ஒரு செடியிலிருந்து அதன் (மணம்) சத்தை வெளிப்படுத்தினால் சூரியன் கவர்ந்து
அலைகளாக இந்தப் பூமியில் பரவச் செய்கின்றது. அதே செடியை நாம் கண் கொண்டு பார்த்து
அது பற்றித் தெரிய வேண்டும் என்ற உணர்வுடன் நுகர்ந்தால் அந்த மணம் நம் உயிரிலே படுகிறது.
தெரியவில்லை என்றாலும் அதை நுகர்ந்து தெரிந்து கொள்ள ஆசைப்படுகின்றோம்.
1.இதனுடைய குணம் என்ன…?
2.இதனுடைய மணம் என்ன…? இது என்ன செய்யும்…?
3.நம்மை வேதனைப்படுத்துமா…? உடம்புக்கு நல்லதாகுமா…? என்று சிந்திக்கின்றோம்.
செடியின் சத்தைச் சூரியன் கவர்ந்து வைத்திருந்தாலும் அந்தச் செடியின்
வாசனையை நுகர வேண்டுமென்றால் நமது கருவிழி ருக்மணி அந்தச் செடியை நமக்குள் பதிவாக்க
வேண்டும்.
ஏனென்றால்
1.நாம் இயங்குகின்றோமா…? நம்மை மற்றது இயக்குகின்றதா…?
2.அல்லது நாம் ஒன்றைத் தவறு செய்கின்றோமா…?
3.அல்லது நம்மைத் தவறு செய்ய வைக்கின்றதா?
4.அப்படி தவறு செய்ய வைக்கின்றது நமது உயிரா…? நாம் நுகர்ந்த உணர்வா…? நமது
உடலா…? என்பதனை எல்லாம்
5.நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
இது எல்லாம் இந்த இயற்கையின் நியதிகள்.
உதாரணமாக வேப்ப இலை என்று வைத்துக் கொள்வோம். அந்தச் செடியின் சத்தை
நுகர்ந்த பின் ஒரு கசப்பென்ற நிலைகள் வருகின்றது
அந்த உணர்வின் மணங்கள் நம் உயிரிலே பட்டுக் கசப்பின் உணர்ச்சிகளாக நம்
உடலிலே படரும். அப்பொழுது என்ன செய்கின்றது…?
1.அந்த உணர்வுகள் பட்டதும் அந்த உணர்ச்சிகளாக நம்மைத் தூண்டும்
2.ஓய்ய்...ய்ய்ய்…! கசப்பை நுகர்ந்தால் ஓ…ய் என்று உமட்டலாக வரும்
3.அப்போது இயக்குவது யார்..? நாம் நுகர்ந்த உணர்வு இயக்குகின்றது
4.ஆனால் அந்த உணர்வை இயக்கிக் காட்டுவது யார்..? உயிர்
5.அந்த உணர்ச்சிகள் நம் உடலுடன் சேர்த்தவுடனே அதுதான் நம்மை இயக்குகின்றது…
ஆண்டாள்…! (காரணப் பெயர்)
வேப்ப மரத்தைக் கூர்ந்து கண் கொண்டு பார்த்தால் அதைப் பதிவாக்குகின்றது நம் கண்ணின் கருவிழி.
அந்த மரத்திலிருந்து வரக்கூடிய உணர்வு என்ன…? என்று தெரிந்து கொள்ள
ஆசைப்படுகின்றோம். அந்த ஆசையால் அது கவரும் சக்தி பெறுகின்றது.
அப்பொழுது அந்த உணர்வு உயிரிலே படுகின்றது. அது என்ன செடி…? நல்லது
செய்யுமா… கெட்டது செய்யுமா…? என்று நாம் ஆராய்ச்சி செய்வோம்.
வாந்தி வரும்… என்று சொன்னால் அதை நீக்கி விடுகின்றோம்.
ஒருவருக்கு அம்மை வார்த்திருந்தது என்றால் இது விஷத் தாக்குதல். அதற்கு இந்த
வேப்பிலையை முழுதாகப் போட்டு இரண்டு மஞ்சளைப் போட்டுக் கலக்கித் தெளித்தால் உடலில்
அம்மை என்ற அந்த விஷக் கிருமிகளை மாற்றுகின்றது.
ஆனால் அதே வேப்பிலையை நாம் உணவாக உட்கொள்ளும்போது உமட்டல் வருகின்றது… வாந்தியாகி
வெளியே தள்ளுகின்றது.
இருந்தாலும் அந்த வேப்பிலையை அதிகமாகச் சாப்பிட்டால் நம் உடலில் உஷ்ணம்
வருகின்றது அதை அளவுடன் சாப்பிட்டால் அந்த வேப்பிலை நமக்குள் இருக்கும் பல
கசப்பின் உணர்வுகளை நீக்குகின்றது.
1.அதனதன் சந்தர்ப்பத்திற்கு அது வேலை செய்கின்றது
2.இவை எல்லாம் இயற்கையின் நியதிகள்…!