ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 11, 2013

மெய்ஞானியின் உணர்வை எட்டிப்பிடித்து, நமக்குள் மோதச் செய்தால் மெய்ஞானம் உருபெறும்

பிறருடைய துன்பத்தைப் போக்க, எடுத்துக் கொண்ட ஆற்றல்மிக்க சக்திகளை, உன் உணர்வின் சொல்லாலே இந்த உணர்வின் ஒளியைப் பாய்ச்சு என்றார் குருநாதர். இதை ஒவ்வொரு நிமிடமும் செய் என்கிறார் குருநாதர்

இதைச் சொல்லிவிட்டு, இதை ஏன் நீ செய்கின்றாய்? என்று கேள்வியும் கேட்கிறார் குருநாதர்.
நீ இதைச் செய்ய வேண்டிய அவசியம்?
உனக்கு நான் செய்ய வேண்டிய அவசியம்?

ஒவ்வொரு நிமிடமும் நான் ஏன் இதைச் செய்கின்றேன்? நீ ஏன் இதைச் செய்யவேண்டும்? நீ ஏன் அதைச் செய்கின்றாய்? நான் ஏன் இதைச் செய்யச் சொல்கின்றேன்? என்று பல வினாக்களை ஈஸ்வராய குருதேவர், எழுப்புகின்றார்.

அந்த மெய்ஞானிகள் உடலிலே விளைந்த உணர்வின் தன்மை, அவர்கள் அறிந்துணர்ந்த நிலைகள் கொண்டு பேசிய ஆற்றலின் தன்மைகள் காற்றிலே உண்டு.

இதைத்தான், இந்த உணர்வின் தன்மை
தனக்குள் எட்டிப்பிடித்து,
அந்த மெய்ஞானியின் உணர்வின் தன்மை
தனக்குள் வரும் பொழுதுதான்
அந்தக் கேள்வியும் பதிலும் என்ற நிலைகள்.

துருவ நட்சத்திரத்தின் அருளாற்றலை செவி கொண்டு கேட்டு, அதைப் பதிவாக்கிய நிலைகள் கொண்டு, தியானத்தில் எடுக்கக்கூடிய மெய் உணர்வின் தன்மை கொண்டு, அந்த மெய்ஞானிகள் உமிழ்த்திய முத்தான அந்த உயர்ந்த சக்தி பட்டவுடனே,
தன் உயர்ந்த உணர்வின் தன்மையை
மோதச் செய்யும் பொழுதுதான்
மெய்ஞானம் அங்கு உருபெறுகின்றது.

அந்த மெய்ஞானத்தின் தன்மை தனக்குள் கிளர்ந்தெழுந்து,
உணர்வின் தன்மை வெளிப்படுத்தும் பொழுதுதான்
விண்ணிலே அவர்கள் எங்கே சென்றார்களோ,
அவர்களுடன் தொடர்பு கொள்ள முடிகின்றது.

அந்தத் தொடர்பின் தன்மை வரப்படும் பொழுதுதான், அவரின் ஆற்றலை இங்கு சுவாசித்து, மனிதனின் வாழ்க்கையில் வரும் இருண்ட நிலைகளைக் கலக்கி, தனக்குள் ஒளியாக மாற்றும் ஆற்றல் வருகிறது.

ஆகவே, ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், வாழ்க்கையில்
நமக்கு துன்பம் என்ற நிலைகள் எப்போது வருகிறதோ,
அந்தத் துன்பத்தை மனதார நாம் ஏற்றுக்கொண்டு
அந்த இன்பத்திற்குண்டான வழியை
அந்த மெய்ஞானியின் அருள்ஒளியை நாம் ஏற்றுக்கொண்டு
அந்தத்  துன்பத்தை நீக்கும் முயற்சியை எடுப்பதற்கு, 
இந்த சந்தர்ப்பத்தை எடுத்து தியானமும்,
உங்களுக்கு ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தையும் கொடுக்கின்றோம். 

ஆத்ம சுத்தியின் தன்மையைக் கொடுக்கப்படும்போது, “ஓம் ஈஸ்வராஎன்று அந்த ஆத்மசுத்தியை நீங்கள் எடுக்கப்படும் பொழுது, வாழ்க்கையில் வரக்கூடிய துன்பத்தை நீக்கி, வாழ்வினுடைய நிலைகளில் மனிதனாகப் பெற்ற புனிதத்தன்மையை நாம் பெறுகின்றோம்.

இந்த உடலுக்குப்பின் பிறவியில்லா நிலை எனும் நிலையாக அந்த மெய்ஞானிகள் சென்ற எல்லையை அடையலாம்.