ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 12, 2019

என் மனதில் ஒரே போராட்டமாக இருக்கிறது…! என்று சொல்கிறோம்… அதற்கு முக்கியமான காரணம் என்ன…? எப்படி மாற்றுவது…?


சூரியனிலிருந்து வரக்கூடிய வெப்பமும் காந்தமும் ஒரு வேம்பின் சத்தைக் கவர்ந்து கொண்டால் கசப்பின் உணர்ச்சியைத் தூண்டும் அணுவாக மாறும்.

சூரியனின் வெப்ப காந்தங்கள் ரோஜாப்பூவின் சத்தைக் கவர்ந்தால் அந்த நறுமணத்தையும் அதனின் துவர்ககும் சக்தியை உணர்த்தும் உணர்வாக அலைகளாக மாறுகிறது.

அதே போல சூரியனில் இருந்து வரும்போது ஒரு விஷச் செடியின் சத்தைக் கவர்ந்தால் விஷத்தின் உணர்ச்சிகளைத் தூண்டும் அணுவாக மாறுகிறது.
(வேம்பு ரோஜா விஷம் - அந்தந்தக் காற்றலைகளாக மாறுகின்றது)

வேப்ப மரம் மரமாக இருக்கும் போது அடர்த்தியின் தன்மையால் மற்றதைத் தன் மணத்தைக் கொண்டு தாக்கி வெளியே அனுப்பிவிடும். தன்னுடன் இணைத்துக் கொள்வதில்லை.

ஆனால் ரோஜாப்பூ தன் அடர்த்தியின் தன்மை கொண்டு நுண்ணிய அலைகளாக வெளி வரும் பொழுது அந்த வேம்பின் கசப்பைத் தன் அருகில் விடாது பாதுகாக்கும்.

வேம்பின் அருகில் ரோஜாச் செடி இருந்தால் அதனின் வளர்ச்சி கம்மியாக இருக்கும். ஏனென்றால்
1.வேப்ப மரத்திற்கு மாறாக இருந்து விட்டால் அந்தச் செடிகளின் பலனைக் குறைத்து விடும்..
2.அதற்கு ஒத்த நிலைகள் இருந்தால் தான் மற்ற செடிகளும் வளரும்.

உதாரணமாக வேப்ப மரத்தின் அருகில் கருவேப்பிலையை வைக்கலாம். ஏனென்றால் இந்த வேப்ப மரத்தின் கசப்பின் தன்மையை நுகர்ந்து தான் கருவேப்பிலையாக உருவாகிறது.

அதே சமயத்தில் இந்த ரோஜாப்பூ தன்மையும் இதனுடன் கலந்து கருவேப்பிலைச் செடியாகின்றது. அதனால் ரோஜாப்பூச் செடியையும் கருவேப்பிலையையும் அருகருகே வைத்தோம் என்றால் இரண்டிற்கும் நல்லது... செழிப்பாக வளரும்.

அனால் ஒரு விஷச் செடிக்குப் பக்கத்தில் ரோஜாவை வைத்தால் அந்த விஷத்தின் தன்மை ரோஜாப்பூவின் நிலையை உருவாக விடுவதில்லை.

இது எல்லாம் ஏன் என்றால்
1.ஒன்றை ஒத்து ஒன்றின் நிலைகள் கலந்து தான் தாவர இனங்கள் அனைத்தும் உருவாகியுள்ளது,
2.அது அது கலந்து கலந்து புதுப் புதுச் செடிகளாக உருவாகின்றது.

எப்படி...?

வேப்ப மரத்திலிருந்து வேம்பின் சத்து வெளிப்பட்டது என்றால் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாறும். அதே போல ரோஜாப்பூவின் சத்தை எடுத்துக் கொண்டால் அதுவும் அலைகளாக மாறும். விஷச் செடியின் சத்தை எடுத்துக் கொண்டால் அதுவும் அலைகளாக மாறும்.

இதைத்தான் வேதங்கள் இயல் இசை நாடகம் என்ற நிலைகளில் கூறுகின்றது. ரிக் சாம அதர்வண யஜூர். இதிலே சாம என்பது இசை.
1.ரோஜாப்பூவின் நறுமணத்தை நாம் நுகர்ந்தால் “ஆஹா...ஹா...!” (இசை – சப்தம்) என்று சொல்கிறோம்.
2.வேப்ப மரத்தின் மணத்தை அந்தக் கசப்பை நுகர்ந்தால் “ஓய்...!” என்கிறோம். ஏனென்றால் கசப்பின் தன்மை அதிகரிக்கின்றது.
3.ஒரு விஷத்தின் தன்மையை நுகர்ந்தால் நச்...நச்...! என்று தும்மல் வருகின்றது. இது அரிப்பின் தன்மை கொண்டது. சில நேரம் நுகர்ந்த பின் நீராகக் கூட வடிகின்றது.

தனித் தனியாக இந்த மணங்களைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாகச் செல்லப்படும் பொழுது சந்தர்ப்பவசத்தால் வேம்பின் அலைகளைக் கண்ட ரோஜாப்பூவின் உணர்வலைகள் இதற்கும் அதற்கும் ஒத்துக் கொள்ளாத நிலையில் நகர்ந்து ஓடுகின்றது.

நகர்ந்து ஓடும் பொழுது ஒரு விஷச் செடியிலிருந்து நுகர்ந்த உணர்வலைகள் அங்கே இருந்தால் வேம்பின் மணம் துரத்தி வந்த நிலையில்
1.விஷச் செடியின் அழுத்தத்தைக் கண்டு
2.ரோஜாவின் மணம் அதைத் தடுத்து நிறுத்தத் (தனக்குள் “பிரேக் போட”) தெரியாது. (இந்த இயல்பு முக்கியமானது)
3.அழுத்தம் அதிகமான பின் அந்த விஷ உணர்வுகளில் மோதிச் சுழலத் தொடங்கிவிடும்.

அப்பொழுது சுழலும் தன்மை வரும் பொழுது வேம்பின் உணர்வையும் உள்ளே இழுக்கின்றது. ஏனென்றால் சுழற்சியில் ஈர்க்கும் தன்மை வருகின்றது.

இந்த மூன்றும் இபப்டி ஒன்றுடன் ஒன்று மோதி இந்த மோதலில் வேம்பின் உணர்வும் மற்ற நிலைகளும் எந்த அளவுக்குக் கலந்ததோ அதற்குத் தக்கவாறு “ஒன்றாகின்றது…!”

உதாரணமாக பத்து சதவீதம் வேம்பின் உணர்வும் ரோஜாப்பூ மூன்று சதவீதமும் விஷத்தின் தன்மை ஒரு சதவீதமும் இந்த மூன்றும் கலந்து ஒரு அணுவின் தன்மை ஆகிவிட்டால் பார்க்கலாம்... சுழிக் காற்றாக வரும். அப்பொழுது மேலே ஆவியாகச் செல்லும்.

ஆனால் கனமான பின் அந்தப் பொருள் அப்படியே கீழே பூமியில் ஒடுங்கும். இப்படி ஒடுங்கி இழுத்தாலும் பூமிக்குள் ஆழமாகப் பதிந்து விட்டால் அது கருவேப்பிலையின் வித்தாகப் பதிந்து விடுகின்றது.

மின்னல் தாக்கபப்டும் பொழுது அதனின் உணர்ச்சிகள் உந்தி அந்தப் பத்து சதவீதம் வேம்பின் சத்தையும் முன்று சதவீதம் ரோஜாப்பூவின் சத்தையும் ஒரு சதவீதம் விஷச் செடியின் சத்தையும் கலந்து அது விளையும் தன்மைக்கு வருகின்றது.

1.ஆக வேம்பின் பக்கம் ரோஜாப்பூவை வைத்தால் இதற்கும் அதற்கும் தொடர்பில்லை – வளர்ச்சி இருக்காது
2.ஆனால் இதனுடன் இணைந்து கருவேப்பிலைச் செடியாக ஆன பின் அதற்கு அருகில் ரோஜாப்பூச் செடியை வைத்தால் நன்றாக வளரும்.
3.இதற்கு அது உணவு கொடுக்கின்றது. அதற்கு இது உணவு கொடுக்கின்றது... ரோஜாப்பூவிற்கு உரமாகின்றது.
4.கருவேப்பிலைப் பக்கம் ரோஜாப்பூவை வைத்துப் பாருங்கள் நல்ல விரிவடைந்து ஜோராக வரும்.

ஏனென்றால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் இதை எல்லாம் காட்டிற்குள் எம்மை (ஞானகுரு) அழைத்துச் சென்று
1.எப்படி அதனதன் உணர்வுகள் உந்துகின்றது..?
2.அந்த உணர்வின் செயலாக்கங்கள் எப்படி எல்லாம் வருகிறது...? என்று இதை எல்லாம் காட்டினார்.

ஆனால் விஷச் செடிக்கு அருகில் வைத்தால் அந்த அதிகரித்த விஷத்தின் தன்மையை இது நுகரப்படும் பொழுது ரோஜாப்பூ வாடிவிடுகின்றது. இதெல்லாம் தனக்குள் கவர்ந்து கொண்ட… நுகரும் சக்தியால் மாறுகின்றது.

ஆக அந்தத் தாவர இனத்தின் மணங்கள் தான் நாம் சுவாசிக்கும் பொழுது எண்ணங்களாகவும் உணர்ச்சிகளாகவும் சொல்லாகவும் பல வித குணங்களாகவும் இயக்குகின்றது.
1.ஒன்றை ஏற்றுக் கொண்ட நிலைகளும்
2.ஏற்றுக் கொள்ளாத நிலைகளும் எல்லாம் இப்படித்தான் நமக்குள் வருகிறது.

அணுவின் இயக்கத்தையும் அண்டத்தின் இயக்கத்தையும் வான இயல் புவி இயல் உயிரியல் தாவரவியல் என்று இதை எல்லாம் தெளிவாக அறிந்து தன் வாழ்க்கையில் வந்த நஞ்சுகளை எல்லாம் அடக்கி உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாகித் துருவ நட்சத்திரமாக இன்றும் உள்ளான்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நாம் பெற்றால் நமக்குள் இயக்கும் எதிர்மறையான இயக்கங்களைச் சமப்படுத்தி நாமும் அந்தத அகஸ்தியனைப் போன்றே நம் உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாற்றலாம். பிறவி இல்லா நிலை அடையலாம்.