ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 18, 2019

கற்பனையாக எண்ணுவது பற்றியும் கனவில் காணும் படங்களையும் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது...!


1.கண்களால் பார்க்கும் செயல்படம்
2.அகத்திற்குள் தோன்றும் எண்ணத்தின் கற்பனைப் படம்.
3.கனவில் காணும் படம்
4.பிறர் சொல்லும் ஒலி (சொல்லை) கேட்டு அந்த எண்ணத்தில் எடுக்கும் படம்.
5.இப்படி மனித உணர்வில் நாம் நான்கு வகைப் படங்கள் எடுத்துக் கொண்டே உள்ளோம்.

நம்முடைய எதிரில் காண்பவை எல்லாம் நம் கண்கள் படமாக எடுத்துக் கொள்கின்றது.

கற்பனையாக எண்ணும் படத்தை நம் எண்ணத்தின் உணர்வில் ஒரு தடவை எந்த இடத்தை எண்ணிக் கற்பனையில் படம் எடுக்கின்றோமோ அதே தொடர் தான் எப்பொழுது அந்த இடத்தை எண்ணும் பொழுதெல்லாம் நினைவில் வருகின்றது.

அதே படத் தொடர்
1.மற்றவர்கள் ஒலியால் சொல்லக்கூடிய பொருளைப் பற்றி
2.எண்ணத்தின் நினைவு படமாகவே நம் ஆத்மாவில்
3.நாம் பார்க்காமலேயே படமெடுத்து விடுகின்றது - “கற்பனையில்...!”

எண்ணம் உறங்கிய நிலையில் ஆத்மாவில் பதிவான உணர்வின் தொடர் கொண்டு நாம் சுவாசிக்கும் பொழுது “தூக்கத்திலே மோதும் சுவாச ஒலியால்” கனவாக... அந்தப் படமாக... ஆத்மாவில் பதிவு நிலை ஏற்பட்டுவிடுகின்றது.

சரீர வாழ்க்கையில் வாழக்கூடிய செயல் தன்மையில் கண்களால்  மட்டுமல்லாமல் ஆத்மாவின் தொடர்பிலும் இப்படம் பதிவாகின்றது. (உதாரணமாக - செவி வழி கேட்கும் ஒலிகள்,,, மூக்கின் வழி சுவாசிக்கும் மணங்கள்... உடலில் உணரும் உணர்வுகள்...)

கண்களால் தான் நாம் அதிகமாகப் படமாக எடுக்கின்றோம். இருந்தாலும் அத்தகைய ஒளி கொண்ட சுவாச கதியில் இயக்கத்தின் தொடர் நம் கண்களின் தொடர்பில்லாமல்
1.கற்பனை... கனவு... வெளியிலிருந்து வரும் ஒலி இந்த மூன்றின் படமும்
2.உணர்வின் பதிவு கொண்டு சுவாசமெடுக்கும் காந்த மின் அலையால் ஆத்மாவின் படமாகப் பதிந்திருக்கின்றது.
3.ஆகவே பார்க்கும் பொருளைப் பற்றிய படங்களும் ஆத்மாவின் பதிவுப் படமே.

இந்தச் சரீரத்தின் செயலால் ஏற்படும் ஆத்மாவின் இயக்கத்தின் கதி தான் மனித வாழ்க்கையின் உயிர் செயல்பாடாக ஆத்மாவின் இயக்கம் ஜீவ காந்த சரீரமுடன் செயல் கொள்கின்றது.

இந்த ஜீவ காந்தமுடன்... ஆத்ம உயிரில்...
1.ஒலி... ஒளி கொண்ட பதிவின் தன்மை உணர்வின் நினைவலைகள் மோதும் செயல்பாட்டில்
2.விழிப்பு நிலை ஏற்படக்கூடிய ஐந்தாம் நிலையான ஞானத்தின் செயல் அறிந்து “தூர திருஷ்டி...!” (TELESCOPE போல்) என்ற காட்சியைக் காணும் நிலையும்
3.அதற்கடுத்த ஆறாம் நிலையில் அண்டத்தில் சுழலும் மண்டலங்களின் உண்மையை நம் ஆத்மா அங்கு சென்று அறியும் நிலையும்
4.ஏழாம் நிலையான படைப்பின் படைப்பாக்கும் செயல் தன்மையும்
5.அடுத்தடுத்த நிலைக்கு இந்த உயிரும் ஆத்மாவும் இணைந்து ஒளிப் படம் எடுக்கும் இந்த ஆத்மாவுக்கே ஏற்படக்கூடிய செயல் நிலைக்கு
6.ஆத்மாவின் விழிப்பு (நம் விழிப்பு நிலை) இந்த கண் ஒளியில் இருந்து பெறுவதற்கு
7.விழிப்படலத்தின் ஒளித் தன்மையை மின் காந்த ஈர்ப்பின் செயலுக்குக் கொண்டு வர வேண்டும்.

அதாவது முதலில் சொன்னபடி நான்கு விதமான படங்களை எடுக்கும் நாம் ஐந்து ஆறு ஏழு என்ற நிலையில் நமக்குச் சொந்தமான நம் உயிர் ஈர்ப்பது போல் அலைகளை இழுத்துக் கவர்ந்து இயக்கும் நிலைக்கு வர வேண்டும்.

மூக்கு வழியாகக் காற்றைச் சுவாசிப்பது போல் ஆன்மாவின் விழிப்பு என்ற அந்தக் கண்கள் வழியாக நுண்ணிய அலைகளைக் கவரும் நிலைக்கு வர வேண்டும்.

இன்று விஞ்ஞானக் கருவிகள் கவரும் நுண்ணிய அலைகளைக் காட்டிலும் மிகவும் நுண்ணிய நிலைகளைக் கவர முடியும் அது தான் ஆன்மாவின் விழிப்பு நிலை என்பது..!