ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 8, 2019

தீமையான உணர்வுகள் நமக்குள் வினையாக... ஒரு வித்தாக... உருவாகாமல் தடுப்பது தான் “சதுர்த்தி...!”


மனிதனுக்கு மனிதன் கொன்று புசிக்க வேண்டும் என்ற சிந்தனையை எடுத்துப் பல கருவிகளை உருவாக்குகின்றார்கள்.
1.கொல்லும் பொழுது கொல்பவனோ அதை ரசிக்கின்றான்.
2.கொல்லப்பட்டவனோ துடிக்கின்றான்... பதறுகின்றான்.

இந்த இரண்டு உணர்வும் இங்கே உருவாக்குகின்றது.

பதட்டமடைவனின் உடலில் பதட்டத்தை உருவாக்கும் அணுக்களாக உருவாகின்றது, அவன் வெளி விடும் மூச்சலைகள் பதட்டமான  உணர்வலைகளாகக் காற்றிலே பரவுகிறது.

அதே சமயத்தில் கொல்லும் உணர்வுகளை நுகரப்படுவனின் உடலில் மற்றவர்களைக் கொன்று போட்டு மனதில் மகிழ்ச்சி பெறும் நிலையாகி அத்தகைய மூச்சலைகள் காற்றிலே பரவுகிறது.

1.இத்தகைய அலைகள் தான் இன்று காற்று மண்டலத்தில் அதிகமாகப் படர்ந்துள்ளது.
2.இந்த உணர்வுகளை நுகரும் மற்ற மனிதனுக்குள்ளும் அத்தகைய அணுக்கள் விளையத் தொடங்குகின்றது.

ஏனென்றால் அதே உணர்வுகள் இயக்கப்பட்டுத் தன் இரையைத் தேடி நுகரும் பொழுது அதே காரியத்தையே செய்யும். நாளடைவில் இந்தக் காற்று மண்டலமே நச்சுத் தன்மையாகி விட்டது.

1.இப்படிப்பட்ட நஞ்சின் தன்மைகள் உருவாகாதபடி தடுப்பதற்குத்தான்
2.அன்று விநாயகர் சதுர்த்தியை ஏற்படுத்தினார்கள் ஞானிகள்.
3.அதாவது “தீமையான உணர்வுகளை வளராது தடுக்கும் நாள்...!” என்று வைத்தார்கள்,

மனிதனுக்கு மனிதன் நாம் பேசுகின்றோம். பேசித் தொடர்பு கொள்ளும் பொழுது உதாரணமாக நான் வேதனைப்பட்டால் அதைக் கேட்டு நீங்களும் வேதனை உனர்வுகளை எடுத்துக் கொள்கின்றீர்கள்.

ஏனென்றால் வேதனைப்படுவோரின் உணர்வுகளை நுகரப்படும் பொழுது உயிரிலே பட்டு அதே உணர்ச்சியாக இயக்கப்பட்டு நமக்குள் வந்துவிடுகின்றது.

மனிதனுக்கு மனிதன் யாரும் பிரிவில்லாதபடி அதை வளர்த்து வைத்திருக்கின்றோம். இப்படி இரண்டு பேர் பேசிய உணர்வையும் சூரியனின் காந்த சக்தி எடுத்து வைத்துக் கொள்கிறது.

இப்பொழுது நல்ல மனிதனாக இருக்கின்றான் என்று ஒருவரைப் பற்றித் தெரிந்து கொள்கிறீர்கள். அவரிடம் நெருங்கிப் பழகுகின்றீர்கள் அடுத்து அந்த மனிதனுக்கு நோயாகிவிட்டது...! என்று சொல்கிறார்கள்... நீங்கள் அதைக் கேள்விப்படுகின்றீர்கள்.

கேள்விப்பட்ட உடனே
1.அந்த நல்ல மனிதனின் உணர்வு நமக்குள் இருந்தாலும்
2.அடடா... நல்ல மனிதனுக்கு இப்படி ஆகிவிட்டதே...! என்று நாமும் வேதனையைச் சுவாசிக்கின்றோம்.
3.அவர் மேல் உள்ள பாசத்தால் நாம் எண்ணும் பொழுது
4.அவர் உடலில் உருவான அதே நோயின் உணர்வுகளை நாமும் எண்ணி இழுத்துக் கவர்ந்து விடுகின்றோம்.
5.அதே நோயின் தன்மை இங்கே நமக்குள்ளும் உருவாகின்றது.
6.நாம் தவறு செய்யவில்லை ஆனால் நமக்கும் நோயாகின்றது.

சந்தர்ப்பவசத்தில் அவர் இறந்தால் அவரின் பற்று எவ்வளவு நமக்கு இருந்ததோ அந்த உடலை விட்டு இறந்த ஆன்மா நம் எண்னத்தின் வலு கொண்டு நம் உடலுக்குள் வந்துவிடும்.

பார்க்கலாம்… நீங்கள்...! நேற்று வரையிலும் நன்றாக இருந்தார்... திடீரென்று எபப்டியோ மனமாற்றம் ஆனார்..! என்று பார்க்கின்றோம்.  இது எல்லாம்
1.ஒரு மனிதனுக்கு மனிதன் தொடர்பு கொண்ட உணர்வுகள்
2.வரிசையாக இப்படித்தான் இயக்குகிறது...! நாம் தவறு செய்யவில்லை...!

இதைப் போன்ற நிலைகள் நமக்குள் உருவாவதை நாம் எப்படித் தடுக்க வேண்டும்…? தடுக்க ஒரு சக்தி வேண்டுமல்லவா...!

நண்பரோ உறவினரோ யாராக இருந்தாலும் வேதனைப்படுகின்றார்கள் அல்லது நோயால் வாடுகிறார்கள் என்று கேள்விப்பட்டால்
1.உடனே அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் ஈஸ்வரா என்று
2.நாம் இந்த உணர்வைப் பல முறை எடுத்து நமக்குள் சேர்க்க வேண்டும்.

அடுத்து அந்த மகரிஷிகளின் அருள் சக்தியால் அவர் நல்ல நிலை பெறவேண்டும் அவர் அருள் ஒளி பெறவேண்டும் உடல் நலம் பெற வேண்டும் என்ற எண்ணங்களை எண்ணி நமக்குள் மாற்றிவிட வேண்டும்.

இது தான் சதுர்த்தி என்பது. தீமையான உணர்வுகள் நமக்குள் வினையாக... ஒரு வித்தாக உருவாகாமல் தடுப்பது தான்.. “விநாயகர் சதுர்த்தி...!”

இப்படி ஒவ்வொரு மனிதனும் எண்ணி எடுத்தால் இந்தக் காற்று மண்டலமே தூய்மையாகின்றது. தீய வினைகள் நமக்குள் சேர்வதில்லை. தீமை செய்யும் உணர்வுகள் அனைத்தும் இந்தக் காற்று மண்டலத்திலிருந்து அகற்றப்பட்டு இந்தப் பரமாத்மாவும் தூய்மையாகின்றது.

தீமை செய்யும் உணர்வுகளை இங்கே உள்ள மனிதர்கள் யாரும் நுகரவில்லை என்கிற பொழுது பிடிப்பில்லாத அந்த அலைகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து கடலுக்குள் அமிழ்த்தச் செய்கின்றது.

அதை உணர்த்தும் விதமாகத் தான் விநாயகரைக் களிமண்ணில் செய்து அதைக் கடலிக் கரைக்கச் சொன்னது. தீய வினைகளை நமக்குள் சேர்க்காமல் எல்லோரும் சேர்ந்து அந்தக் கடலில் கரைக்க வேண்டும்.

ஞானிகள் சொன்னதில் எதுவும் தவறில்லை... அந்தக் கருத்தினை நாம் அறிந்து வழி நடக்க வேண்டும். அதற்காகத்தான் சொல்கிறோம் (ஞானகுரு)