
காட்டுவாசிகளுக்கு மத்தியில் எமக்கு ஏற்பட்ட அனுபவம்
ஒரு சமயம் யாம் அஸ்ஸாம் பகுதிக்குச் சென்றிருந்தோம். அப்பொழுது அங்கே வசிக்கக்கூடிய மலை வாழ் மக்கள் எம்மைப் பிடித்துக் கொண்டார்கள்.
1.மலைப் பகுதியில் வாழும் மக்களின் மத்தியில் என்ன நடைபெறுகிறது…? என்பதை
2.யாம் தெரிந்து கொள்ளும் பொருட்டு அவசியம் நீ அங்கு செல்லத்தான் வேண்டும் என்று குருநாதர் கூறிவிட்டார்.
அந்தக் காடோ யானைகளும் காண்டா மிருகங்களும் மற்றும் பல்வேறு விலங்குகளும் வாழும் அடர்ந்த
பகுதி. குருநாதர் கொடுத்த உபாயத்தின் பேரில் யாம் அங்கே சென்று மலைவாழ் மக்களிடம் பிடிபட்டு அவர்கள் இழுத்துச் சென்ற பகுதிக்குச் சென்றோம்.
அங்கே அவர்கள் எம்மை
ஒரு மரத்தோடு கட்டிப் போட்டார்கள். உண்பதற்கு ஆகாரம் கொடுத்தார்கள். அங்கே காளி
கோவில் மாதிரி ஒரு கோவிலை வைத்திருக்கிறார்கள். அதற்கு
முன்னால் அந்த மலைவாழ் மக்கள் ஆட்டமும் பாட்டமுமாக
இருந்து கொண்டிருந்தார்கள்.
இதையெல்லாம் கவனிக்கும்படி குருநாதர் கூறினார்.
ஆட்டமும் பாட்டமுமாக இருந்த அந்தக் கூட்டத்தில் தலைவனாக இருந்த பூசாரி பாடிக் கொண்டே வந்து எம் மீது பல இடங்களில் ஊசியால் குத்தினார்.
ஆ…! என்று அலறினோம். அந்த சமயம் சில மந்திரங்களைச் சொல்கிறார்கள். அவைகளை எமக்குள் பதியும்படிச்
செய்தனர். இவ்வாறு சில நாட்கள் அதே இடத்தில் கட்டி வைத்திருந்து மந்திர ஒலிகளைக் கொஞ்சம் கொஞ்சமாக எம்முள் பதியச் செய்து குறிப்பிட்ட காலம் வந்ததும் எம்மைப் பலியிடக் காத்திருந்தனர்.
இதனின் நிலைகளை எல்லாம் குருநாதர் காண்பித்து குறிப்பிட்ட நாள் வந்ததும் உன்னைப் பலியிடுவார்கள். உன் ஆத்மாவைப்
பிரித்தெடுத்துக் கைவல்யப்படுத்திக் கொள்வார்கள்.
பின் உனது உடலைத்
துண்டு துண்டாக வெட்டித் தசைகளைத் தாங்கள் வெள்ளாமை செய்யும் பகுதிகளில்
வீசிவிடுவார்கள். மேலும் உனது தசைகளைக் கோவிலில்
பொங்கலிடுவார்கள் என்று குருநாதர் எமக்கு உணர்த்தினார்.
இவைகளெல்லாம் யாம் குருநாதர் அருள் துணை கொண்டு அனுபவப் பூர்வமாக உணர்ந்து கொண்ட உண்மைகள்.
மனிதரைப் பலியிட்டு அவர்களது ஆன்மாவைக் கைவல்யப்படுத்தி மந்திர ஒலிகளின் துணை கொண்டு தங்களைத்
தற்காத்துக் கொள்ளும் விதமாக அந்த ஆன்மாவை எப்படிப் பயன்படுத்துவர்…? என்பதை அந்த இரவில் யாம் மரத்தில்
கட்டப்பட்டிருக்கும் நிலையில் எமக்குக் குருநாதர் உணர்த்திக்
கொண்டிருந்தார்.
1.இன்று பலர் நினைத்துக் கொண்டிருக்கலாம். மலைப்
பகுதிக்குச் சென்றால் அமைதியாகத் தனித்து வாழலாம் என்று.
2.ஆனால் சில மலைப்
பகுதிகளுக்குச் சென்றால் எவ்வளவு பெரிய ஆபத்து இருகிறது…? என்பதையும் உணர்த்துகிறார்.
3.இறுதியில் யாம் குருநாதர் எமக்குக் கொடுத்த சக்தியின் துணை கொண்டு வெளியே வந்தோம்.
பின் இதே
மந்திரத்தின் நிலைகளை நகரப் பகுதியில் எப்படி உருவாக்குகின்றார்கள்…? என்ற நிலையைத்
தெளிவாக உபதேசித்தார்.
இதைப் போன்ற நிலைகள் நமது நாட்டில் மட்டும்தான் என்றில்லாமல் உலக நாடுகள் அனைத்திலுமே இதன்
நிலைகள்தான் இருந்தன. எகிப்து ஈரான் ஈராக் மற்றும் ரோமன் நாடுகள் பற்றியும் அங்கு நடைபெறும் நிலைகளையும் நமது குருநாதர்
எமக்குக் கூறினார்.