ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 8, 2020

நம்மை ஞானியாக்கும் சக்தி…!


இன்று விஞ்ஞான அறிவுப்படி எலெக்ட்ரிக் எலெக்ட்ரான் என்று காட்டுகின்றார்கள். அந்த விஞ்ஞான அறிவுப்படியே மெய் ஞான அறிவையும் உங்களுக்கு ஊட்டுகின்றோம்.

நம் உயிர் எலெக்ட்ரிக்கை உருவாக்குகின்றது… சூரியனும் எலெக்ட்ரிக்கை உருவாக்குகின்றது.
1.அதன் (சூரியன்) இயக்கச் சக்தியினுடைய நிலைகள் அது பூமியில் படரப்படும் போது
2.இந்தப் பூமியில் விளைந்த உணர்வின் சக்தியை அது எதைக் கவர்ந்ததோ
3.அதை எல்லாம் எலெக்ட்ரானிக்காக மாற்றுகின்றது.

அதே போல் மனிதனாக இருக்கும் நம் மனித உடலிலிருந்து வெளிப்படும் உணர்வினை இதே சூரியனின் காந்த சக்தி கவர்ந்தால்
1.இந்த மனித உடலில் உருவான அந்த உணர்வின் உணர்ச்சிகளை இயக்கும்
2.அதாவது சூரியனின் காந்தப் புலனறிவு கவர்ந்தால் அதை எலெக்ட்ரானிக்காக மாற்றுகின்றது
3.அதன் உணர்வின் இயக்கமாக மாற்றுகின்றது.
4.(அதை நாம் நுகர்ந்தால் உணர்ச்சிகளாக இயக்கும்)

இப்பொழுது நான் (ஞானகுரு) பேசுகின்றேன் என்று வைத்துக் கொள்வோம். இந்தப் பேசிய உணர்வுகளைச் சூரியனின் காந்தப் புலனறிவு கவர்ந்தால் இது எலெக்ட்ரானிக்காக மாறுகின்றது.

படிக்காதவன் தான்…. நான் இதைச் சொல்கிறேன். ஆக… சாமி சொல்வது புரியவில்லை என்று விட்டுவிடாதீர்கள்.
1.ஏனென்றால் பதிவின் நினைவு எதுவோ
2.அது அந்த நினைவின் நிலையைக் கவர்கின்றது.
3.அதன் உணர்வின் இயக்கமாக நம்மை மாற்றுகின்றது.

உதாரணமாக சிறு குழந்தைப் பருவத்தில் குழந்தைகள் படித்ததில்லை. ஆனால் ரேடியோவையும் டி.வி.யையும் உற்றுப் பார்க்கின்றது. அதிலே வரும் இசையைக் (பாடலை) கவர்ந்து கொண்ட பின் இந்த உடலில் அந்த உணர்வுகளுக்கொப்ப அந்தக் குழந்தை ஆட்டங்கள் ஆடுகின்றது.

1.அதற்கு ஒன்று,மே தெரியவில்லை என்றாலும்
2.பாடநிலை இல்லை என்றாலும் - சிறிதளவே பதியச் செய்த பின்
3.அது பேசத் தொடரும் போது இந்தப் பாடலை எளிதாகப் பாடுகின்றது.

இது குழந்தைப் பருவத்திலே...!

ஆனால் பெரியவர்களாக இருப்போர்கள் நாம் பல விதமான உணர்வுகளை மாற்றிக் கொள்கின்றோம். பல உணர்வுகள் நமக்குள் கலக்கும் போது சிந்திக்கும் தன்மை இழந்து விடுகின்றோம்.

குழந்தைப் பருவத்தில் அத்தகைய நிலை இல்லை. குறுகிய உணர்வுகளும்… பார்த்துணர்ந்த உணர்வுகளும் பதிவாக்கிக் கொள்ளும் போது அதனுடைய சிந்தனை அதன் வழியில் செல்லப்படும் போது அதை இயக்கும் சக்தி பெறுகின்றது.

பெரியவர்களாக இருக்கும் நாம் அதைக் காண முடியவில்லை.

இதை எதற்குச் சொல்கிறோம் என்றால் எம்முடைய உபதேச உணர்வுகளை (எலெக்ட்ரானிக்) நீங்கள் குழந்தைகள் பதிவாக்குவது போல் பதிய வைத்துக் கொண்டால்
1.ஞானிகள் கண்ட அறிவின் ஞானம் அனைத்தும் உங்களுக்குள் தோன்றும்.
2.ஞானிகளின் உணர்வின் இயக்கமாக நீங்கள் செயல்படுவீர்கள்.
3.அவர்கள் தீமையை நீக்கிய அந்த ஆற்றல்களை நீங்களும் பெறுவீர்கள்.

உங்கள் உணர்வுகளை எல்லாம் நீங்கள் ஒளியாக மாற்ற முடியும் என்பதற்கே இதைச் சொல்கிறேன் (ஞானகுரு).