ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 25, 2019

முருகன் போரில் சூரனை வென்றாலும் அவனைப் பாம்பாகச் சபித்துக் காலடியில் வைக்கின்றான் ஏன்...?


உதாரணமாக மூன்று விதமான ஆடுகளில் உள்ள கருவை விஞ்ஞானிகள் எடுத்து ஒன்றாகச் சேர்த்துக் கருவுறச் செய்து புது விதமான ஆடாக உருவாக்குகின்றார்கள்.

அதே போல் மனித உடலில் உள்ள கருக்களை எடுக்கிறான்.  குரங்கிலுள்ள செல்களைக் கொஞ்சம் எடுக்கிறான். இப்படி ஒவ்வொரு செல்களையும் எடுத்து மனிதனுக்குண்டான அறிவின் தன்மை வளர்வதற்காகக் வேண்டி அத்தகைய கருக்களை இணைத்து ஒரு நாயை உருவாக்குகின்றான் (மனிதனுக்கு ஒத்த நிலைகளில).

மனித உணர்வு கொண்ட செல்களை எடுத்துக் கொரில்லாக்களுக்குள் அதனுடைய கருவிலே சேர்த்து மனிதனை ஒத்த ஞானத்தை வளர்க்கக்கூடிய நிலையில் இவன் சொன்ன வேலைகளை எல்லாம் செய்கிற மாதிரி உருவாக்குகிறார்கள்.

இது எல்லாம் பிரம்மாவைச் சிறை பிடித்தான் முருகன் என்ற நிலையில்
1.மனிதனுடைய ஆறாவது அறிவு உருவாக்கக்கூடிய சக்தியாக
2.நம் எண்ணத்துக்குள் உண்டு என்று காட்டுகின்றார்கள் ஞானிகள்.

ஆனால் நம் ஆறாவது அறிவினைப் பயன்படுத்தி அருள் ஒளியை நமக்குள் உருவாக்கப்படும் போது “ஒளியின் சரீரமாக... அழியாத நிலைகளாக... நாம் உருவாக்க முடியும்...!”

இதைக் காட்டுவதற்குத் தான் முருகனுக்கு மயிலைப் போட்டு அந்த மயிலின் காலடியில். பாம்பையும் போட்டு வைத்துள்ளார்கள். அதற்கு ஒரு குட்டிக் கதையும் எழுதி வைத்திருக்கின்றார்கள்.

அதாவது முருகனுக்கும் அசுரனுக்கும் போர் நடந்தது. போர் நடந்தவுடனே அசுரன் வீழ்ச்சி அடைந்து விட்டான். வீழ்ச்சி அடைந்ததும் என்ன செய்கின்றான்...?

ஐயனே...! இனி நான் உன் காலடியிலே இருப்பேன். எனக்கு அந்த வரத்தைக் கொடு...! என்று அந்த அசுரன் முருகனிடம் கேட்கிறான். உடனே அந்த அசுரனைப் பாம்பாகச் சபித்து “என்னுடனே இரு...!” என்று முருகன் சொல்கிறான்.

சொல்வது அர்த்தம் ஆகின்றதல்லவா...! அதிலேயும் அர்த்தம் உண்டு.

ஏனென்றால் ஒரு அணு இயங்க வேண்டும் என்றால் அதற்குள் இருக்கும் விஷம் தான் காரணம். அந்த விஷம் இல்லை என்றால் அணுக்கள் இயங்காது.

ஆகவே சபிக்கப்படும் போது “எனக்குள் அடங்கி நட...!” என்பதற்காக அவ்வாறு காட்டுகின்றார்கள் ஞானிகள்.
1.அணுவிற்குள் விஷம் இருந்தாலும் அது அதிகரித்து விட்டால் அந்த உணர்வு “அசுர சக்தியாக” மாறுகிறது.
2.ஆனால் அந்த விஷத்தின் தன்மை ஒடுங்கி விட்டால் நமக்கு “நன்மை தரும் சக்தியாக” இருக்கும்.

விஷத்தை நாம் வேக வைத்து அடக்குவது போன்று அருள் ஒளியின் உணர்வை நமக்குள் சேர்த்து அறியாது வரும் நஞ்சான உணர்வுகளை அடக்குதல் வேண்டும்.
1.நஞ்சை அடக்கிய அருள் மகரிஷிகளின் உணர்வை நாம் சுவாசிக்க வேண்டும்.
2.நஞ்சை அடக்கிய மெய் ஞானி தான் இதைச் சொன்னான்.

அந்தக் காவியத்திற்குள் இவ்வளவு பொருள் இருக்கிறது...!