1. உங்கள் உயிரான ஈசனுக்கு
அபிஷேகம் செய்கின்றோம்
உங்கள் ஒவ்வொருவரின் உயிரையும் கடவுளென்று யாம்
மதித்து, அவன்
வீற்றிருக்கக்கூடிய ஆலயமாக அந்த உடலை எண்ணி, அந்த மகரிஷிகளின் அருள் ஒளி கிடைக்க வேண்டும்
என்று இந்த தியானத்தின் தொடர் கொண்டு, அனைவருக்குமே இதைத் தொடர் கொண்டு எடுக்க
முடிகின்றது.
ஏனென்றால் இரவிலே
படுக்கப்படும்போது, யாம் சொல்லும் முறைப்படி, ஆத்மசுத்தி
செய்துவிட்டு மகரிஷிகளின் அருள் ஒளி பெறவேண்டும் என்று ஏங்கியிருந்ததால் உங்களுக்குக்
கிடைக்கும்.
நீங்கள்
ஆலயங்களுக்குப் போய், ஆண்டவனிடத்தில் வரம் கேட்கின்றீர்கள். அதைப் போன்று, அனைத்து
உயிராத்மாக்களினுடைய நிலையும், உயிரைக் கடவுளாக மதித்து, அந்த மகரிஷிகளின்
அருள் ஒளி, உங்களுக்குக்
கிடைக்க வேண்டுமென்று யாம் எண்ணும்போது. அந்த ஆற்றல் மிக்க சக்தியை நீங்கள்
சுவாசிக்க நேருகின்றது.
நீங்கள் கோவிலில் எப்படி
அபிஷேகம் செய்கின்றீர்களோ, அதைப் போன்றுதான்
துருவ நட்சத்திரத்திலிருந்து வரக்கூடிய ஆற்றல்மிக்க உணர்வை,
உங்கள் உயிருக்கு, அபிஷேகம் செய்கின்றோம்.
2. துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை
ஒலிபரப்பு செய்கின்றோம்
ரேடியோ
நிலையைத்தில் ஒலிபரப்பு செய்தவுடன்,
ஒலி அலைகளாக காற்றலைகளிலே
மிதந்து வருவதை,
நாம் ரேடியோக்களில்
மீண்டும் சுவிட்சைப் போட்டவுடனே,
அதைக் கவர்ந்து வேலை
செய்கின்றது,
அதைப் போன்று, அந்தத்
துருவ நட்சத்திரத்தின் ஆற்றல் மிக்க சக்திகள் வந்து கொண்டிருப்பதை, காற்றிலிருந்து உங்களால் எளிதில் பெற முடியும்.
நாம் அனைவருமே TV, RADIO மூலமாக அனைத்தையும் பார்த்து, கேட்டு அறிகின்றோம். இதைப் போன்று விஞ்ஞான அறிவு
கொண்டு எங்கேயோ விண்ணிலே பரவக்கூடிய, அந்த உணர்வின் தன்மையை, அந்த அலைகளை
எடுத்து படங்களை அனுப்பும்படி செய்கின்றார்கள்.
அந்த படங்களை
எடுத்துக் கொள்வதற்காக வேண்டி கம்ப்யூட்டர் சிஸ்டம் என்று, அந்த உணர்வலைகளை
அது ஒன்றுக்குள் ஒன்று இணையச் செய்து, அது விண்ணிலே எத்தனையோ கோடி
மைல்களுக்கு அந்தப் பக்கம் பறந்து கொண்டிருந்தாலும், படமெடுத்து, அங்கிருக்கும்
உணர்வலைகளை தரையிலிருக்கும் ஆண்டெனாக்களிலே இயக்கப்படுகின்றது, கம்ப்யூட்டர் அந்த
நிலையை இழுத்துப் பதிவு செய்து விடுகின்றது.
3. துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை நீங்கள் பெற, கருவிழிக்குள் பதிவு செய்கின்றோம்
இதைப்போன்று
உங்கள் உடலின் தன்மை அனைத்துமே - “இயந்திரம்”,
நீங்கள்
தியானத்தாலே எடுத்துக்கொண்ட உணர்வின்
புலனறிவான கண் - “ஆண்டெனா”,
நாம்
தியானிக்கப்படும்போது நம் உடலுக்குள் எத்தனை உணர்வுகள் இருந்தாலும் கண்ணுக்குள்
தொடர்பு உண்டு. நாம் எந்தெந்த நிலைகளில் செலுத்துகின்றோமோ, அந்த உணர்வின்
தன்மை உங்கள் புலனறிவால் ஆற்றல்மிக்க நிலைகள் கொண்டு, கண்ணுக்குள்
இருக்கக்கூடிய கருவிழிக்குள் அது தொடர்பு கொள்கின்றது.
அவ்வாறு அது
தொடர்பு கொள்ளும் பொழுது, நமது குருநாதர் காட்டிய அருள் வழிப்படி உங்கள்
கண்ணுக்குள் இருக்கக்கூடிய,
அந்தக் கருவிழியான நிலைகளிலே மெய்ஞானிகளின் அருளாற்றல்களை நீங்கள் பெறவேண்டும்
என்று உணர்வை உந்தி, அந்த உணர்வைப் பதிவு செய்கின்றோம்.
அதாவது கண்ணாலே
பார்ப்பதும், அந்தப்
பார்வையின் நிலைகள் கொண்டு உணர்வின் ஆற்றலைப் பெருக்கச் செய்வதும், எமக்கு குருநாதர்
எவ்வாறு காட்டினாரோ, அந்த உணர்வின் நிலைகள் கொண்டே,
உங்கள்
கருவிழிக்குள் அந்த உணர்வின்
திரை ஈர்ப்பின்
சக்தியைப் பெறச் செய்யும்போது,
நீங்கள் இரவிலே
படுத்துக்கொண்டிருக்கும்போது
இது பதிவு
ஆகின்றது.
இவ்வாறு இரவிலே, இப்போது நீங்கள்
பழக்கப்படுத்திக்கொண்டபின், அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெறவேண்டும்
என்று ஆத்மசுத்தி செய்துவிட்டு நீங்கள் படுக்கும்போது இந்த
உணர்வலையின் ஓட்டங்கள் இருந்து கொண்டிருக்கும்.
அப்பொழுது, இரவிலே
நாம் தியானிக்கப்படும்போது, சப்தரிஷி மண்டலங்களில் இருந்து, துருவ
நட்சத்திரத்தில் இருந்து வரக்கூடிய அலைகளை,
நீங்கள் பெறவேண்டும் என்ற உணர்வுடன்
தொடர்பு கொண்டு செயல்படுத்தும் பொழுது,
அது தன்னிச்சையாகவே
அந்த உணர்வுகளை இழுத்துச்
செயல்படுத்திவிடும்.