ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 18, 2020

குரு காட்டிய நெறியை வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும் – நடந்த நிகழ்ச்சிகள்


அன்று எஸ்.எஸ்.எம். இருக்கும் போது உட்லண்ட்ஸ் ஓட்டலில் ஒரு ஆன்மீகம் பற்றி விளம்பரம் செய்தார், பத்திரிக்கை நிருபர்கள் எல்லோரையும் கொண்டு வந்துவிட்டார்.

ஆன்மீகத்தில் உள்ள பெரிய பெரிய ஆள்களையும் அங்கே கூட்டிக் கொண்டு வந்து விட்டார்.

சாமி… நீங்கள் சும்மா இருங்கள்… எல்லாவற்றுக்கும் விடை அளிக்கிற மாதிரி மட்டும் எனக்குக் கொஞ்சம் சொல்லிக் கொடுத்து விடுங்கள்…! என்றார்.

தன்னைப் பெரிய மனிதனாகக் காட்டுவதற்காக வேண்டி என்னிடம் இப்படிச் சொல்கிறார். நான் பேசாமல் “கம்…” என்று உட்கார்ந்து விட்டேன்.

வந்தவர்கள் என்ன கேட்பார்கள்…? எப்படிக் கேட்பார்கள்…! என்று யாருக்குத் தெரியும்…? அவர்கள் கேட்பதற்கெல்லாம் இவரால் (எஸ்.எஸ்.எம்.) ஒன்றும் பதில் சொல்ல முடியவில்லை.

நான் தான் எல்லாம் சொல்லிக் கொடுத்திருக்கிறேன் அல்லவா.. சொல்லுங்கள்...! என்றேன்.

நீங்கள் சொல்லிக் கொடுத்ததைக் கேட்கவில்லை... வேறு ஏதோ கேட்கிறான். இதற்கு என்ன பதில்...? என்று கேட்கிறார்.

நீங்களே சொல்லுங்கள்... உங்களுக்கு விடை வரும்...! என்றேன்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு பெரியவர் தொண்ணூறு வயதுக்காரர் கேள்வி கேட்க ஆரம்பித்தார். பதில் அவரால் (எஸ்.எஸ்.எம்.) சொல்ல முடியவில்லை.

அதே சமயம் என்னைப் பார்த்ததும் சாதாரணமாக நினைத்து விட்டார். அப்புறம் அவரிடம் (தொண்ணூறு வயதுக்காரரிடம்) நான் கேட்டேன். கிரேதா யுகம் எது...? திரேதா யுகம் எது...? துவாபர யுகம் எது..? கலியுகம் எது...? கல்கி யுகம் எது...?

அது நாலாயிரம் ஆண்டு… அது ஐயாயிரம் ஆண்டு… பத்தாயிரம் ஆண்டு… என்று சொல்லிக் கொண்டே வந்தார்.

இது எல்லாமே உங்களுக்குள் இப்பொழுது நடக்கிறது…! என்றேன்.

1.நீங்கள் கவர்ந்து கொண்ட உடல் (கிரகித்துக் கொண்டது) கிரேதா யுகம்...
2.இந்த உடலுக்குள் திரேதா யுகத்தில் (திரேதா என்றால் சரீரம்) சுவையின் உணர்வுக்கொப்ப (சுவாசித்தது) எண்ணங்கள் வருகிறது...
3.துவாபர யுகத்தில் சாந்தமாக நாம் இருந்தாலும் ஒரு வெறுப்பான உணர்வு வரப்படும் போது அது நம்மை மாற்றுகிறது கலி.
4.அதாவது சாந்தமாக இருந்தாலும் நல்லதைத் தெரிந்து கொள்ளும் நிலையில் விஷம் என்ற நிலைகள் மோதும் போது இருள் சூழ்கிறது. இது கலி யுகம்.

5.இதிலிருந்து மீள வேண்டும் என்று வரும் போது கல்கி யுகம். தீமையை நீக்கக்கூடியது ஆறாவது அறிவு கார்த்திகேயா. இதை வைத்து மீளக்கூடியது கல்கி யுகம்.

உயிர் ஒளியாக இருக்கிறது. எத்தனையோ கோடி உடல்களைக் கடந்து மனிதனாக வந்த பிற்பாடு எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளக்கூடியது நம் ஆறாவது அறிவு கார்த்திகேயா.

ஆகவே எல்லாவற்றையும் தெரிந்து கொண்டு தீமை என்று தெரிந்து அதை நீக்கி ஒளியாக்கி ஒன்றாகச் சேர்க்கும் போது கல்கி யுகம்.

அப்புறம் ரிக் சாம அதர்வண யஜூர் என்ற நான்கு வேதங்களுக்கும் விளக்கம் கொடுதேன்.

இதை எல்லாம் சொன்னவுடனே அந்தத் தொண்ணூறு வயது பெரியவர் என் காலில் அப்படியே விழுந்து விட்டார்.

உங்கள் பாதம் எனக்குக் கொடுக்க வேண்டும். எனக்கு நீங்கள் ஆசீர்வாதம் கொடுக்க வேண்டும் நான் தெரியாமல் தவறு செய்து விட்டேன்... உங்களைச் சாதாரணமாக நினைத்து விட்டேன்.

நான் படித்த நூல்களில் விளக்கம் தெரிய விரும்பிய அத்தனையும் விளக்கமாகச் சொல்லி விட்டீர்கள். நூல்களில் தெரிந்து கொள்ள முடியவில்லை... ஆனால் உங்கள் மூலமாக இப்பொழுது தெரிந்து கொண்டேன். ஆகையினால் “என்னை மன்னித்தேன்...” என்று சொன்னால் நான் எழுந்திருப்பேன்.

நான் உங்களைப் பரீட்சித்தேன் என்று கோப அலைகள் விட்டதினால் என் மனது துடிக்கின்றது... என்று சொல்லிக் காலில் விழுந்தவர் அவர் எழுந்திருக்கவில்லை.

ஏனென்றால் சாம வேதத்தைப் பற்றி அவருக்கு விளக்கமாகக் கூறி வைத்தியரீதியில் எப்படிப் பயன்படுத்துகின்றார்கள்...? மனிதனுக்குள் எப்படி மாற்றி அமைக்கும் நிலையாக வருகிறது...? என்று எல்லா விளக்கங்களையும் தெளிவாகச் சொன்னேன்.

எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குமோ...? நான் தெரியாமல் தப்பு செய்து விட்டேன்.. ஏனென்றால் அகராதித்தனமாகக் கேட்கிறேன் என்றால் சாபத்திற்கு ஆளாக நேரும். என்னைச் சபித்து விடாதீர்கள் என்றார். ஆக அவர் விஷயம் தெரிந்த ஆள்..! இது அங்கே நடந்த நிகழ்ச்சி.

அதே போல் இங்கே ஆடிட்டர் ஒருவர் செய்தார்.

குரு என்கிற போது அதை மதிக்க வேண்டும். நாம் எல்லோருக்கும் பரந்த மனதுடன் தான் கொடுக்கின்றோம். அதைச் சுயநலத்திற்குப் பயன்படுத்தினால் சரியாகுமா...?

உங்களுக்கு ஞானிகளின் சக்தியைக் கிடைக்கச் செய்வதற்கு உங்களை உயர்த்துவதற்கு எவ்வளவு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். அதிலே நன்மை இருக்கிறது.

ஆனால் இதை ஒரு கருவியாக வைத்து உங்களிடமிருந்து நான் பறித்துச் சாப்பிட ஆரம்பித்தால் குருநாதர் (ஈஸ்வரபட்டர்) எனக்கு அப்படிக் கொடுக்கவில்லையே...!

அவர் (ஆடிட்டர்) அறியாமல் அப்படிச் செயல்பட்டாலும்... மனிதனின் மனங்கள் எப்படியெல்லாம் மாறுகிறது...? என்பதை அனுபவபூர்வமாகத் தெரிந்து கொண்டோம்.

1.இதை நீங்கள் அடுத்தவருக்கு எடுத்துச் சொல்வதற்குப் பயனுள்ளதாக இருக்கும்.
2.அல்லது நம்முடைய மனமே மாறப் போகும் போது... நாம் திரிந்து வாழ இவருடைய செயல் உபயோகமாக இருக்கும்.

தவறுகளில் ஆசை வைத்தால் அது நாம் போகும் ஞானப் பாதையை எப்படித் திசை திருப்பும்...? அன்று எல்லோரும் தெரிந்து கொள்ள இந்த சம்பவம் உதவியாக இருக்கும்.

ஏனென்றால் எல்லாமே சந்தர்ப்பம் தான்...!

அதனால் நான் அவரைக் குற்றமாக எண்ணவில்லை. இனி அது தவறில்லாத நிலை வரட்டும். மற்றவர்களையும் உஷார்படுத்திக் கொள்ளலாம்.

ஏனென்றால் இந்த உடல் ஆசையைக் கூட்டப்படும் போது அந்த நிலை ஆகிவிடும். ஆகவே நம் ஆசை எதுவாக இருக்க வேண்டும்...?

பிறவியில்லா நிலை அடைய வேண்டும் என்ற இந்த ஆசை இருக்க வேண்டும்.