ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 11, 2019

சர்க்கரை நோய் இரத்தக் கொதிப்பாக மாற முக்கியமான காரணம் என்ன...?


ஒரு எலி தன்னிச்சையாகச் சென்றாலும் அதன் மீது பாம்பு தன்  விஷத்தைப் பாய்ச்சி அதை உணவாக உட்கொள்கின்றது. பாம்பின் உடலில் அந்த விஷத்தைச் சேமித்து நாகரத்தினமாக மாற்றுகின்றது.

அதே போல் ஒடக்கான் பல்லி இவைகளிலும் விஷம் இருக்கும். பல்லி தன் இரையை விழுங்கிய பின் விஷத்தின் தன்மை கொண்டு அதை ஒடுக்குகின்றது. விஷத்தின் உணர்ச்சியின் தன்மையாக தனக்குள் கூட்டுகின்றது.

ஒடக்கானை எடுத்துக் கொண்டால் அதற்குள் சேமிக்கும் உணர்வின் அணுக்களை வலு கொண்டதாகச் சிந்திக்கச் செய்யும் நிலையாக உருவாக்குகின்றது அணுக் கருவாக.

விஷத்தின் சேமிப்பாகும் பொழுது பாம்பின் உடலில் நாகரத்தினமாக மாறுகிறது. ஆனால் ஒடக்கான் போன்ற மற்ற நிலைகளோ தன் உடலை விஷத் தன்மையாக மாற்றி கொள்கின்றது.

விஷம் கொண்ட உயிரினங்கள் தன் உடலில் விஷத் தன்மையாக மாற்றிக் கொள்வதனுடைய நோக்கம்
1.ஒரு இரையைத் தனக்குள் முழுமையாக விழுங்கப்படும் போது
2.இந்த விஷமும் இதற்குள் ஏற்படும் அமிலமும் சேர்த்து நீராகக் கரைத்துவிடும்.

கரைத்த உணர்வுகள் அதன் உடலுக்குள் சென்ற பின் அதனுடைய உணர்வின் தன்மையாக இரத்தத்தில் கலந்து உடலை உருவாக்கிய அணுக்களுகு ஆகாரமாகக் கொடுக்கும். இது எல்லாம் ஒரு உணர்வின் சத்தைக் கொண்டது.

அதே போல் தான் நாம் உணவாக உட்கொள்கிறோம் என்றால் நம் உடலில் அது முதலில் அமிலமாகத் தான் மாறும். விஷத் தன்மை கொண்ட நம் பித்த சுரப்பியின் சுரப்புக்குத் தக்கவாறு நாம் சாப்பிட்ட உணவுகளைக்  கரைத்த பின் அமில சக்தி குளுக்கோஸாக மாறுகின்றது.

1.குளுக்கோஸாக மாற்றி வரப்போகும் போது
2.இரத்தங்களில் இருக்கக்கூடிய செல்களில் இதன் உணர்வின் தன்மை சுழலச் செய்து சுழலச் செய்து
3.அது செவ்வணுக்களாக மாற்றுகின்றது.

அவ்வாறு மாற்றும் தன்மை அங்கு இல்லை என்றால் இந்த விஷத்தின் தன்மையால் குளுக்கோஸாகவும் சர்க்கரையாகவும் மாற்றி விடுகிறது. குளுக்கோஸ் அதிகமானால் நமக்குச் சர்க்கரைச் சத்து தான் அதிகம் ஆகும். ஆகவே அதை மாற்றும் வல்லமை அங்கு பெற வேண்டும்.

1.அடிக்கடி வேதனை என்ற உணர்வின் தன்மை நாம் சுவாசிக்கும் போதும்
2.வேதனைப்படுவோரைப் பார்க்கும் போதும்
3.ஒருவர் செயலைப் பார்த்து நம்மால் தாங்க முடியவில்லை என்ற நிலையில் சோர்வு என்ற உணர்வைக் கவரப்படும் போதும்
4.இந்த உணர்வுகளை எல்லாம் நுகரப்போகும் போது கோபமான உணர்வுகளையும் கலந்து நாம் சுவாசிக்கின்றோம்.

இந்த உணர்வின் தன்மை நமக்குள் கலந்த பின் இந்த உணர்வு பிரிக்கப்பட்டுக் குளுக்கோஸ் என்ற நிலையை மாற்றுவதற்கு மாறாக இதனுடைய உணர்வின் செல்கள் அழுத்த நிலைகள் கொண்டு இரத்தக் கொதிப்பாக ஒரு பக்கம் மாறும்.
1.சர்க்கரைச சத்து உள்ளவர்களுக்கு
2.ரொம்பச் சீக்கிரம் இந்த இரத்தக் கொதிப்பு வரும்.

இவைகளுக்கு எல்லாம் காரணம் என்ன என்றால் நாம் நுகர்ந்த உணர்விற்கொப்ப அந்த அணுக்களின் தன்மை எப்படி வீரியமோ அதற்குத்தக்க இயக்கமாகின்றது.

வைத்தியரீதியில் இரத்தங்களைப் பரிசோதித்து அந்த அணுத் தன்மைகளைச் சோதிக்கும் போது இரத்த கொதிப்பு இருக்கிறது... சர்க்கரை சத்து இருக்கிறது...! என்று சொல்வார்கள்.

சர்க்கரையும் கொதிப்பும் இந்த இரண்டு உணர்வின் மோதலின் தன்மை ஆகிக் கடைசியில் சலிப்பின் தன்மையாகப் பிரிக்கப்படும் பொழுது ஆஸ்துமா நோயாகி சளித்தன்மை அதிகமாகும்.

சர்க்கரை அதிகமான நிலையில் சளி உருவாகி எல்லா இடங்களிலும் அந்த உறையும் தன்மையாக அந்த அமிலங்கள் மாறி விடும். இப்படியெல்லாம் நம் உடலுக்குள் மாற்றங்கள் ஆகின்றது.

எத்தனையோ உடல்களில் தீமைகளை நீக்கி நீக்கி மனிதனாக வளர்ச்சி அடைந்து வந்தாலும் சந்தர்ப்பத்தால் நாம் சுவாசிக்கும் உணர்வுகளால் உடலுக்குள் அணுத் தன்மைகளை மாற்றி மனித உடலின் ரூபத்தையே மாற்றும் தன்மையாக வந்து விடும்.

கடைசியில் வேதனை வேதனை என்று மனிதனாக இருக்கும் உருவை மாற்றும் சக்தியாக வந்து விடுகிறது.

ஆகவே இதைப் போன்ற நிலைகளிலிருந்து விடுபட வேண்டும் என்றால் வேதனையை உருவாக்கும் சந்தர்ப்பங்களை எல்லாம் வேதனையை நீக்கும் சந்தர்ப்பமாக நாம் மாற்றிக் கொள்ள வேண்டும்.

எப்பொழுது தீமை என்று காணுகின்றோமோ அடுத்த கணமே ஈஸ்வரா...! என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று ஒரு ஐந்து நிமிடமாவது வலுவாக எண்ணி உடலுக்குள் சேர்க்க வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் வாழ்க்கையில் அறியாது சேர்ந்த தீய வினைகள் சாப வினைகள் பாவ வினைகள் பூர்வ ஜென்ம வினைகள் அனைத்தும் அகல வேண்டும் என்று ஒரு ஐந்து நிமிடம் தியானிக்க வேண்டும்.

எங்கள் சொல்லும் செயலும் புனிதம் பெறவேண்டும் எங்கள் பேச்சும் மூச்சும் உலக மக்களுக்கு நல்ல உணர்வாகப் படர வேண்டும் நாங்கள் பார்ப்பதெல்லாம் நலமும் வளமும் பெறவேண்டும் ஈஸ்வரா...! என்று நாம் சமப்படுத்திக் கொண்டே வர வேண்டும்.

1.இவ்வாறு எண்ணி எடுத்துக் கொண்டால்
2.நாம் சுவாசித்ததை நோயாக மாற்றாது. நாம் உடல் நலத்துடன் வாழ முடியும்.