ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 26, 2020

“நல்ல நேரம்…” என்று ஒன்றை ஞானிகள் வைத்ததன் நோக்கம்


எத்தனையோ பேருடன் எத்தனை விதமாக நாம் பழகுகின்றோம்.

வியாபாரத்திற்கோ மற்றதுக்கோ போகும்போது அந்த நேரத்திலே நமக்கு வேண்டாதவன் வந்து விட்டான் என்றால் அவனைப் பார்த்துவிட்டுப் போனால் அந்த காரியமே தோல்வியாகும்…! என்று எண்ணுவோம்.

அதே சமயத்தில் வீட்டை விட்டுப் போகும்போது சாங்கிய சாஸ்திரத்தை எல்லாம் பார்ப்போம்.

உதாரணமாக இரண்டு மணிக்கு நல்ல நேரம் இருக்கிறது. அந்த நேரத்தில் நல்ல காரியத்தை ஜெயித்து விட்டு வரலாம் என்று செயல்படுத்துவோம்.

1.ஏனென்றால் நம் மனதை நல்ல வழியில் மாற்றுவதற்கு இப்படி ஒரு சாஸ்திரத்தை எழுதி வைத்திருக்கின்றார்கள்.
2.அதன்படி நல்லதை முழுமையாக நினைக்கின்றோமா என்றால் இல்லை…?

கல்யாணத்திற்குப் பொண்ணு பார்க்கின்ற காரியத்திற்கோ அல்லது புதிதாக ஒரு தொழில் தொடங்கப் போகும் போதோ நல்ல நேரத்தைப் பார்ப்போம்.

அந்த நல்ல நேரத்தில் மற்றவர்களையும் வாருங்கள் போகலாம்…! என்று அழைத்துச் செல்வோம்.

ஏனென்றால் அதற்கு முன்னாடி ஏதேதோ சங்கடங்கள் சலிப்புகள் எல்லாம் பேசிக் கொண்டிருப்போம். அவன் அப்படிச் செய்தான் இவன் இப்படிச் செய்தான்…! என்ற உணர்வுகள் எல்லாம் நமக்குள் இருக்கும்.

1.இதை மாற்றுவதற்காக வேண்டி அந்த இரண்டு மணிக்கு நல்ல நேரம் வந்துவிட்டது என்று
2.நம் தீமைகளை எல்லாம் மறந்து நல்லதை எடுக்கும்படி செய்கிறார்கள்.
3.ஆக… தத்துவ ரீதியில் மனிதனை இப்படியெல்லாம் நல்ல வழிக்கு மாற்ற வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தை
4.அங்கே நமக்குக் கொடுக்கின்றார்கள் ஞானிகள்.

ஆனால் போகும் பொழுது அந்தப் பாதையில் எதிர்த்தாற்போல் ஒரு விதவை முக்காடு போட்டு வந்தால் போதும்… “தொலைந்தது போ…!” என்று சொல்வோம்.

இந்த உணர்வை வைத்துக் கொண்டு போனால் நல்லதைச் செயல்படுத்தும் எண்ண வருகிறதா…? முதல் முதலில் கடை திறப்பதற்காகப் போனால் இத்தனை சாங்கியம் பார்த்துவிட்டுத் தான் போகின்றார்கள்.

இப்படி ஒரு விதவை முன்னாடி வந்துவிட்டால் நம்மை அறியாதபடி தொலையும் உணர்வை எடுத்துக் கொள்கிறோம். பின் கடைக்குப் போனவுடன் என்ன செய்கின்றது…?

கடையைப் போய்த் திறப்பார்கள். அந்த மனதோடு கடை வைத்து நடத்தினால் என்ன ஆகும்...?

அடுத்தாற்படி ஒன்று எதிர்பாராதது ஆகிவிட்டது என்றால் “நான் நினைத்தேன் இப்படி ஆகிவிட்டது…! என்ற இந்த எண்ணம் தான் வரும்.

நம்முடன் கூட வந்தவர்கள் என்ன சொல்வார்கள்…?

நான் அன்றைக்கே சொல்லலாம் என்று பார்த்தேன். சகுனம் மாறிவிட்டது என்று சொல்லி அப்பொழுது அவர் கெட்டிக்காரர் ஆகிவிடுன்றார்.

லேசாகச் சொல்வார்கள்… முழுவதும் சொல்ல மாட்டார்கள். ஏதோ குறுக்கே போனது பார்த்துச் செய்யலாம்…! என்ற இந்த நினைவை ஊட்டி விட்டுவிடுவார்கள்.

அவர் சொன்னதும் இந்த உணர்வுடன் கடை வைத்தால் என்னாகுமோ ஏதாகுமோ..? என்று அதே ஞாபகம் தான் வரும். கடை திறக்கும் போதே இப்படித் தான் இருந்தது... அதனால் இன்றைக்கும் இப்படி விரயம் ஆகின்றது என்று தொடர்ந்து வரும்.

ஏனென்றால் நாம் எந்த உணர்வை எண்ணுகின்றோமோ “அது தான் நம்மை இப்படி எல்லாம் ஆட்சி புரிகின்றது…!” என்பதை மறந்து விட்டோம்.

1.ஆட்சி புரியச் செய்வது யார்…? இதே உயிர் தான்.
2.உணர்த்துவதும் அவன் தான்… இயக்குவதும் அவன் தான்.
3.நம்மை வளர்ப்பதும் அவன் தான்… நம்மை உருவாக்குவதும் அவனே தான்.

நம் உயிரான ஈசன் தான்….!