நம் பாட நிலையில் உடலில்லாத
ஆத்மாவுடன் கூடிய ஆவிகளின் நற்செயல்கள் தீமைகள் இவற்றையே பல நிலைகளில் சொல்லி வருகின்றேன்.
1.வாழ்பவரின் நிலையைக்
காட்டிலும்... அவர்களின் எண்ண சக்தியை
2.இவ்வாவிகளின் செயல்தான்
இவ்வுலக நிலையையே நடத்திச் செல்லும் தன்மை கொண்டதாக உள்ளது.
இன்று புனித கங்கை என்ற
நிலையில் காசிக்குச் சென்று நம் பாவங்களைக் கழிக்கப் பல மைல்களுக்கப்பால் இருந்தும்
அப்புண்ணிய நதியில் நீராடி வந்தால் பாவங்கள் குறையும் என்ற எண்ணத்தில் பக்தி கொண்டு
பல கஷ்டங்களுடன் பாவத்தைப் போக்க காசிக்குச் செல்கிறார்கள். அதே போல் இராமேஸ்வரம் என்று
புண்ணிய ஸ்தலத்தையும் நாடி மக்கள் செல்கிறார்கள்.
அக்காசி கோவிலில் உள்ள
அத் தபசு ரிஷியான காசி விஸ்வநாதரின் அருளைப் பெற்றிட அப்புண்ணிய ஸ்தலத்திற்குச் செல்கின்றார்கள்.
ஆனால் அங்கும் நடக்கும்
நிலை என்ன...?
அப்புண்ணிய ஸ்தலத்தில்
வாழும் மக்களின் எண்ணமெல்லாம் புண்ணியாத்மாக்களாக புண்ணிய பூமியாக்கிடவா செயல்கள் நடக்கின்றன...?
பாவத்தைக் கழிக்கும் இடமாக
எண்ணிச் சென்று புண்ணியத்தை வாங்கியா வருகின்றார்கள்...? கொலையும் கொள்ளையும் மலிந்து
அப்புனித கங்கையில் புனித நீரைக் குருதி நீராக்கிக் கலக்க விட்டுள்ளார்கள்.
பல மைல்களுக்கப்பால் இறந்தோரை
எல்லாம் அவ்வுடல்களை இக்கங்கையில் செலுத்தினால் இறந்தவருக்குப் புண்ணியம் என்ற நிலையில்
இந்நிலையில் கொண்டு வந்து விடுகின்றார்கள்.
பாவத்தின் பிறப்பிடமாக
இன்று உள்ளது புனித கங்கையும் காசியின் திருத்தலமும். அங்கு செயற்கொண்டு இருக்கும்
ஆண்டவனின் அஜ்ஜோதி மகான் இன்றும் அங்கு தான் உள்ளார்.
அனைத்துப் பாவங்களையும்
அவரும் பார்த்துக் கொண்டே தான் உள்ளார். எண்ணத்திற்குகந்த அருளைத்தான் அவர் அளிக்கின்றார்.
பாவத்திற்கு அவர் என்ன செய்ய முடியும்...?
1.பாவத்தின் எண்ணம் கொண்டவன்
அவன் செய்யும் பாவங்களின் அணுவையே மீண்டும் மீண்டும் தன்னுள் ஏற்றிக்கொண்டு
2.எப்பாவத்திற்கும் துணிந்தவனாகப்
பல பாவங்களுக்கு உகந்தவனாகத் தன்னை ஏற்படுத்திக் கொண்டு
3.அப்புண்ணியக் கரையிலேயே
பலர் இன்று வாழ்கிறார்கள்.
ஏன் அவ்வாண்டவன் இவர்களுக்கு
நல்வழி புகட்டக் கூடாதா...? என்று கேட்பவர் பலர். ஆண்டவன் நிலையையும் ஆவியின் நிலையையும்தான்
நாம் பிரித்துப் பிரித்துப் பல நிலைகளில் சொல்லியுள்ளோம்.
1.எண்ணத்தின் பேய்க்கு
அடிமைப்பட்டவனை எவ்வாண்டவனும் வந்து நல்வழியில் செலுத்திட முடியாது
2.அவன் உடலைவிட்டு ஆத்மா
பிரிந்து சென்ற பிறகு
3.அவ்வாத்மாவின் நிலை அடையும்
அதிகாட்டத்திலிருந்துதான் அவன் உணர்ந்திட முடியும்.
அந்நிலையில் வாழ்ந்தவனுக்கு
உணரும் தன்மையும் உடலைவிட்டு ஆத்மா பிரிந்த பிறகும் அறிந்திட முடியாது. நரகலோகம் என்னும்
அதி அவஸ்தை கொண்ட அழுகும் ஆவியாகத்தான் மிகவும் அல்லல்பட்டுச் சுற்றிக் கொண்டே இருக்க
முடியும்.
அவ்வாவி பிறப்பெடுத்தாலும்
நாயாகவும் அதற்கும் ஈன நிலையில் உள்ள மற்ற ஜெந்துக்களின் நிலைக்குத்தான் வந்திட முடியும்.
வாழும் காலத்தில் வாழ்க்கையின்
சுகம் என்ற நிலையில் பல சுமைகளை ஏற்றிக் கொண்டு வஞ்சகம் குரோதம் ஆத்திரம் வெறி காமம்
இப்படி பல வெறி கொண்ட நிலையை வாழ்க்கையின் சுகமாக எண்ணி வாழ்ந்து என்ன பயன்...?
வாழும் காலம் ஒரு மனிதனுக்கு
60, 70 ஆண்டுகளுக்கு மேல் இருப்பதில்லை. இக் குறுகிய காலத்தின் ஆசைக்குத் தன் ஆத்மாவை
அடிபணிய வைத்து வாழ்கின்றான் இன்றைய மனிதன்.
அழிவில்லா இவ்வாத்மா மனித
வாழ்க்கையில் வாழும் காலம் மிகவும் குறுகிய காலம். என்றுமே அழியாத ஆத்மாவை இம்மனித
உடலில் உள்ள பொழுதினில் மட்டும் தான் கரை சேர்த்து என்றும் அல்லல் இல்லா வாழ்க்கை பெறும்
சூட்சுமம் கொண்ட வாழ்க்கைக்குச் செல்லும் பொக்கிஷம் இம்மனித வாழ்க்கையில்தான் உண்டு.
1.அறியாமல் செய்திடும்
பிழைதான் இன்று வாழும் வாழ்க்கை நிலை
2.கரை சேர்ந்திடும் நிலைக்கு
நம்மை பக்குவப்படுத்தி வாழ வேண்டும் என்ற எண்ணம் பல மனிதர்களுக்கு இல்லை.
அன்று நம் முன்னோர் புண்ணிய
ஸ்தலமாக்கி ஆண்டவன் சக்தி பெற்றுப் பல கோவில்களை அமைத்து நமக்கு வழிகாட்டிட ஏற்படுத்திய
நிலையை எல்லாம் இன்று நாம் நம் வேடிக்கைக்காகவும் உல்லாசப் பயணங்களுக்காகவும் பொழுது
போக்கும் நிலைக்காகவும் நமக்கு உகந்த ஆசைப்படி எல்லாம் ஏற்படுத்தி விட்டோம்.
அதனால் இன்று அந்தப் புண்ணிய
ஸ்தலங்களும் பல புண்ணிய நதிகளும்
1.ஆவிகளின் அட்டுழியங்கள்
நடக்கும் நிலையாக மாறி
2.இன்று புண்ணியம் வாங்கச்
செல்பவர்களின் உடல்களில் எல்லாம் பல உடல்களில் ஏறிக்கொள்கின்றன.
3.அடங்கா ஆசையுடன் உள்ள
ஆவிகள்தான் உடல்களில் ஏறிக்கொள்கின்றன.
4.தன் ஆகைக்குகந்த செயல்களையும்
நடத்துகின்றன.
தன் செயலின் நிலை ஈடுபடுத்தாவிட்டாலும்
அவ்வுடலில் இருந்து வெளிவர முடியாத நிலையில் பல உடல்களை இவ்வாவிகளினால் அவ்வாவிகளின்
உந்தலுக்கு உட்படுத்திவிட்டன.
1.நாம் செல்வது புண்ணியம்
வாங்க...
2.அப்புண்ணிய ஸ்தலத்தில்
உள்ள இவ்வெண்ண மூச்சுக்கள் எல்லாம் நாம் சென்றதும் நம் எண்ணத்தில் கலந்து (நம் சுவாசத்தில்)
3.நம்மையே நம் செயலில்
செயல்படாத நிலை ஏற்டுத்தி விடுகின்றன.
புண்ணிய ஸ்தலத்திற்குச்
சென்று “பாவ மூட்டையைத்தான் சுமந்து வருகின்றோம்...!” இன்றைய நிலை இது தான்...!