நம் வாழ்க்கையில் நாம் தவறு செய்யாமலே,
நம்மையறியாமல் “பிறிதொரு ஆத்மா” நம் உடலுக்குள் வந்து,
நம்மையறியாமல் “பிறிதொரு ஆத்மா” நம் உடலுக்குள் வந்து,
நம்முள் புகுந்து பல எண்ணங்களைத் திசைத்திருப்பும்,
அல்லது நம்மை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும்,
இதைப் போன்று, நாம் பாசத்தாலே ஒருவருக்கு நன்மை செய்தாலும்,
அந்தப் பாசத்தின் உணர்வு கொண்டு,
ஒரு ஆத்மா நமக்குள் வந்துவிடும்
சந்தர்ப்பம் இருக்கின்றது.,
உடலுக்குள் புகும் இத்தகைய ஆன்மாக்கள்
நமக்குத் துன்பங்களை விளைய வைத்தாலும், நாம் இந்த தியானத்தின் நிலைகள் கொண்டு, அதை
மாற்றி, நாம் செய்த நன்மையின் தன்மையைக் காக்கவும் முடியும்.
நாள் முழுவதற்கும், நாம் உடலிலே உழைக்கின்றோம். ஒரு பத்து நிமிஷம் நாம் “மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெறவேண்டும்”, “எங்கள் ஜீவாத்மா பெறவேண்டும்” என்று ஆத்மசுத்தி செய்து நாம் பழகிக் கொள்ள வேண்டும்.
ஆத்ம சுத்தி செய்துவிட்டு, அந்த உயிராத்மாக்களை விண் செலுத்த வேண்டும். அவ்வாறு விண் செலுத்தி விட்டால்,
பாசத்துடன் இருக்கக்கூடிய நிலைகள்,
நம் உடலிலே இருந்தாலும்,
அந்த இரு உணர்வின் தன்மை,
நம் உடலுக்குள் ஆற்றல் மிக்கதாக மாறும்.
அவ்வாறு ஆற்றல் மிக்கதாக மாறி, நாம் அந்த சப்தரிஷி மண்டலங்களை எண்ணினோம் என்றால், அந்த இரு சக்தியினுடைய துணை இருப்பதனாலே, விண்ணிலிருந்து பல ஆற்றல்களை நாம் பெற்று, அதற்கும் ஒரு மோட்சத்தைக் கொடுக்கலாம்.
நாம் செய்த இந்த நன்மையின் தன்மையை, நம் உடலில் பல பிணிகள் இருந்தாலும், அதை மாற்றியமைத்து, மனிதன் என்ற தன் நிலைகள் பெறலாம்.
இதைக் காட்டிலும், இதைப்போல நாம் எடுத்துப் பழகிக்கொண்டால், காற்றிலே மிதந்து கொண்டிருக்கும், விஞ்ஞானத்தினால் வரும் பேரழிவான நச்சுத்தன்மைகள் நம்மைத் தாக்காது,
நம்மைக் காக்கவும் முடியும்.