வீட்டில் உள்ள
கஷ்டம் நீங்கவேண்டும் என்றால், அந்த மகரிஷிகளின் அருள் ஒளியைப் பெறவேண்டும், என்று எண்ணி, அந்த
மூச்சலைகளை எடுக்க வேண்டும்
ஆனால், குருவிடம் கேட்கும்
பொழுது, என்
வீட்டில், கஷ்டம் என்னை விட்டுப் போகமாட்டேன் என்கிறது என்றுதான்
கேட்கிறார்கள். ஏனென்றால், இந்த உணர்வின்
தன்மை அதைப் பேசவைக்கின்றது.
யாம் இதை
நீக்குவதற்குத்தான்,
அதாவது விஷத்தின்
தன்மையை சுவாசிக்கும்
இந்த உணர்வை
நீக்குவதற்குத் தான்,
உங்கள் உடலில்
இருந்து
கஷ்டம் என்ற சொல்லை நீக்குவதற்குத்தான்
இத்தனை உபதேசங்களையும் கொடுக்கின்றோம்.
விஷம் அது
மற்றொன்றை விழுங்கித்தான் செயல்படுகின்றது. அது விழுங்கிய நிலைகள் கொண்டுதான்
உணர்வுகள் மாறுகின்றது. இதைப் போன்று, ஒவ்வொன்றும் அது விழுங்கிய தன்மை கொண்டுதான்,
தன் நிலை அடைகின்றது.
அதாவது, ஒரு
அணுவின் தன்மை அது விழுங்கிய நிலைகள் கொண்டு சூரியனாக மாறுகின்றது. சூரியனாக மாறி
உலகத்தையே சிருஷ்டிக்கின்றது.
இதைப் போன்று, மெய்ஞானியான நமது குருநாதரின்
அருள் ஒளியை, அவர் உணர்த்திய உணர்வின் தன்மையை நான் விழுங்கினேன். விழுங்கிய
உணர்வுகள் கொண்டுதான், அந்த உணர்வின் சக்தி வருகின்றது.
ஆக, அந்த
மெய்ஞானியின் உணர்வு கொண்டு மெய் ஒளியை நாம் பெறமுடிகின்றது. யாம் உபதேசிக்கும்
இந்த உணர்வின் தன்மையை நீங்கள் செவிகொண்டு கேட்டு, அதை இழுக்கக்கூடிய நிலைகள்
இருக்கின்றது.
இதைப் போல மெய்ஞானியின்
அருள் ஒளியை நீங்கள் விழுங்கினால்தான் உங்களுக்குள் அந்த விஷத்தின் தன்மை
அடிமையாகின்றது. விஷத்தின் தன்மை நமக்குள் அடிமையாகும் பொழுதுதான் உணர்வின்
எண்ணத்தை நாம் ஓங்கிச் செயல்படுத்த முடிகின்றது.
ஆக இதைப் போன்று மெய்ஒளியின் தன்மையை நீங்கள் துருவ நட்சத்திரத்தின் சக்தியை
எடுக்கும்போது,
இந்த உணர்வுக்கு ஊக்கம் கொடுக்கும்போது,
உங்களுக்குள் இருக்கக்கூடிய துன்பமான நிலைகளை நீக்கி,
உங்களுக்குள் உணர்வின் தன்மை சுவாசிக்கச் செய்து,
இருண்ட நிலைகளில் இருந்து அந்த நஞ்சை மாய்த்துவிடும்.
நாம் எப்படி கருணைக்கிழங்கை வேகவைத்து அதில் உள்ள நஞ்சினை நீக்கி, நமக்குள்
போசாக்கான நிலைகள், சத்தாக நமக்குள் உட்கொள்ளுகிறோமோ, அதைப்போன்று
ஒவ்வொரு நிலைகளில் நமக்குள் உருவாக்குவதற்கே இந்த நிலைகளைச் செய்கின்றோம்.
ஏனென்றால், இந்த
உபதேசத்திற்குள்,
உங்களுக்குள் உணர்வின் வித்துக்கள், நல்ல வித்துக்களை
ஊன்றியிருக்கின்றேன்.
இதை மறவாது இந்த
துருவ நட்சத்திரத்தினுடைய சக்தியை எடுத்து, அடுத்து நீங்கள் வாரத்தில் ஒரு நாள் கூட்டுக்
குடும்ப தியானங்கள் இருந்து கணவன் மனைவி இம்முறைப்படி செய்யுங்கள்
அப்படிச் செய்தால், இந்த வாழ்க்கையிலே மனிதனுடைய
கடமையை, பூரணமாக
நீங்கள் ஏற்றுக் கொண்டவர்கள் ஆகிறீர்கள். இந்த வாழ்க்கையிலே, இந்த விஞ்ஞான உலகத்திலே வரக்கூடிய எத்தகைய
நச்சுத்தன்மை இருந்தாலும், அதை மாய்த்துவிட்டு உங்களுக்குள் இந்த ஒளியின்
சுடராக நீங்கள் பெறமுடியும்.