
உன்னைப் பலி கொடுத்து நான் சக்தி பெறப் போகின்றேன் என்றார் குருநாதர்
“கல்கத்தா காளி” என்ற துர்தேவதையின் உணர்வுகளை மந்திரங்களைச்
சொல்லி அதிலிருந்து உணர்வுகள் பெற்றது அரசர்கள் செய்த நிலைகள். இது பற்றிய
உண்மை நிலைகளை உணர்த்திக் கொண்டிருந்த குருநாதர் எம்மைக் கொடைக்கானலின் காட்டுப் பகுதிக்குள் அழைத்துச்சென்றார்.
அங்கேயும் கல்கத்தா காளி கோயிலில் நடக்கும் சம்பவங்களைச் சொன்னதோடு
மட்டுமில்லாமல் அங்கே நடைபெறும் நிகழ்ச்சியைக் காட்சியாகவும்
கண்பித்தார் குருநாதர்.
அது சமயம் ஒரு சக்தியை நன்றாகத் தீட்டிக்கொண்டு கல்கத்தா காளி கோயிலில் எதற்காகப் பலி கொடுக்கின்றார்களோ… அதே போன்று நானும் உன்னைப் பலி கொடுத்துச் சக்தி பெறப் போகிறேன்.
அதற்காகத்தான் நான் உன்னை மயக்கிக் கொண்டுள்ளேன் என்றார் குருநாதர்.
தீட்டிய கத்தியைக் கையில் வைத்துக் கொண்டு
1.குரு எமது கழுத்துச் சங்கைப்
பிடித்து “இந்தக் கத்தியால் இப்படிக் குத்தி உன் இரத்தம் அனைத்தையும் வடித்து
2.இங்கேயிருந்து காளி கோயிலுக்கு
அனுப்பிவிட்டு உன் உயிரை நான் எடுத்து மந்திரவாதி ஆகப்போகிறேன் என்று கூறினார்.
எப்படியிருக்கும் எமக்கு…?
நான் சொன்னபடி கேள்…! என்று எம்மை
மிரட்டியவாறு சொன்னார்.
அப்போது யாம் சொன்னோம்
1.யாம் நீங்கள் சொல்வதை ஏற்றுக்
கொள்கிறோம்… ஏனென்றால் உங்களைப் பற்றிய அனைத்து உண்மையும்
தெரிந்து விட்டது.
2.நீங்கள் எதைச் செய்தாலும் சரி என் மனைவியைக் குணப்படுத்தினீர்கள்… உங்கள் பிள்ளைகளை நீங்கள் காப்பாற்றிக் கொள்ளுங்கள் என்று கூறினோம்.
குருநாதர் உடனே சிரிக்க ஆரம்பித்தார்.
சிரித்ததோடு மட்டுமல்லாமல் கையில் ஆயிரம் ரூபாய் கொடுத்து எங்கேயும் நிற்காமல் ஓடி இரயில்வே ஸ்டேஷனுக்குப் போய்க் கல்கத்தாவிற்கு டிக்கெட் வாங்கு என்றார்.
இரயில்வே ஸ்டேஷனுக்குச் சென்று எழுதிக் கொடுத்து டிக்கெட் வாங்கினோம். அங்கிருந்து கல்கத்தா
செல்வதற்கு நேரடி வசதி இல்லாததால் மாற்று ஏற்பாட்டுடன் எழுதிக்
கொடுத்தார்கள். யாம் டிக்கெட் வாங்கிக் கொண்டு திரும்பும் வரையிலும் குருநாதர் அங்கேயே இருந்தார்.
யாம் இரயில் டிக்கெட்டைக் குருநாதரின் கையில்
கொடுத்தோம்.
1.டிக்கெட்டைத் தம் கையில் வாங்கிக் கொண்ட குருநாதர் எம்மைக் கட்டி அணைத்தார்.
2.அடுத்த நிமிடம் குருதேவரும் யாமும் கல்கத்தாவில் இருந்தோம்.
3.குருதேவர் சூட்சும நிலையில் எம்மைக் கல்கத்தாவிற்கு அழைத்துச் சென்றார்.
கல்கத்தா அழைத்துச் சென்ற குருநாதர் அங்கே தாம் ஓட்டல் கடை வைத்து நடத்திய இடத்தையெல்லாம்
காண்பித்தார். கல்கத்தாவில் காளி கோவிலில் என்னென்ன நடக்கின்றது…? என்பதையெல்லாம்
காண்பித்தார்.
காளி ஆலயம் மூடியிருந்தது. அந்த நேரத்தில் சூட்சம நிலையில் உள்ளுக்குள் அழைத்துச் சென்றார். அங்கும் சில
விஷயங்களைக் காண்பித்தார்.
அப்பொழுது இராமகிருஷ்ண பரமகம்சரின் வாழ்க்கையில்
உள்ள உண்மைகளைக் கூறினார். இராமகிருஷ்ண பரமகம்சர் பிராமணர் படிப்பறிவில்லாதவர்… காளி கோவிலில் பூஜைகள்
செய்து கொண்டிருந்தவர்.
அவர் காளியைப் பற்றி
நிறையத் தெரிந்து கொண்டார். தெரிந்து கொண்ட உண்மையின் தன்மை கொண்டு காளி கோவிலில் பூஜை செய்து வந்தார்.
வருடத்தில் ஒரு அமாவாசை நாளன்று காளி கோவிலில் நரபலி கொடுப்பார்கள்.
1.அப்படி நரபலி கொடுக்கப்படும் காலத்தில் ஆலய சப்தங்கள் எப்படி இருக்கின்றது…?
2.காளித் தாய் இதற்கெல்லாம் அனுமதி கொடுக்கிறாளே…! என்று சொல்லி அவருக்குள் பாசத்தால் தான் ஏங்கி எடுக்கின்றார்.
அது போன்ற காலத்தில் ஆலய நிர்வாகிகள் ஒரு மந்திரவாதியிடம் அதற்கென்ற நிலைகளைப் பதிவாக்கிப் பூஜைகளை நடத்துகின்றனர். மந்திரவாதி
என்ற நிலைகள் வரப்படும் பொழுது அவருக்கு மயக்க நிலை கொடுத்து அவரின் உணர்வின் தன்மையை அதற்குண்டான முறையில் பலி கொடுக்கின்றனர்.
அந்த மந்திரவாதி பல ஜோசியங்களைக் கற்றுக் கொண்டவர். பல அற்புதங்களைக் கற்றுக்
கொண்டவர். பல உணர்வுகளை மந்திரத்தால் அறியும் தன்மை
பெற்றவர்.
இப்படிப்பட்ட இந்த ஆன்மா… “ஆலயத்தில் இது போன்ற
தவறுகளைச் செய்கின்றனரே…” என்று எண்ணிய இராமகிருஷ்ண பரமகம்சரின் உடலில்
புகுந்து கொண்டது.
இப்படிப் புகுந்து கொண்ட பின் தான் இராமகிருஷ்ண பரமகம்சர் பித்தரைப் போன்று ஆனது,
இதன் தொடர் கொண்டுதான் அவர் (மந்திரவாதி) தன் உடலில் வாழும் காலத்தில் என்னென்ன
அற்புதங்களைச் செய்தாரோ அதைப் போன்ற நிலையை இராமகிருஷ்ண பரமகம்சரின் உடலிலிருந்தும் பல அற்புதங்களை
நடத்துகின்றார்.
அதாவது கோவில்களில்
பூஜை செய்வதை விடுத்து இறந்த மனிதர்களைப் புதைக்கும்
இடங்களில் சென்று அமர்வதும் அந்த உடல்களிலிருந்து வரக்கூடிய
மணங்களை நுகர்வதும் அவர்கள் எப்படி இறந்தார்…? என்ற நிலைகளிலும் இராமகிருஷ்ண பரமகம்சர் செயல்பட்டு வந்தார்.
இராமகிருஷ்ண பரமகம்சர் கங்கை ஆற்றின் வழியில் செல்லும் போது, அரிச்சந்திரா
காட் கேதார் காட் என்ற நிலை உண்டு. அதற்கென்று காவலாளி என்னும் அரசனும் உண்டு. ஊரிலிருந்து புதைக்கக் கொண்டு செல்லப்படும் பிரேதங்களை அந்த அரசனிடம் ஒப்படைத்து அவருக்கு வேண்டிய காணிக்கைச் செலுத்திய பின் தான் எரிப்பார்கள்.
இப்படி எரிக்கப்படும் காலங்களில் தான் இராமகிருஷ்ண பரமகம்சர் படகில்
செல்கின்றார். இப்படிப் படகில் சென்று கொண்டிருக்கும் பொழுது சுடுகாட்டில் பிணங்கள் வெந்து கொண்டிருப்பதைப் பார்த்து ஆழ்நிலைத் தியானத்திற்குச் சென்றார்.
இப்படி அமர்ந்தபின் அவருடன் படகில் சென்றவர்கள் பரமகம்சர் ஆழ்நிலைத் தியானத்தில்
அமர்ந்துவிட்டாரே… எங்கு சென்றார்…? ஏது சென்றார்…? என்ற நிலை
தெரியாமல் இருந்தனர்.
சில மணி நேரம் கழித்து இராமகிருஷ்ண பரமகம்சர் சமாதி நிலையிலிருந்து விடுபட்டதும் அவருடைய சீடர்கள் அவரைப் பார்த்து “என்ன சாமி பார்த்தீர்கள்...?” என்று
கேட்டார்கள்.
அதற்கு இராமகிருஷ்ண பரமகம்சர்… அங்கே நான் சிவனையும், சக்தியையும் பார்த்தேன். என்ன
ஆனந்தமாக இருந்தது…? என்று அவர் சொன்னார்.
அவர் பார்த்தது எது…?
1.உடல் சிவம் உடல் வெந்தபின் உடலுக்குள் சேர்த்துக் கொண்ட
உணர்வலைகள் எப்படி வெளிப்படுகின்றது…?
2.சக்தியாக நுகர்ந்த உணர்வு சிவமாக எப்படி ஆனது…?
3.இப்பொழுது சிவமான நிலைகள் கரைந்து அது சக்தியாக எப்படி
வெளிப்படுகின்றது…? என்பதைத்தான் இராமகிருஷ்ண பரமகம்சர் கூறினார்.
ஆனால் இதற்கு மாறாக சிவனையும் சக்தியையும் பார்த்தார் என்று எழுத்து வடிவில் கொண்டு வருகின்றனர் என்று குருநாதர் தெளிவாகக்
காண்பித்தார்.
நமது மெய் ஞானியான குருநாதர் இயற்கையின் இயக்கத்தின் உண்மையின் உணர்வினை எமக்குள் பாய்ச்சிப் பரமகம்சரைப் பற்றிய உண்மைகளை உணர்ந்து
கொள்ளும்படிச் செய்தார்.
அப்பொழுதுதான்
1.இராமகிருஷ்ண பரமகம்சர் பார்த்த
உணர்வும்… அவருடைய உடலில் நுகர்ந்த உணர்வும்
2.அங்கே “கேள்வி பதில்…” (சம்பாஷணை) என்ற நிலைகளில் வெளிப்பட்ட உணர்வுகளும்
3.சூரியனால் சூரியனால் கவரப்பட்டு இப்புவியில் பரவியுள்ள நிலைகளை நீ உற்றுப்
பார்…!
4.உணர்வின் அறிவு உனக்குத் தெரியும்… அவரின் உடலும் தெரியும்.
5.அவருடைய சம்பாஷணைகளும் தெரியும் என்று உணர்த்தினார் குருநாதர்..
ஆனால் இதைப் போன்று
நீ தெரிந்து கொண்டு இதன் வழியில் நீ அதிகமாக நாட்டம்
செலுத்தினால் அவர்களின் உடல்களில் உள்ள சில தீமையின் உணர்வுகள் உனது இரத்தத்தில் கலந்துவிடும்.
1.இதன் நிலை உன்னில் அதிகமாக்கப்படும் பொழுது நீ
பித்தனாக வேண்டிய நிலை வரும்.
2.இப்படி வரும் தீமைகளைத் தடுப்பது
எங்ஙனம்…? என்று அங்கு பல உபாயங்களைக் காண்பித்தார் குருநாதர்.
இராமகிருஷ்ண பரமகம்சர் தெய்வீகப் பண்புகளைப் பற்றியும் இராமாயணத்தைப் பற்றியும் இராவணனைப் பற்றியும் மகாபாரதத்தைப் பற்றியும் பல வினாக்களுக்குத் தெளிவாகப் பதிலைக்
கூறினார்.
1.காவியங்கள் மனிதரின் உணர்வின் தன்மை கொண்டுதான் வந்ததே தவிர
2.இதைப் போன்ற ரூபங்கள் இல்லை என்று
வாதாடினார்.
3.ஆனால் இந்தக் கருத்தை
ஏற்றுக் கொள்ளும் பண்பு அன்றும் இல்லை.
இராமகிருஷ்ண பரமகம்சர் உபதேசத்தைக் கேட்டவர்கள்
ஏராளமான பேர். ஆனால் அவர் கூறிய உணர்வை மாற்றி வெளியிட்டதும் அவருடைய உணர்வுகளைக் கேட்டறிந்தபின் திரிபுகளாக மற்றவர்களால் உணர்த்தப்பட்டு உண்மையின் உணர்வுகள் மறைக்கப்பட்டு விட்ட்து.
தங்களுக்கு ஏற்றவாறு… பக்தி மார்க்கங்களுக்கு உண்டான ஞானத்தைப் பயன்படுத்தி மதங்களுக்கு இணக்கமாகக் கருத்துக்கள் கலக்கப்பட்டு அவருடைய உண்மையின் உணர்வுகள் வெளியாகப்பட்டது என்ற உண்மையை எமக்குக் காண்பித்தார் குருநாதர்.
இப்படி இராமகிருஷ்ணர் சுற்றி வரப்படும் பொழுது அவருடன் ஒரு மந்திரவாதியும் வந்தார்.
இராமகிருஷ்ண பரமகம்சர் படிப்பறிவில்லாதவர்… ஆனால் அவர் பல அற்புத வேலைகளைச் செய்கிறார். புராணங்களைப் பற்றிக்
கூறுகிறார். அடிக்கடி மனிதரைப் புதைக்கும் இடங்களுக்கும் எரிக்கும் இடங்களுக்கும் சென்று அங்கு வரும் மணத்தை நுகர்ந்து அதனின் உணர்வு
என்ன…? என்று அறிகின்றார்.
1.அவருக்கு இந்தச் சக்தி எதிலிருந்து வந்தது…? எதனை அறிகின்றார்…? எதனைப் பின்பற்றுகின்றார்…? என்று
2.அவரைச் சூழ்ந்திருந்த பல மந்திரவாதிகள் அறிய முற்பட்டனர்.
மாலை நேரத்தில் இவர் நடந்து வரப்படும் பொழுது இருண்டு விடுகின்றது. இராமகிருஷ்ண பரமகம்சருடன் வந்த ஒருவருக்குக் கல் தடுக்கியது. அப்பொழுது ஐயோ…! இருட்டாகிவிட்டதே விளக்கு இல்லாமல் வந்துவிட்டோமே…!” என்று ஒருவர் சொன்னார்.
இதனால் அவர்களுடன்
வந்த ஒரு மந்திரவாதி ஒருவர் “ஜெய் பவானி…!” என்று தொடையைத்
தட்டினார். சலோ…! என்று சொன்னவுடன் ஒரு வெளிச்சம் முன்னால் சென்றது.
இதன் உணர்வைக் காண்பித்தார் குருநாதர்.
மந்திரவாதி தன் மந்திரத்தின் தன்மை கொண்டு ஆவியை ஏவல்
செய்து அந்த விளக்கை முன் அனுப்பினார். அப்பொழுது இராமகிருஷ்ண பரமகம்சர் சொன்னார்.
நான் இந்த வெளிச்சத்தை விரும்பவில்லை…
1.என் உடலில் அக வெளிச்சமும் இருளை அகற்றி நான் செயல்படும் “முன் சிந்தனை” என்ற
2.இந்த உணர்வு இல்லாது போய்விட்டதே…! என்று சொன்னவுடன் கூட வந்தவர்கள் அனைவரும் சிரித்து
விட்டனர்.
இதனின் உணர்வுகளை அப்படியே பதிவாக்கிக்
காண்பித்தார் குருநாதர். இந்த உணர்வின் ஒலி அலைகள்… பதிவாகியிருந்த அந்தப் பகுதியில் நடந்து செல்லப்படும் பொழுது இதனின் உணர்வின் அதிர்வுகளை நினைவுபடுத்தும் போது அதை எப்படி நீ கவர்ந்து உணர்கின்றாய்…? என்பதைக் காண்பித்தார் குருநாதர்.
இப்படியான நிலையில் அந்த மந்திரவாதி இராமகிருஷ்ண பரமகம்சர் பல பேருக்கு மத்தியில் தன்னை அவமதித்து விட்டாரே என்று ஏவல் செய்தார். எந்த வாயினால்
கூறினாரோ அந்த உணர்வை அடக்க ஏவல் செய்து உணவு உட்கொள்ள முடியாதபடி பல துன்பங்களை இராமகிருஷ்ண பரமகம்சருக்கு உருவாக்கினார் அந்த மந்திரவாதி.
ஆனால் இராமகிருஷ்ண
பரமகம்சருக்கு மந்திரம் தெரியும். உடலில் உள்ள உணர்வுகள் தெரிகின்றது.
உண்மைகளைத் தெரிந்து கொண்டபின்
1.மந்திரவாதி செய்யும் போராட்டத்திற்குத் தான் செல்லாமல்
2.இனி இந்த உடலிலிருந்தே பிறவியில்லா
நிலை அடைய வேண்டுமென்று முழுமை பெற்ற உணர்வுகளை எண்ணினார் இராமகிருஷ்ண பரமகம்சர்
ஆகையினால் பரமகம்சர் மற்றவர்களிடம் உடலின் இச்சைக்கு நாம் செல்ல வேண்டாம்
1.உயிருடன் ஒன்றிய உணர்வுகள் நமக்குள் நிச்சயமாக இருந்தால் போதும்.
2.இந்த உடல் கழியக் கூடியது. இந்தக் கழிவின் நிலைகளுக்கு நாம் ஏன் செல்ல
வேண்டும்…? என்று பல முறை எடுத்துக் கூறியும் கேட்காமல்
3.எத்தனையோ வைத்தியரைக் கொண்டு பரீட்சிக்கப் பார்த்தாலும் அவர் ஏற்றுக் கொள்ளவில்லை.
இருந்தாலும் இராமகிருஷ்ண பரமகம்சர் வாழ வேண்டும் என்ற நிலைகளில் அவரைத்
துன்புறுத்தினர். இராமகிருஷ்ண பரமகம்சர் தவறேதும்
செய்யவில்லை. ஆனால் மந்திரவாதி… பரமகம்சர் தன்னை அவமதித்து விட்டார்
என்று எண்ணி அவர் உணவு கூட உண்ண முடியாதபடி செய்தார்.
இராமகிருஷ்ண பரமகம்சர் நீங்கள் எனக்கு ஒன்றும் இதனாலெல்லாம் நிவர்த்திக்க முடியாது என்று
சொன்னால் யாரும் கேட்கவில்லை.
பரமகம்சர் இறந்தார். ஆனால் அவருக்குக் கேன்சர் என்று தான் மற்றவர்கள் முடிவு செய்தனர். ஆனால் எவ்வாறு ஏவல் செய்தனர்…? என்ற நிலையை எமக்குத் தெளிவாகக் காண்பித்தார் நமது குருநாதர்.