ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 15, 2013

வரும் தடைகளையெல்லாம் நீக்கி நன்மைகள் பல செய்யத் துணிவு கொடுக்கின்றேன் - ஈஸ்வரபட்டர்

1. நல்லது செய்வதற்குத் தடைகள் ஏற்படும் பொழுது என்ன ஆகும்?
நாம் எல்லாம் உலகத்திற்கு எடுத்துக்காட்டாக வரவேண்டும். ஒரு சொர்க்க உலகமாக மாறவேண்டும் மற்றும் ஒருவொருக்கொருவர் உதவி செய்யும் பண்புகள் வர வேண்டும். என்றுதான் இதைச் சொல்கின்றோம்.
இருந்தாலும் ஒன்றிரண்டு அசுரகுணங்கள் வந்துவிடுகிறது.
இப்படியும் சில நிலைகள் (குற்றங்கள் புரிவோர்)
அசுர குணங்கள் வளர்ந்துவிட்டால் என்ன ஆகும்?

இதையெல்லாம் நினைக்கப் போகும் போதுதான், நமது குருநாதர் கூறுகிறார் "நீ என்னிடம் உதை வாங்கிது பெரிதல்ல. நல்லதை நீ மற்றவர்களுக்குக் கொடுக்க என்று போகும் பொழுது உன் மனது எத்தனை வேதனைப்படும்?

ஆனால், இத்தனை உயர்ந்த சக்திகளைக் கொடுத்தும்,
நீ இந்த வேதனயை எடுத்துக்கொண்டால்
நீ நரகலோகத்திற்குத்தான் போவாய்.
பாம்பாகப் போவாய்...
தோளாகப்  போவாய் என்று சொன்னார்.
2. நன்மைகள் பல செய்ய நமது குருநாதர் எமக்குக் கொடுத்த மன உறுதி
னென்றால், இத்தனை கஷ்டத்திற்கு மத்தியிலும், நல்ல உணர்வுகளை எப்படி வளர்க்க வேண்டும்? என்பதை அறிய வேண்டும். இந்த வழியில் வந்துவிட்டோம் என்றால், நாம் நன்றாக இருக்கிறோம் என்ற எண்ணங்களை எடுத்துப் பழக வேண்டும்.

அதே சமயத்தில், குறைகள் வந்து விட்டது என்றால், அந்தக் குறைகளை நாம் எப்படி குருகாட்டிய வழிகளில் நீக்க வேண்டும் என்ற எண்ணங்களை வளர்த்துப் பழக வேண்டும்.

நமக்குள் அறியாத நிலைகள் எத்தனையோ இயங்கும். அதை நாம் நீக்க வேண்டும்.

னென்றால், யாம் குருநாதரிடம் தெரிந்து கொள்ளச் செல்லும் பொழுது கஷ்டம ஒன்றும் தெரியவில்லை.

எம்மிடம் வருபவர்கள் எல்லாம், எங்களுக்குத் தொழில் வளர வேண்டும். நோய் நீங்க வேண்டும். நாங்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று கேளுங்கள் என்றால் யாரும் கேட்கவில்லை.

எனக்கு அந்தக் கஷ்டம் இந்தக் கஷ்டம், அந்த வேதனை, இந்த வேதனை என்று தான் கேட்கிறார்கள். 

சாமி, என் கஷ்டம் என்னை விட்டுப் போகமாட்டேன் என்கிறது என்று திரும்பத் திரும்பச் சொல்கின்றார்கள். நாம் இதிலிருந்தெல்லாம் இருந்து மீளவேண்டும் என்றுதான் யாம் சொல்கின்றோம்.

ஒருவர் தப்பு செய்கிறார் என்று சொன்னால், அவர்கள் யார் என்று யாம் தெரிந்துகொள்ள முடியும். 

ஆனால்தப்பு செய்பவர்களையும்குறை கூறுபவர்களையும் தெரிந்து கொண்டால் குறைகளைத்தான் யாம் வளர்க்க முடியும்.

"எல்லோருக்கும் அந்த அருள்ஞானம் கிடைக்க வேண்டும் என்ற நிலையைப் பெறமுடியாது.

அதனால்தான், பல இன்னல்களையும் கஷ்டங்களையும் எம்மைப் படச்செய்து, அதிலிருந்து பிறருடைய துன்பங்களை நீக்க நீ என்ன செய்ய வேண்டும்?” என்று மன உறுதியைக் கொடுத்தார்  ஈஸ்வராய குருதேவர்.