ஸ்தல புராணம் என்பதே அரசர்களால் உருவாக்கப்பட்டது தான். அன்று வாழ்ந்த
புலமைகள் பெற்றோர் அரசனைப் புகழ் பாடுவது வழக்கம். ஏனென்றால் தன்னுடைய பிழைப்பிற்காக
அவ்வாறு செய்வார்கள்.
அந்தப் புகழ் பாடிய நிலைகள் வரப்போகும் போது ஸ்தல புராணத்திற்குப்
பேர் ஜாஸ்தியாகின்றது. அரசனை உயர்த்துவதற்காக ஸ்தல புராணத்தில் புகழ் பாடினால் அவனுக்குப்
பிழைப்பு வருகிறது.
1.ஆனால் மக்கள் உயர வேண்டும் என்று
2.ஏதாவது சொல்லி இருக்கார்களா என்றால் இல்லை.
அதனால் தான் திருவள்ளுவர் என்ன செய்தார்...? எந்த ஒரு அரசனையும்
அவர் புகழ் பாடவில்லை. அருள் ஒளியின் உணர்வின் தன்மை கொண்டு “ஆதி ஆண்டவன்...!” என்று
உயிரைத் தான் ஆதாரமாக வைத்தார்.
உயிரை வைத்துத் தான் பாடினார்கள். கடவுளாக உனக்குள் இயக்குவது எது…? என்ற நிலையில்
1.ஒருவனைக் காக்க வேண்டும் என்று எண்ணினால் காக்கும் நிலையாக அது
வரும்.
2.ஒருவனை அழிக்க வேண்டும் என்று எண்ணினால் அழிக்கும் உணர்வாக அது
வரும் என்று
3.அன்றைய பண்டைய தமிழில் பாடலாகக் கொடுக்கின்றார்கள்.
திருவள்ளுவர் ஏழ்மையில் வாடிக்கொண்டு இருக்கும் போது அவர் நுகரும்
உணர்வுகள் தனக்குள் எது... என்ன...? என்று எல்லாவற்றையும் அறிகின்றார்.
அவருடைய மனைவி வாசுகியோ தன் கணவன்படும் துயரத்தைக் கண்டு அருள் ஒளியை
இவருக்குள் பெற வேண்டும் என்ற உணர்வினைப் பாடலாகப் பாடுகின்றாள். அதாவது கணவனைத் தேற்ற
அதைப் பாடுகின்றாள்.
யார்...? வாசுகி...!
துணிகளை நெய்து அதன் வழி ஜீவித்து வந்தவர்கள் தான் வள்ளுவரும் வாசுகியும்.
ஒரு துண்டை நெய்து அதை விற்று வந்தால் தான் அன்றைக்குச் சாப்பிட முடியும். அந்த அளவுக்கு
வறுமை.
சந்தர்ப்பத்தில் அவர் நோய்வாய் படப்போகும் போது அந்த உயர்ந்த உணர்வு
தனக்குக் கிடைக்கவில்லையே என்ற ஏக்கத்தில் இருக்கின்றார்.
அப்பொழுது தான் அவருடைய மனைவி வாசுகி
1.தன் கணவர் உயர்ந்த நிலை பெற வேண்டும்.
2.அந்த உயர்ந்த ஞானம் பெற வேண்டும் என்று புலமையில் பாடுகின்றார்.
ஆக தன் கணவன் எல்லாவற்றிலும் உயர்வான நிலை பெற வேண்டும் என்று கணவன்
பெயரில் வாசுகி பாடியது தான் அந்த “வள்ளுவன் குறள்... வையகமெல்லாம் பரவியது...!” என்று
சொன்னது. வள்ளுவர் உயர வேண்டும் என்று வாசுகி பாடிய பாடல்கள் தான் அது.
ஆனால் அன்றைய அரசன் இதை ஏற்றுக் கொள்ள வில்லை.
இவர்கள் இருவரும் இப்படி வாழ்ந்த காலத்தில் தான் கொங்கணரும் வருகின்றார்.
அவன் மந்திர ஒலிகளைக் கற்று கொண்டு வந்தவன். மதச் சார்பில் கடவுள் என்ற நிலைகளை இந்த
மனித நிலைகள் எந்த பக்தி கொண்டானோ அவனைக் கைவல்யப்படுத்திக் கொண்டு வந்தவன்.
தனக்குள் தீமை என்ற நிலைகளில் யாராவது ஏவினால் அவர்களை எல்லாம் ஒடுக்கி
விடுவான்.
ஒரு சமயம் மலர் சோலைகளுக்கு மத்தியில் நடந்து வரும் பொழுது கொக்கு
ஒன்று பறந்து செல்லும் பொழுது அதனுடைய எச்சம் கொங்கணர் மீது பட்டுவிட்டது.
கொக்கு என்னை இப்படி அசுத்தமாக்கி விட்டது என்று தன் எண்ணத்தின்
பார்வையால் அதனுடைய சிறகை ஒடித்து விடுகின்றான். அந்தக் கொக்கு ஒன்றும் தவறு செய்யவில்லை.
கொங்கணர் தான் கற்றுக் கொண்ட உணர்வுகள் கொண்டு வளர்ந்திருந்தாலும்
போகும் பாதையில் தற்செயலாக எச்சம் விழுந்தது என்று சிநதிக்க முடியவில்லை.
“பிச்சாந்தேஹி...!” என்று கேட்டுக் கொண்டு வாசுகி வீட்டிற்கு வருகின்றான்.
அங்கே வந்தவுடன் பல குரல் கேட்கிறது. தன்னைச் சொல்லி “ஆண்டவனை வழிபடுபவனை நீ கவனிக்கவில்லையே...!”
என்று கொங்கணர் அகம் கொள்ளுகின்றான்.
ஏனென்றால் ஒரு வீட்டிற்குச் சென்று தான் பிச்சாந்தேஹி என்று யாசகம்
கேட்பார்கள். (கிடைத்தாலும் கிடைக்கவில்லை என்றாலும் வேறு வீட்டிற்குச் செல்ல மாட்டார்கள்)
ஆனால் வாசுகிக்கோ உடுத்திக் கொள்ளச் சரியான துணி இல்லை. துணி நெய்யக்கூடிய
குடும்பமாக இருந்தாலும் ஒரு முண்டு தான் உடுத்தி இருக்கிறது.
அதற்காக வேண்டி ஒரு துணியை மாற்றிக் கட்டிக் கொண்டு வருகிறது. பிச்சை
போட்டாலும் உடலை வெளியில் காட்டிக் கொண்டா இருப்பார்கள்...! அதனால் நேரமாகிப் போய்விட்டது.
வாசுகி வந்ததும் கொங்கணர் விழித்துப் பார்க்கின்றான்.
கொக்கென்று நினைத்தாயா கொங்கணவா...! என்கிறது வாசுகி.
கொக்கின் இறக்கையை ஒடித்தது உனக்கு எப்படித் தெரிந்தது...? நீ எங்கே
இதைக் கற்றுக் கொண்டாய்...! என்று கொங்கணர் கேட்கின்றார்.
கசாப்புக் கடைக்காரரிடம் கேள் என்கிறது வாசுகி. கசாப்புக் கடைக்காரனிடம்
கேட்டால் தான் “உனக்குத் தெரியும்...!” என்று சொல்கிறது.
கசாப்புக் கடைக்காரன் என்ன செய்கிறான்...? ஆடை வெட்டி வியாபாரத்தைச்
செய்கிறான். ஆட்டைக் கொல்லப் போகும் போது ஆட்டின் உயிர் அவனுக்குள் போய் அது மனிதனாகப்
பிறக்கிறது.
ஆனால் ஆட்டைத் தின்றவன் உடலில் என்ன செய்கிறது...? ஆட்டை ரசித்துச்
சாப்பிட்டவனை எல்லாம் ஆடாகப் பிறக்கச் செய்கிறது.
நீ கொக்கை வீழ்த்தினாய். உனக்குள் வீழ்த்திடும் சக்தி வருகிறது.
அதைக் கொல்லும் உணர்வு கொண்ட பின் நீ அதே நிலையையே அடையப் போகின்றாய் என்று வாசுகி
தன்னுடைய கவிப் புலமைகளில் “சொல்லாமல் சொல்கிறது...”
அந்தச் சொல்லுக்குள் எவ்வளவு அர்த்தம் இருக்கிறது...?
ஏனென்றால் நான் (ஞானகுரு) படிக்காதவன். நான் ஏட்டையும் படிக்கவில்லை
ஒரு கத்திரிக்காயும் தெரியாது. ஆனால் அன்று அவர்கள் வெளிப்படுத்திய உணர்வுகளின் பதிவு
இங்கே இருக்கிறது.
அதை நுகர்ந்து அக்காலத்தில் நடந்தைதை வெளிப்படுத்துகின்றேன். நான்
மட்டும் இல்லை. நீங்களும் இதைப் பார்க்கலாம்... உணரலாம்... நுகரலாம்...! உங்கள் வாழ்க்கையில்
அறியாது வரும் தீமையிலிருந்து விடுபடலாம்.
1.அதைப் பெறவேண்டும் என்ற ஏக்கத்துடன்
2.துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெற்றால் எல்லாம் தன்னாலேயே வரும்.