அன்றைக்கு அரசர்கள் செய்த முறைப்படி மீனாட்சி என்று மீன் கொடியை
வைத்து ஆட்சி செய்து மீனாட்சி என்று காட்டுகின்றார்கள். தனது வலிமை கொண்டு மற்ற ஆட்சிகளை
அடக்க முடியும் என்ற நிலையைக் காட்டுகின்றார்கள்.
மீன் என்ன செய்கிறது…? ஒன்றை ஒன்று விழுங்குகிறது. அது விழுங்கும் சக்தி பெற்றது. மற்ற
அரசனை வீழ்த்தும் நிலை அது. அதற்காக மீனாட்சி என்று அன்றைய அரசர்கள் காரணப் பெயரை வைத்தனர்.
அன்று ஆண்ட அரசன் அதற்கு வேண்டிய சாஸ்திரத்தை எடுத்து மக்களுக்குக்
காட்டி அதை எடுத்து கடவுளாக வளர்த்தார்கள். அரசர்கள் சொன்ன நிலைகள் தான் இது.
அதே போல் ஆண்டாள் என்று இங்கே வைத்திருக்கின்றார்கள். நாம் எண்ணக்கூடிய
எண்ணங்கள் தான் நம்மை ஆளுகின்றது. அன்றைய அரசன் காரணப் பெயரை வைத்து அந்த உணர்விற்கெல்லாம்
ஸ்தல புராணங்களை வடிக்கின்றான்.
அதை யாரும் சிந்தித்துப் பார்க்கிறோமா என்றால் இல்லை. அரசர் வகுத்த
வழியில் தான் நாம் இன்றும் செல்கின்றோம். அரசன் ஆடம்பர நிலைகள் கொண்டு சுகபோகத்திலேயே
வாழ்நதான்.
அவன் காட்டிய சாஸ்திரங்களை சாதாரண மக்கள் கடைப்பிடிக்கத் தவறினால்
மரண தண்டனை கொடுக்கின்றான்... கழுவேற்றச் செய்கின்றான்...!
ஒரு அரசன் அடுத்த அரசனுடன் உறவு கொண்டால் ஐந்தாம் படை என்று அவனைத்
தீர்த்துக் கட்டுகின்றான். அவனுக்குக் கீழ் செல்பரையும் அழித்து விடுகிறான்.
நம் தெய்வத்தைக் காட்டிக் கொடுக்கும் நிலைகளுக்குச் செல்கின்றான்
என்றும் அதனால் தெய்வத்தின் சாட்சியாக அவனுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்று
சொல்லி அதை நிறைவேற்றுகின்றான். இது அரசன் செய்த தெய்வ குணம்.
ஒவ்வொரு அரசனையும் புகழ் பாடிய கவிஞர்கள் தான் பல உண்டு. எந்தக்
காரியத்தை எடுத்துக் கொண்டாலும்
1.ஸ்தல புராணங்களைப் பாடும் போது
2.இந்த ஸ்தலம் தான் எல்லாவற்றிலும் உயர்ந்தது என்று அப்படித்தான்
பாடியிருப்பார்கள்.
இந்த பாடலில் கூறியபடி உயர்ந்த ஸ்தலம் என்ற எண்ணத்தில் அரசனின் ஆசையின்
நிலைகளைத் தான் இன்றைக்கு நாம் வளர்க்க முடிகிறது.
1.அரசர் வழியில் தான் நாம் செல்கின்றோமே தவிர
2.மெய் ஞானிகள் சொல்ல வழியினை நாம் கடைபிடிக்கும் முறையே அற்றுப்
போய் விட்டது.
மகரிஷிகள் சொன்ன உணர்வை நாம் எடுத்துக் கொண்டோம் என்றால் நம்முடைய
ஆலயங்கள் அனைத்துமே மனித குலத்தைப் புனிதப்படுத்தும் நிலைகள் கொண்டது. மக்கள் அனைவரையும்
ஒன்றி வாழச் செய்யும் ஞானக் கருவூலங்கள் தான் நம்முடைய ஆலயங்கள்.
1.உயிரே கடவுள்
2.நாம் எண்ணும் எண்ணமே உள் நின்று இயக்கும் கடவுளாகின்றது.
3.நாம் எண்ணும் உணர்வுகளே உடலாகச் சிவமாகின்றது.
4.நாம் எண்ணிய உணர்வே
வித்தாக ஊழ்வினையாக விநாயகர் என்று பதிவாகிறது.
மூலாதாரத்தில் மூண்டெழும் கனலை காலமறிந்து
கருத்தறிந்து செயல்படுதல் வேண்டும், விநாயகருக்கு அங்குசத்தைக் கையில் கொடுத்துள்ளார்கள்
ஞானிகள்.
முன் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கெல்லாம்
நாயகனாக மனிதனாக உருவான பின் அந்தக் கடும் அங்குசத்தை வைத்துத் தீமைகளை அடக்கும் வல்லமை
பெற்றவன் என்ற இந்த நிலையைத் தெளிவாகச் சாஸ்திரங்களில் காட்டப்பட்டுள்ளது.
நம்முடைய தத்துவங்கள் சாதாரணமானதல்ல.
அதை உணர்த்தும் ஆலயங்களும் சாதாரணமானதல்ல.
1.“சாமியிடம் சக்தி இருக்கின்றது…!”
என்ற இந்த நம்பிக்கையைத் தான் ஊட்டியுள்ளார்கள்.
2.எண்ணத்தால் அதை நமக்குள் எடுத்தால்
“நம் உயிர்...” அந்தச் சக்திகளைக் கொடுக்கின்றது என்ற நிலையை நாம் மறந்து விட்டோம்.
கோவிலுக்குச் சென்றால் நமக்குள் அந்த
உயர்ந்த தெய்வீகக் குணத்தை எடுத்து நம்மைச் சார்ந்தோருக்கெல்லாம் அது கிடைக்க வேண்டும்
என்று எண்ண வேண்டும். அது தான் உண்மையான பக்தி.