நாம் பல கோடிச் சரீரங்களில்
பல கோடி உணர்வுகளை எடுத்து,
கோடிக்கரையாக இருக்கின்றோம்.
துருவ நட்சத்திரத்தின் பேரருள்
பேரொளி, எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் என்று ஒவ்வொரு அணுக்களிலும் சேர்க்க வேண்டும். அப்பொழுது கோடி
அணுக்களும் தனுசுகோடி ஆகின்றது. அந்த அணுக்கள் அனைத்தும் ஒன்றாக்கப்படும் பொழுது உயிரைப்
போலவே ஒளியாகின்றது.
துருவ நட்சத்திரத்தின் பேரருள்
பேரொளியை நாங்கள் பெறவேண்டும். நாங்கள் பார்த்தவர்கள் குடும்பமெல்லாம் படரவேண்டும்
என்று எண்ணிப் பழகவேண்டும்.
இது விஷ்ணு தனுசு.
விஷ்ணு தனுசை உங்களிடம் கொடுக்கிறோம்.
அந்த மீறிய சக்தி வாய்ந்த நிலைகளைப் பெற்று, நல்லவைகளை உருவாக்கி, தீமைகளை நீக்கி அவைகள் உட்புகாத வகைகளில்
தடுத்துப் பழகவேண்டும்.
சாமி செய்வார் என்று எண்ணவே கூடாது.
நீங்கள் நினைப்பதை உங்கள்
உயிர் உருவாக்குகின்றது.
உருவாக்கியதை உடலுக்குள்
அணுவாக்குகின்றது.
அந்த அணுவின் மலம் உடலாகின்றது.
அதன் வழி தான் நாம் செயல்படுகின்றோம்.
உங்கள் வாழ்க்கையில் தீமைகளைக்
காணும் பொழுதெல்லாம் ஈஸ்வரா என்று உயிரை எண்ணி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி
நாங்கள் பெறவேண்டும். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்தத்தில் கலந்து,
உடல் முழுவதும் படரவேண்டும் என்று எண்ணவேண்டும்.
வாழ்க்கையில் ஒவ்வொரு குணங்களைச்
சந்திக்கும் பொழுதும் இதை எண்ண வேண்டும். ஒவ்வொரு நொடியிலும், வாழ்க்கையையே தியானமாக்க
வேண்டும்.
எத்தனையோ கோடி உணர்வுகள்
நமக்குள் உண்டு. அனைத்தையும் ஒன்றாக்கிவிட்டால், தனுசுகோடி.
உயிரோடு சேர்த்து,
உணர்வுகள் எல்லாம் ஒன்றாகின்றது
அப்பொழுது நமக்கு வேறு எண்ணமே
இருக்காது.
துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டமான சப்தரிஷி மண்டலத்துடன்
இணைகின்றோம். எமது அருளாசிகள்