ஒரு வேப்ப மரம் இருக்கின்றதென்றால் அது கசப்பின் உணர்வு கொண்டது. ஆனால் ரோஜாப்பூவோ
துவர்ப்பு உணர்வு கொண்டு நறுமணங்களைக் கூட்டும் உணர்வு கொண்டது.ஆனால் இதைச் சூரியன்
காந்தப்புலன் அறிவு கவர்ந்து அதனதன் அலைகளாகப் படரச் செய்கின்றது.
ஏனென்றால் சூரியனிலிருந்து வெப்பமும் காந்தமும் விஷம் என்ற மூன்று நிலைகள் தான்
வருகிறது. காரணம் பிற மண்டலங்களில் இருந்து கவர்வதை நட்சத்திரங்கள் கவர்ந்து அந்த விஷத்
தன்மையைத் தூசிகளாக மாற்றுகின்றது.
அப்படித் தூசிகளாக மாறி வருவதை இந்த சூரியன் தனக்குள் இழுக்கும் போது தன் உணர்வில்
பெற்றதைப் பாய்ச்சுகிறது.
ஒரு நூலாம்படைப் பூச்சி நூலாம்படையால் தன் கூட்டினைக் கட்டித் தனக்குள் எவ்வாறு
இருக்கின்றதோ இதைப் போல தான் பிற மண்டலங்களின் சக்தியை நட்சத்திரங்கள் கவர்ந்தாலும்
இதனில் உருவான அந்த உணர்வின் மலம் தான் அது – பால்வெளி மண்டலம்.
பால் வெளி மண்டலமாக மாற்றினாலும் அதிலே சிக்குண்டு வருவதை நட்சத்திரங்கள் அது சுழலும் போது தூசியாக மாற்றிப்
நம் பிரபஞ்சத்திலே பரவச் செய்கின்றது. தூசியாக வருவதைச் சூரியனுடைய காந்தப்புலன் அறிவு
அதைக் கவர்கின்றது.
ஏனென்றால் இதிலிருந்து வெளிப்படும் உணர்வை வெப்பம் காந்தம் என்ற நிலைகள் மோதலின்
தன்மை ஆகும் பொழுது அது வெப்பமாக மாறுகிறது. வெப்பமாக மாறும் போது நகர்ந்து ஓடும் சக்தியும்
ஈர்க்கும் காந்தத்தின் செயல் அதிகமாகின்றது.
மோதலில் சூரியன் விஷத்தின் தன்மைகளைப் பிரிந்தாலும் பிரிந்து செல்லும் விஷத்தின்
தன்மையை இந்தக் காந்தம் இழுத்து வைத்துக் கொள்கின்றது.
இதை எல்லாம் நாம் சாதாரணமாக எளிதில் புரிந்து கொள்வதற்காக
1.சூரியனை நாராயணன் என்றும்
2.மறு அவதாரமாக உயிரின் துடிப்பிற்குள் வெப்பமாக வருவதை விஷ்ணு என்றும்
3.வெப்பத்தினால் ஈர்க்கும் தன்மை வருவதை அந்தக் காந்தத்தை லெட்சுமி என்றும்
4.பிரிந்து சென்ற விஷத்தை அந்தக் காந்தம் தனக்குள் இணைத்து கொளளும் பொழுது அதை
லட்சுமணா என்றும் காட்டுகிறார்கள் ஞானிகள்,
இராமயாணத்தில் பார்த்தோம் என்றால் ராமனும் லட்சுமணனும் சீதையும் இருக்கும்.
இதெல்லாம் நமக்கு தெளிவாகவே தெரியச் செய்கிறார்கள். இந்தக் காந்தம் ஒரு மணத்தின் தன்மையை
நுகர்ந்த பின் எப்பொருளை இந்தக் காந்தம் இழுக்கின்றதோ அந்த மணத்தை…
1.உணரச் செய்யும்
2.உணர்த்தச் செய்யும்
3.உணர்வை வளர்க்கச் செய்யும் சக்தி பெற்றது இந்த விஷம்
4.அது தான் “லட்சுமி… லட்சுமணா…” (எல்லாமே காரணப் பெயர் தான்)
ஒரு செடியின் சத்தை இந்தக் காந்தம் இழுத்துத் தன்னுடன் மோதலாகும் பொழுது வெப்பமாகின்றது.
இரண்டறக் கலந்து விடுகிறது. மோதலில் ஏற்படும் இதனுடன் இணைந்த விஷத்தின் தாக்குதலால்
வெப்பத்தின் தன்மை கூடும் தன்மை வருகிறது.
ஆனால் இணைந்து கொண்ட பின் அதற்குள் இருக்கும் விஷம் இந்த மணத்தை வெளிப்படுத்துகின்றது.
அதாவது ஒரு செடியின் சத்தை இவ்வாறு நுகர்ந்து விட்டால் சீதா… “சீதா லட்சுமி” என்று
சொல்வார்கள்.
ஆனால் அதே சமயம் அதே செடியின் சத்தை மனிதனான நாம் நுகர்ந்தால் நம் உயிருக்குள்
பட்ட பின் “சீதா ராமா” எண்ணங்களாகத் தோன்றுகிறது. அந்த உணர்ச்சிகள் நமக்குள் இந்த உயிர்
என்ற விஷ்ணு மோதலில் ஆனபின் ஒலி அலைகளை உடலிலே பரப்புகின்றது.
அந்த உணர்வின் சக்தியை நம் உடலிலே சுழலச் செய்கிறது. அந்த உணர்ச்சியின் தன்மை
ஒவ்வொன்றிலும் தாக்குகிறது. எதன் உணர்வை நுகர்ந்தோமோ அந்த உண்ரச்சியின் தன்மை நம் உடலிலே
உருவாக்குகின்றது.
நமது ஞானிகள் இதை எல்லாம் இணைத்துக் காவியமாக நமக்கு எவ்வாறு கொடுத்தார்கள்
என்ற நிலையைச் சற்று சிந்தித்துப் பார்த்தால் மனிதனான பின்
1.நாம் எதை நுகர வேண்டும்…?
2.நாம் எதை வளர்க்க வேண்டும்…?
3.நாம் எவ்வழி செல்ல வேண்டும்…?
4.நாம் எதனை நமக்குள் பெருக்க வேண்டும்…? என்ற சிந்தனை வந்து விடும்.
ஆகவே சுழலப்படும் போது இந்த உணர்வின் சத்து… “சீதா” என்பது உடலாகி விடுகிறது.
அதில் உள்ள மணம் ஞானமாகின்றது. எந்த மணத்தின் தன்மை இதில் உணர்ச்சிகளாகின்றதோ அந்த
ஞானத்தின் தன்மை கொண்டு
1.இந்த உடல் இயக்கும்.
2.அந்தச் சொல் வரும்.
3.அந்தச் செயல் இருக்கும்.
சீதா என்ற நிலையின் அந்தச் சுவையின் சொல்லாக வரப்போகும் போது அந்த உணர்வின்
மணமாக அந்த உணர்ச்சிகளைத் தூண்டி நம் எண்ணம் செயல்படும்.
ஆகவே இந்த விஷம் எதனுடன் கலக்கின்றதோ அதனின் உணர்ச்சியைத் தூண்டும் செயல் பெற்றது.
ஆகையினாலே உணர்ச்சி என்பது உணர்ச்சியை மனிதனுக்குள் அந்த உணர்ச்சியைத் தூண்டச் செய்வது.
உணர்வு என்பது ஒன்றுடன் இணைந்து அணுவின் தன்மை பெற்றது.
ஒரு மனிதனுக்குள் விளைந்து வெளிப்பட்ட உணர்வை சூரியனின் காந்த சக்தி கவர்ந்து
கொண்டால் “உணர்வு…” என்ற நிலைக்கு மாறுகிறது. உணர்வின் தன்மையை மனிதர்கள் நுகர்ந்தால்
“உணர்ச்சி…” என்ற உணர்வுகளே அஹ்டு இயக்கச் சக்தியாக மாற்றுகின்றது.
1.ஒரு திடப்பொருளாகும் போது உணர்வு.
2.ஆனால் நாம் நுகரப்படும் போது உணர்ச்சி.
உதாரணமாக மிளகாயை எங்கேயோ வறுக்கிறார்கள். சூரியனின் காந்த சக்தி அந்த மணங்களை
எடுத்துக் கொள்கிறது. சுவாசித்தவுடன் நாம் என்ன செய்கிறோம்..?
அந்த நெடி கலந்த உணர்வால் “நச்சு…நச்சு…” என்று தும்முகின்றோம். அப்போது அந்த
உணர்ச்சிகளை அங்கே தூண்டச் செய்கின்றது. அது தும்மலாக வருகிறது.
உணர்வு இயக்கி உணர்ச்சியாக ஆன பின் அதைச் சொல்லாகச் சொல்லும் பொழுது “இந்த நேரத்திலே
போய் மிளகாயை வறுக்கிறார்கள் பார்…!” என்ற சொல்லைத் தான் சொல்ல வைக்கின்றது.
சொல்வது அர்த்தமாகிறதல்லவா..!
இயற்கையின் நிலைகளில் “நாம் இயங்குகிறோமா…?” என்றால் இல்லை. நாம் நுகரும் உணர்வு
எதுவோ அது தான் இந்த உடலை இயக்குகின்றது. இதைத் தெளிவாக்குகின்றார்கள் ஞானிகள்.
அப்பொழுது நாம் நுகரும் உணர்வுகள் எதுவாக இருக்க வேண்டும்…?
நம் ஆறாவது அறிவைக் கார்த்திகேயா என்று காட்டி அந்த மெய் ஞானிகள் வெளிப்படுத்தும்
அருள் உணர்வுகளைச் சுவாசித்து அதனின் இயக்கமாக நாம் வளர வேண்டும்… வாழ வேண்டும்…! மகரிஷிகளின்
அருள் வட்டத்திலேயே என்றும் வாழ்ந்திட வேண்டும் என்பதே நம் குருநாதர் காட்டிய அருள்
வழி.