ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 24, 2019

கண்ணன் துகிலை உறிகின்றான்…! ஏன்…?


கண்ணன் துகிலை உறிந்தான். யார்…? கிருஷ்ணன். குளத்தில் குளித்து கொண்டிருக்கின்ற பெண்கள் சேலையை எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டு வேடிக்கை பார்த்தான்..! என்று சொல்வார்கள்.

ஞானிகள் காட்டிய வழியில் கண்ணனுடைய செயல்கள் என்ன…? என்றால் ஒருவர் நம்மிடம் ஒரு விபரத்தைச் சொல்கிறார் என்றால் அப்பொழுது
1.நம் கண்கள் அவரை உற்றுப் பார்க்கின்றது.
2.அவர் வெளிப்படுத்தும் உணர்வைப் பதிவாக்குகின்றது.

கண்ணோடு சேர்ந்த காந்தப்புலனோ அவர் எண்ணத்தின் அலைகள் வரப்போகும் போது அதை கவர்ந்து நம் உணர்வுடன் மோதும் போது
1.அவர் திருட்டுத்தனம் செய்கின்றார் என்று காட்டுகிறது
2.திருட்டுத்தனம் செய்கிறார் என்றால் கண்ணன் வெண்ணெயைத் திருடுகின்றான்.
3.அதாவது அவர் வெளிப்படுத்தும் உணர்வுக்குள் இருக்கும் வலுவை…
3.அவர் உணர்வின் தன்மை எடுக்கின்றது கண்ணனான நம் கண்கள்

இதைத்தான் கண்ணன் துகிலை உறிந்தான் என்று காட்டுகின்றார்கள்.

நாம் பார்த்துக் கவரும் அந்த உணர்வின் தன்மை கொண்டு மறைந்த நிலைகள்
1.உள்ளுக்கே மறைத்து அவர் (மற்றவர்கள்) செயல்படுவதை
2.உள் நின்று அந்த உணர்வைப் பிரித்துத் தனக்குள் அறிகின்றது இந்தக் கண்கள் என்று காட்டுவதற்கு
3.அதை உருவமாகக் காட்டி அந்தத் துகிலை உறிகிறான் என்று காட்டுகின்றார்கள்.

கண்ணன் வெண்ணெயைத் திருடினான் என்றால் ஒவ்வொரு உணர்வின் தன்மையிலும் தீமையை நீக்கி உள் இருக்கும் உணர்வை இது அறிகின்றது.

உதாரணமாக ஜோசியக்காரரிடம் போகப்போம் போது நீங்கள் நல்லது கெட்டது என்று எண்ணிக் கேட்கும் பொழுது உங்கள் கண்களைத் தான் ஜோதிடம் பார்ப்பவர்கள் பார்ப்பார்கள். ஆனால்
1.நீங்கள் தலையை மட்டும் குனிந்திருங்கள்.
2.உங்களிடமிருக்கும் உண்மையை ஒன்றும் சொல்ல மாட்டார்கள்.

அவர்கள் அதே எண்ணத்தில் (பழக்கம்) இருக்கின்றதால் நம்மிடம் இருந்து வெளிப்படும் உணர்வின் தன்மை அவர்களுக்குள் மோதும்போது (கண்ணன் துகிலை உறிந்தான் என்ற நிலையில்) நமக்குள் நடந்து கொண்டிருப்பதை அறியத் தொடங்குவார்கள்.

அவர்கள் ஜோதிடம் சொல்ல ஆரம்பித்ததுமே நம்மை அறியாமலே தலையை ஆட்டுவோம்.
1.அதைப் பிடித்துக் கொள்வான்
2.அந்தக் கணக்கைப் போட்டுக் கொள்வான்
3.ஒவ்வொன்றும் அது இன்ன இன்னதுதான் என்பான்.

அதற்குத் தகுந்த மாதிரி நாம் என்ன சொல்வோம்..? ஆமாம்… ஆமாம்… ஆமாம்… ஆமாம்…! என்று ஜோதிடக்காரன் சொல்வதை எல்லாம் அப்படியே ஏற்றுக் கொள்வோம்.

அப்போது அந்த உணர்வுகள் அவன் சொல்வதெல்லாம் நமக்குள் போய்விடும். “அவன் சொன்னது எல்லாமே உண்மை என்போம்…!” ஜாதகம் ஜோதிடம் பார்க்கின்றவர்கள் இதை வைத்துத்தான் சொல்வார்கள்.

இந்த ஜோதிடமும் ஜாதகமும் மனிதனுக்கு இல்லை…!