பக்தி எது என்று முழுமையாக உணராது அஞ்ஞான வாழ்க்கையே வாழ்கின்றோம். ஆன்மீக
வாழ்க்கை என்றாலும் இன்று அந்த ஆன்மீகமும் அரசியல் வாழ்க்கையாகவே மாறிக் கொண்டு
வருகின்றது.
ஒருவன் ஒரு ஆன்மீகத்தைப் பற்றிப் பேசினால் மற்றவர் ஒன்னொன்றைச் சொல்ல அதற்கும்
இதற்கும் கலக்கம் உண்டாகின்றது.
மெய் ஞானிகள் காட்டிய அருள் வழிகளைக் காலத்தால் அரசர்கள் கைப்பற்றிக் கொண்டு
அதை எல்லாம் அவர்களுக்குகந்ததாக மாற்றி விட்டனர்.
உதாரணமாக நம் ஊரிலே ஒரு நல்ல பேச்சாளி இருக்கின்றார். அதே போல் ஒரு போக்கிரியும்
இங்கே இருக்கிறான் என்றால் திறமைசாலியான பேச்சாளியாக இருப்பினும் இந்தப்
போக்கிரியைக் கண்டு அஞ்சித் தான் இருக்க வேண்டும்… அவனுக்கு ஒடுங்கித் தான் பேச
முடியும்.
1.இதைப் போன்ற போக்கிரியாக இருந்தவர்கள் தான் அன்றைய அரசர்கள்...
2.இன்று வரையிலும் அப்படித்தான் உள்ளது
3.அவனை எதிர்ப்போரை வீழ்த்துவதுதான் நியாயம் தர்மம் என்ற நிலைகள் அரசனுடைய
வாழ்க்கை.
அன்றைய அரசன்… தான் வாழ தனக்கென்ற ஒரு மதத்தை உருவாக்குகின்றான். அவன்
இயற்றும் சட்டத்தை அவனை அணுகிய மக்கள் அதை அதைப் பதிவாக்கினால் அந்தப் பதிவே கடவுளாகின்றது.
1.அவர்கள் இட்ட சட்டத்திற்கு மாறாக நடந்தால்
2.இது தெய்வத்தின் குற்றம் அல்லது ஆண்டவனின் குற்றம் என்று சட்டங்களை
இயற்றப்பட்டு
3.அரசன் காட்டிய நெறிகளுக்கு மாறாக நடந்தால் அவனுக்கு மரண தண்டனை கொடுத்தனர்.
இப்படித் தான் ஞானிகள் அல்லது மகரிஷிகள் அவர்கள் கண்டுணர்ந்த உண்மையின் உணர்வுகளை
மக்களுக்குக் கிடைக்காது தடைப்படுத்தித் தன் சுயநலங்களுக்குக் கொண்டு சென்று
விட்டனர்.
இன்றைக்கும் பார்க்கலாம்.. “வள்ளுவன் குறள் வையகமெல்லாம் ஓங்கி வளர வேண்டும்…”
என்று சொல்வார்கள்.
ஆனால் திருவள்ளுவர் செய்த காரியம்…
1.அரசர்கள் தன்னாட்சியாக செயல்படும் நிலைகளில் இருந்து மீட்டிட
2.மனிதன் மனிதனை எப்படி மதிக்க வேண்டுமென்ற நிலையைத் தெளிவாக்கினார்.
“அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு…” என்ற பாடலைப் பாடியுள்ளார்.
ஏனென்றால் அனைத்திற்கும் மூலமாக… முதலாக உள்ளது… இவ்வுயிரே தான் காரணம்…!
என்ற நிலைகளில் அவர் அந்தப் பாடலின் மூலம் பதிவாக்கினார்.
இதை எல்லாம் அவர் அன்றே சொல்லியிருந்தாலும் அன்றைய அரசர்கள் சட்டப்படி இப்படிச்
சொல்வோரைக் குற்றவாளி என்றே பறைசாற்றும் நிலைகள் வருகின்றது.
ஞானிகள் கொடுத்தது எல்லாம் இப்படித்தான் மாற்றப்பட்டது. மாற்றப்பட்ட
நிலைகள் கொண்டு தான் நாம் இன்று நல்லதைத் தேடிக் கொண்டே உள்ளோம்.
இதை எல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கே மாமகரிஷி ஈஸ்வராய
குருதேவர் உணர்த்திய உண்மைகளை உணர்த்துகின்றோம்.