ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 3, 2019

வேதனையை ஒடுக்கச் செய்யும் “துருவ நட்சத்திரத்தின் நீல ஒளிக் கற்றைகள்…”


மனிதனின் வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் எத்தனையோ பல சிக்கல்கள் வருகிறது. இதைத் தடுப்பதற்கு நாம் எந்த ஆயுதம் வைத்திருக்கின்றோம்…?

உதாரணமாக நாம் வயல்களில் பயிரிடுகின்றோம் என்றால் ஒரு வேலியைப் போட்டு மறைத்து மற்ற உயிரினங்கள் வராதபடி பாதுகாத்துக் கொள்கின்றோம். இதே போல் தான்
1.நம் உடலில் கார்த்திகேயா…!
2.இந்த ஆறாவது அறிவு நாம் தெரிந்து கொள்ளும் அறிவாக வருகின்றது,
3.சேனாதிபதி இந்த ஆறாவது அறிவு தீமைகள் வராது பாதுகாக்கின்றது.

அதே சமயத்தில் ஒன்றை மனிதனின் ஆறாவது அறிவு என்கிற பொழுது தன் எண்ணத்தால் உருவாக்கும் சக்தி பெற்றது. அதாவது ஒன்றை ஒன்றுடன் இணைத்தால் ஒன்று உருவாகும் என்று அறிந்து செயல்படும் அறிவைப் பெற்றவன்.

அருள் ஒளி பெற்றவன்… உணர்வின் தன்மை ஒளியின் தன்மையாக உருவாக்கியவன்… ஒளியின் சரீரமாகப் பெற்றவன்… யார்…? அந்த அகஸ்தியன்…! அந்த ஒளியான உணர்வை நமக்குள் நுகர்ப்படும் பொழுது இருளை அகற்றும் ஒளியின் உணர்வாக நமக்குள் உருவாக்க முடியும்.

நஞ்சை ஒடுக்கிய அந்த ஞானியின் உணர்வை நமக்குள் உருவாக்கப்படும் பொழுது இருள் என்ற நிலைகள் இங்கே அகற்றப்படுகின்றது.

பாம்புகள் தன் விஷத்தைப் பாய்ச்சி மற்ற உயிரினங்களை விழுங்குகின்றது, அந்த விஷங்கள் பாம்பின் உடலில் பல வர்ணங்களாக நாகரத்தினமாக ஆகிறது. ஆனால்
1.அந்தத் துருவ மகரிஷியோ (அகஸ்தியன்) விஷத்தை வென்று ஒளியின் உணர்வாகப் பெற்றவன்
2.அது நீல நிறமாக இருக்கும். இளம் நீலம்…!

நெருப்பு எரியும் பொழுது அதில் நீல நிற ஜுவாலை வந்தால் அது வீரியமான நெருப்பாக வரும். இதே போல தான் துருவ நட்சத்திரத்தின் ஒளியும் தெரியும்.
1.வானத்தில் மற்ற நட்சத்திரங்களைக் காட்டிலும்
2.துருவ நட்சத்திரத்தைப் பார்த்தோம் என்றால் இளம் நீலமாகப் பள…பள..பள.. என்று மின்னும்.
3.அதிலிருந்து வரும் பேரருள் பேரொளியை நமக்குள் நுகர்ந்து பழக வேண்டும்.
4.இந்த உணர்வை நம் உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களிலும் இணைக்க வேண்டும்.

உதாரணமாக வேதனை வெறுப்பு கோபம் ஆத்திரம் என்ற உணர்வுகளை நாம் நுகரும் பொழுது ஓ…ம் நமச்சிவாய.. என்று அந்தந்தக் குணத்திண் அணுக்களாக உருவாக்கி அவைகள் எல்லாம் நம் உடலாக மாறுகின்றது.

ஆனால் அத்தகைய உணர்வுகள் நம் உடலாக ஆவதற்கு முன்னாடியே அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து அதற்கு ஜீவன் கொடுக்காதபடி தடுத்து விட வேண்டும்.

அகஸ்தியனைப் போன்று நாம் நம் உணர்வுகளை ஒளியாக மாற்றிடல் வேண்டும். அதற்காகத்தான் இதைச் சொல்கிறோம் (ஞானகுரு).