் தாயே.
ஆகவே உங்கள் தாயை நீங்கள் கடவுளாகவும் தெய்வமாகவும் மதித்துப் பழகுதல்
வேண்டும். ஏனென்றால் ஒவ்வொரு நொடியிலும் எத்தகைய இன்னல்கள் வந்தாலும் நம்மை
எத்தனையோ வகையில் நாம் பிறந்த பின் நம்மைக் காத்தருளிய தெய்வம் அது. நமக்கு நல் வழி
காட்டிய குருவும் நம் தாயே.
தாய் கருவில் இருக்கப்படும்போது எடுத்துக் கொண்ட உணர்வே நம்மை
நல்லவனாக்குவதும் கெட்டவனாக்குவதும்…!
ஆகையினால் உங்கள் உயிரைக் கடவுளாக மதித்து உங்கள் தாய் தந்தையர் உயிரைக்
கடவுளாக மதித்து அவர்களைத் தெய்வமாக மதித்து இந்த வாழ்க்கைப் பயணத்தை நீங்கள்
செயல்படுத்துங்கள்.
ஒவ்வொரு சமயமும் உபதேசத்தை உணர்த்தும் பொழுதெல்லாம் நம் குரு காட்டிய அருள்
வழியில் உங்களுக்குள் ஆழப் பதிவு செய்து கொண்டே வருகின்றோம்.
இதை மீண்டும் மீண்டும் நினைவு கொண்டால் அந்த அருளைப் பெறலாம். உங்களுக்குள்
அறியாது புகுந்த இருளைப் போக்கலாம். தெளிந்த மனம் பெறலாம்… தெளிவான வாழ்க்கை
வாழலாம்.