ஒருவர் தீயிலே கருகி இறந்துவிட்டால்,
அந்த உயிர் அழிவதில்லை. ஆனால், இந்த உணர்வுக்குள் நாம் எவ்வளவு மகிழ்ச்சியாகப் பேசினோமோ,
அந்த உணர்வின் நிலைகள் அனைத்தும்
மறைந்து,
தீயில் எரிந்த வேகத் துடிப்பின்
நிலைகளாக
அங்கே மாறிவிடுகின்றது.
அவ்வாறு அந்த மனிதன் இறந்துவிட்டால்
உடலை விட்டு உயிரான்மா வெளியில் சென்றுவிடுகின்றது. உடல் கருகிவிடுகின்றது. கருகிய
உணர்வுடன் ஆன்மா வெளியில் வருகின்றது.
உயிருடன் இருக்கப்படும் பொழுது,
யாராவது அவர் மேல் பாசம் வைத்திருந்தால் போதும். “இந்த மாதிரி தீயில் கருகி இறந்துவிட்டதே” என்ற ஏக்க உணர்வை அதிகமாகக் கூட்டினாலும், அதே சமயத்தில் இறக்கும்
பொழுது அந்த உயிரான்மா, யார் மேலாவது அன்பு கொண்டு “அவரை விட்டுப் பிரிகின்றோமே” என்ற ஏக்கத்துடன் இருந்தாலும் சரி, அவரின் உடலுக்குள் சென்றுவிடும்.
அதாவது தீயில் கருகும் பொழுது,
அந்த உணர்வின் எண்ண அலைகளுக்குள்
பிறர் மேல் உள்ள அந்தப் பாசம்
அது இழுத்து
அந்த மணம் முன்னிலையில் கூடி,
பாசமாக உள்ளவரின் உடலுக்குள்
சென்று,
இது தீயில் கருகும் பொழுது
எத்தனை அவஸ்தைப் பட்டதோ
அதே செயலை அந்த உடலுக்குள் போய்ச் செய்யும்.
இதற்குப் பெயர் சாகாக்கலை.