உதாரணமாக ஒரு மனிதன் விஷத்தினைக் குடித்து விட்டான் என்றால் எருமை மாட்டுச்
சாணத்தைக் கரைத்து மிதமான சூட்டில் அதன் மேலே காலை வைத்து விட்டால் உடலில் இருக்கும்
அந்த விஷத்தை இழுத்துவிடும். ஏனென்றால் எருமை மாட்டிற்கு விஷம் ஜாஸ்தி.
சாப்பிடும் ஆகாரத்தில் இருக்கும் விஷத்தை எல்லாம் தன் உடலாக்கிக் கொண்டு நல்ல
உணர்வைச் சாணமாக மாற்றுகின்றது எருமை.
எருமை மாட்டுச் சாணத்தை கரைத்து கொஞ்ச நேரம் அதில் காலை வைக்க வேண்டும். சாப்பிட
வேண்டியதில்லை. ஆனால் பாதத்தை அதில் வைக்கும் போது விஷத்தை முறிக்கும் ஆற்றல் வருகிறது.
இந்த இயற்கையில் உணவாக உட்கொள்ளும் உணவிற்குள் வரும் விஷத்தை மாற்றுவதற்கு இது
ஒரு வழி. எருமை மாட்டுச் சாணத்தில் விஷத்தை மாற்றியமைக்கக் கூடிய அந்தச் சக்தி உண்டு.
ஏனென்றால் தான் உணவாக உட்கொள்ளும் உணவிற்குள் மறைந்து வரும் விஷத்தினை எருமை தன் உடலாக மாற்றிக் கொள்கின்றது.
1அதிலே வரும் கழிவின் தன்மையை
2.நஞ்சினை மாற்றும் தன்மையாக… அந்தச் சாணம் வருகின்றது.
நம் வாழ்க்கையில் எப்போதெல்லாம் வேதனைப்படும் உணர்வுகளை நுகர்கின்றோமோ அல்லது
செவிகளில் கேட்கின்றோமோ அப்பொழுதெல்லாம் அந்த உணர்வின் உணர்ச்சிகள் உந்தப்பட்டு கண்கள்
உற்று நோக்கும். வேதனை உணர்வை நுகரச் செய்யும். உயிரிலே பட்ட பின் அந்த உணர்வுகளை நம்
உடல் முழுவதும் சுழலச் செய்யும்.
உடல் முழுவதும் வேதனை என்ற உணர்வுகள் சுழலப் போகும் போது நம் உடலுக்குள் இருக்கும்
நல்ல குணங்களின் அணுக்களிலும் இது சாடி விடுகிறது.
ஏனென்றால் விஷம் எதிலேயும் ஊடுருவிக் கலந்து விடும்.
நல்ல குணங்களை அதற்கு அப்புறம் நாம் எண்ண முடிகிறதா...? என்ன தான் நீங்கள் எடுத்தாலும்
இந்த விஷம் நல்ல குணங்களை அடக்கிவிடும்.
உதாரணமாக நீங்கள் வேதனைப்படும்படியான கடுமையான சொல்லை ஒருவர் சொல்லி விட்டால்
அடுத்து நீங்கள் என்ன செய்வீர்கள்...?
1.சொன்னால் சொல்லி விட்டுப் போகிறார்... அவர் சொன்னதை விட்டு விடுங்கள்...!
என்று
2.யாராவது உங்களிடம் சமாதானமாகப் போகச் சொன்னால் நீங்கள் கேட்பீர்களா...?
அட... உங்களுக்கு என்னங்க தெரியும்…? அவன் பேசுவது அவ்வளவு மோசமாக இருக்கிறது.
இத்தனை தீமைகளை எனக்குச் செய்கிறான் அவனை எப்படிச் சும்மா விட முடியும்...! என்று தான்
வரும்.
1.ஆகவே இது அந்த இயற்கையின் நியதிப் பிரகாரம்
2.இந்த உணர்வுகள் அவன் செயலாக்கங்களைத் தான் இயக்கும்.
ஒரு அடுப்பில் பாத்திரத்தை வைத்து நெருப்பைக் கூட்டி அந்தப் பாத்திரத்தில் என்னென்ன
பொருளைக் கலக்கின்றோமோ எல்லாம் கலந்து ஒன்றாகச் சேர்ந்து அது ஒரு பொருளாக மாற்றுகின்றது.
அதே போல் தான் வேதனை என்ற உணர்வுகளை நமக்குள் நுகர்ந்த பின் மற்ற நல்ல குணங்களுடன்
அது இணைந்து அதனுடைய விஷத் தன்மையாக நம்மை மாற்றுகின்றது.
அப்படி ஆன பின் அதற்குள் பல அதிகமான நல்ல குணங்களைச் சேர்த்தால் தான் இந்த விஷத்
தன்மை தணியும். ஆனால்
1.அதிகமான நல்ல குணங்களைச் சேர்ப்பதற்கு முன்னால்
2.அடுக்கடுக்காக அடுத்தடுத்து அந்த வேதனையை நாம் நுகரும் சக்தியே வந்து விடுகிறது
3.விஷத் தன்மைகள் அதிகமாக நம் உடலில் பரவத் தொடங்குகிறது.
இதை மாற்ற வேண்டுமா இல்லையா...?
அதற்காக வேண்டித்தான் நஞ்சினை வென்ற அந்த அகஸ்தியரைப் பற்றி உங்களுக்குள் திரும்பத்
திரும்ப உணர்த்துகின்றோம். அகஸ்தியன் தன் தாயின் கருவிலிருக்கும் பொழுதே நஞ்சினை வென்றிடும்
சக்தி பெற்றவன்.
பிறந்த பின்… அவன் வாழ்க்கையில் தன் பார்வையில் வரும் நஞ்சினை ஒடுக்கி… ஒடுக்கி…
ஒடுக்கி… அந்த நஞ்சினையே ஒளியாக மாற்றும் தன்மை பெற்றவன்.
அந்த அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமாக இன்றும் விண்ணிலே
அகண்ட அண்டத்தில் வரும் எத்தகைய விஷத்தையும் உணவாக எடுத்து ஒளியாக மாற்றிக் கொண்டே
உள்ளான்.
அப்படி ஒளியாக மாற்றிக் கொண்டிருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து
வரும் பேரருள் பேரொளியை நுகர்ந்து நம் உடலுக்குள் உருவாக்கிக் கொண்டால் நம்மை அறியாமல்
வரும் வேதனை கோபம் ஆத்திரம் சலிப்பு சஞ்சலம் குரோதம் பயம் போன்ற விஷமான உணர்வுகளை எல்லாம்
ஒடுக்கிவிடும்.
1.உடலில் வந்த விஷத்தை “மாட்டுச் சாணத்தை” வைத்து ஒடுக்குவது போல்
2.தங்கத்தில் கலந்த செம்பையும் பித்தளையும் “திரவகத்தை” ஊற்றி நீக்குவது போல்
3.நம் உணர்வில் கலந்து வரும் தீமைகளையும் துன்பங்களையும் நீக்க அந்தத் “துருவ
நட்சத்திரத்தின் உணர்வுகளை” ஒவ்வொரு நிமிடமும் நமக்குள் சேர்க்க வேண்டும்.
துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைச் சேர்க்காமல் நமக்குள் எந்த மாற்றத்தையும்
கொண்டு வர முடியும். ஏனென்றால் துருவ நட்சத்திரம் மனிதனை மாற்றியமைக்கும் சக்தி…!