1. கோவிலில் இன்று நாம் எப்படி
முறையிடுகின்றோம்?
கோவிலுக்குள் சென்று, என் பிள்ளைக்காக நான்
பாசமாக இருக்கிறேன் என்று எண்ணிக் கொண்டு, என் பிள்ளை
“இப்படித் துன்பப்பட்டுக் கொண்டிருக்கின்றானே.., தாயே” என்று வேதனையைக்
கொண்டு நாம் சுவாசித்து, பாலுக்குள் விஷத்தைப் போட்டு, குழந்தைக்கு விஷத்தை ஊட்டினால் என்ன செய்யும்?
ஏற்கனவே,
விஷத்தில் இருக்கிறது. இன்னும் கொஞ்சம் வேதனை கொண்ட விஷத்தை நீ உட்கொண்டு, அதன் கண் ஒளிகளிலே புலனறிவு ஐந்திலேயும்
பாய்ச்சப்படும் பொழுது என்ன ஆகும்?
நீங்கள் வேதனையை அதிகமாகக் கூட்டி
அதே
உணர்வின் தன்மை
நஞ்சை
உங்கள் உடலுக்குள் சேர்த்துக் கொள்கின்றீர்கள்.
இதைச்
சுவாசித்த உணர்வின் தன்மை உங்கள் உயிரின் தன்மையில் அது பிரம்மமாகி சிருஷ்டித்து விடுகின்றது.
இதைத்தான் ஆதிசங்கரரும், கடந்த கால மகரிஷிகளும் தெள்ளத் தெளிவாகக்
காட்டியுள்ளார்கள்.
நமது உடலின்
தன்மை அங்கே ஆலயமாக அமைக்கப்பட்டு, அந்த ஆலயத்திற்குள் நம் குணத்தின் சிறப்பின்
தன்மையை அங்கே வெளிப்படுத்தினார்கள்.
“தெய்வ குணத்தை” நுகரும் தன்மையை
அதை எடுக்கும் சக்தியை யாரும் நமக்குக்
காட்டவில்லை.
காசைக்
கொடுத்துவிட்டு, சாமியிடம் நீ இதை எனக்குச் செய்து கொடு
என்ற நிலைகளில்தான் நாம் வந்துவிட்டோம்.
2. தெய்வ குணத்தை நுகர்ந்து “நீ தெய்வமாகு” – ஞானிகள் காட்டியது
அன்று
மெய்ஞானிகள் ஆலயங்களில் தெளிவுறக் காட்டியுள்ளார்கள். அங்கே தெய்வம் நல்லது செய்யும் என்று காட்டப்பட்டுள்ளது.
அந்தத்
தெய்வ குணத்தைப் பெறவேண்டும் ஈஸ்வரா என்று தன் உயிருடன் தொடர்பு கொண்டு, அதைப் பெற்று, இதை உணர்த்திய அந்த
மகரிஷிகளின் அருள் ஒளி பெறவேண்டும் என்று ஏங்கச் செய்து, இந்த உணர்வின் சுவாசத்தை,
நினைவு கொண்டு ஈர்க்கப்படும் பொழுது, அது
தியானம்.
ஆலயங்களிலே
சிலைகளை வைத்திருக்கிறார்கள் என்றால், அந்தச் சிலைகளில் குணங்களின் தன்மையைக் காவியமாகப்
படைத்திருக்கிறார்கள்
அந்த தெய்வத்தை நாம் பார்க்கும் பொழுது, அந்தச்
சக்தியை, அந்த குணத்தின்
செயலாற்றலை நாம் உணரும்படி அமைத்திருக்கின்றார்கள்.
அந்தத்
தெய்வ குணத்தின் சக்தி நாங்கள் பெறவேண்டும். இதை அருளிய அந்த மகரிஷிகளின் அருள்
ஒளி பெறவேண்டும் என்று நாம் எண்ண வேண்டும்.
ஏனென்றால்
மனிதனுக்குள் விளைய வைத்த அந்த உணர்வின் தன்மையை, ஒரு மனிதனுக்குள் அது இயக்கப்படும் உணர்வின் ஆற்றலை, அந்த மகரிஷிகள் தனக்குள் அறிந்துணர்ந்து, ஆற்றல்மிக்க சக்தியை அவர்கள் பெற்று, அந்த ஆற்றல் என்ன செய்கிறது? என்ற நிலையை உணர்த்தினர்.
அந்த மகரிஷிகள் தான் இங்கே
வாழும் பொழுது, தனக்குள் சேர்த்து அவன் சமைத்து அனுப்பிய உணர்வின்
ஒளிகள் இங்கே உண்டு. அதை நாம் பெறுவதற்குத்தான் அன்று மெய்ஞானிகள் ஆலயங்களில்
அதைச் செய்துள்ளார்கள்.
நமக்குள், நம் முன் நின்று செயல்படும் ஒரு
உணர்வின் (அணுவின்) செயலைத்தான், அது தெய்வம் என்று ஆலயத்தில் காட்டியுள்ளார்கள்.
மனித உடலின்
உணர்வினுடைய நிலைகளை
அது
சக்தியாக, பெண்மையாக அது உருவாக்கி,
சக்தி என்ற
நிலையை நமக்குக் காட்டி
அக்குணத்தை
நீ பெற்று தெய்வமாகு என்று சொன்னார்கள்.
அதை நாம்
யாருமே செய்யவில்லை.
அந்தத்
தெய்வம் நல்லது செய்கின்றது. அந்தத் தெய்வ குணத்தை நாங்கள் பெறவேண்டும் என்று அந்த
மகரிஷிகளின் அருள் ஒளியை நாம் பெற்றோம் என்றால், அந்தக் குணத்தின் தன்மை கொண்டு நாம்
தெய்வமாகின்றோம்.