விநாயகர்
சதுர்த்தி அன்று களிமண்ணில் செய்த விநாயகரை வைத்துத்தான் கும்பிடுகின்றோம். அதைப் பார்த்தால்
அன்றைக்கு நல்லா கிராக்கியாக இருக்கும்.
மாலையைப்
போடுகிறோம். ஆடம்பரப் படுத்துகின்றோம். வாழை மரத்தை வைக்கின்றோம். மஞ்சள் கும்பம் வைக்கின்றோம்
இனிப்பை வைக்கின்றோம். கரும்பை வைக்கின்றோம்.
எல்லாவற்றையும்
வைத்துச் சமைக்கின்றோம். பூஜை செய்கிறோம். ஆடுகிறோம் பாடுகிறோம். கடைசியில் அந்த விநாயகரைக்
கொண்டு போய்த் தண்ணீரில் கரைக்கின்றோம்.
1.ஞானிகள்
சொன்ன தத்துவம் வேறு. நாம் சொல்வது வேறு.
2.எல்லாம்
கும்பிட்ட பின் களிமண்ணில் செய்த அந்த விநாயகரைக் கடலில் கொண்டு போய் கரைத்து விடுகிறோம்.
3.ஏன் எதற்கு
என்று சிந்திக்கின்றோமா...?
விநாயகர்
சதுர்த்தி அன்றைக்கு அதிகாலையில் நாம் என்ன செய்ய வேண்டும்..? துருவ நட்சத்திரத்திலிருந்து
வரக்கூடிய பேரருள் உணர்வுகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக நம் பூமிக்குள் பரவச் செய்கின்றது.
காலையில்
விழித்தவுடனே அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும். அது
எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் ஜீவாத்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று
எண்ண வேண்டும்.
பின் அந்தத்
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி தன் மனைவிக்கு கிடைக்க வேண்டும் என்று சொல்ல
வேண்டும். மனைவியும் தன் கணவருக்குப் பெற வேண்டும் என்று இந்த உணர்வை வலு பெறச் செய்ய
வேண்டும்.
மகரிஷியின்
அருள் சக்தி இந்த உலகம் முழுவதும் படர வேண்டும். நாங்கள் யாரை எல்லாம் சந்தித்தோமோ
பேசினோமோ அவர்கள் குடும்பம் எல்லாம் நலம் பெற வேண்டும். அங்கே அருள் ஒளி படர வேண்டும்.
அவர்கள் குடும்பத்தில் அறியாத இருள்கள் நீங்க வேண்டும். மெய்ப் பொருள் காணும் நிலைகள்
பெற வேண்டும் என்று எண்ணிப் பகைமை உணர்வை நமக்குள் நுழையாத படி முதலில் இதைச் செய்ய
வேண்டும்.
நம் பிள்ளைகளை
நினைத்து அந்த மகரிஷியின் அருள் சக்தி அவர்கள் பெற்று அருள் ஞானம் பெற வேண்டும் என்று
அன்றைக்கு எண்ண வேண்டும்.
ஆனால் அதை
விடுத்துவிட்டு விநாயகர் சதுர்த்தி தினத்திலேயும் “இப்படி இருக்கிறார்களே... உன்னை
நான் வணங்கினேனே...!” என்று இப்படி வேதனைகளை எண்ணினால் நமக்குள் அந்த வேதனை தான் வளரும்.
ஆகையினாலே
பிள்ளைகள் அவர்கள் அறியாத இருள் நீங்க வேண்டும். மெய்ப் பொருள் காணும் நிலை பெற வேண்டும்
என்று இந்த உணர்வைச் சொல்ல வேண்டும்.
அன்றைக்குத்
தினத்தில் பிள்ளைகளும் என்ன நினைக்க வேண்டும்...?
எங்கள் தாய்
தந்தையரின் அருளால் அந்த மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும். அது எங்கள்
உடல் முழுவதும் படர வேண்டும். அம்மா அப்பா அருளாசி நாங்கள் பெற வேண்டும். அவர்கள் அருள்
ஒளி நாங்கள் பெற வேண்டும் என்ற எண்ண வேண்டும்.
1.குடும்பத்தில்
சந்தர்ப்பத்தில் பகைமைகள் உண்டானாலும்
2.விழாக்கள்
போன்ற காலத்திலேயாவது எல்லோரையும் ஒன்றாக இணைத்து
3.உணர்வின்
தன்மையைப் பக்குவப்படும் நிலைக்கு ஞானிகள் வைத்தார்கள்.
பொதுவாகச்
சொன்னால் பிள்ளைகள் கேட்க மாட்டார்கள். அன்றைக்கு அந்த விழாக் காலத்தில் சாமி கும்பிடும்
போதாவது இந்த மாதிரி எண்ணி அம்மா அப்பா அருளாசி கிடைக்க வேண்டும். அந்த மகரிஷியின்
அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணும் போது அந்த அருள் உணர்வு வளர்கிறது.
அருள் உணர்வுகளைச்
சேர்க்கும் பொழுது அறியாத இருள்கள் நீங்குகிறது. அம்மா அப்பா மேலிருக்கும் வெறுப்பின்
தன்மை மறைகின்றது. தாய் தந்தையரின் நல்லாசிகளைக் கவரும் சக்தி வருகிறது.
1.நமக்குள்
இருக்கும் பகைமை வெறுப்பு போன்ற உணர்வுகளை ஈர்க்கும் தன்மை குறைந்தவுடனே
2.யாரும்
இங்கே இழுக்கும் சக்தி இல்லை என்றால் அது ஒதுங்கி நிற்கும்.
காலையில்
ஆறு மணிக்கு எல்லாம் சூரிய ஒளி வருகிறது. வந்தவுடனே இழுத்துக் கொண்டு மேலே சூனிய மண்டலத்திற்குக்
கொண்டு செல்கிறது. நம் பூமியில் அந்தச் சக்தி இருப்பதில்லை.
1.அப்போது
நாம் எண்ணினாலும் புதிதாக உருவாவதில்லை.
2.இது கிடைக்காது.
இது மயங்கி போகும்.
3.ஆக தீமையான
வினைகளுக்குச் சாப்பாடு கொடுக்காமல் இருக்கும்.
மகரிஷிகளின்
அருள் சக்தி பெற வேண்டும் என்று தொடர்ந்து இந்த எண்ணங்களை எடுக்கப்படும் போது நமக்கு
முன்னாடி இருக்கும் இந்தப் பரமாத்மாவும் சுத்தமாகின்றது.
நாம் சுவாசிக்கும்
பொழுது நம் உடலிலுள்ள ஜீவான்மாக்களும் தீமைகளை நுகர்வதில்லை. அதுவும் சுத்தமாகின்றது.
நம் உயிராத்மா ஒளியாக மாறுகின்றது.
ஞானிகள்
விநாயகரைத் தண்ணீரில் (கடலில்) கரைக்கச் சொன்னதன் உட்பொருளே ஒவ்வொருவருக்குள்ளும் அறியாது
சேர்ந்த தீய வினைகளைக் கரைப்பதற்குத்தான்...!