ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 13, 2013

நமக்காகப் பிரார்த்திக்கக்கூடிய குரு வேண்டும் - ஞானகுரு

உங்களை நீங்கள் நம்ப வேண்டும், உங்களுக்குள் இருக்கக்கூடிய உயிரை ஈசனாக மதிக்க வேண்டும். எதை எண்ணி நீங்கள் வலுக்கொண்டு கொடுக்கின்றீர்களோ, அதை நிச்சயம் நமது உயிரான ஈசன் சமைத்துவிடுவான்

நீங்கள் எங்கே செல்ல வேண்டும் என்று உணர்வின் நிலைகளைச் செலுத்துகின்றீர்கள், இதற்கு, குரு வழி கொண்டு உங்களைப் பிரார்த்திக்கக்கூடிய குரு வேண்டும்.

அப்படிப் பிரார்த்திக்கக்கூடிய குருவினுடைய தன்மை பெற்றால்தான் உங்கள்  உணர்வின் தன்மை வலு கூடும். விண்ணின் துருவ நட்சத்திரத்தின் அருளாற்றலையும், சப்தரிஷி மண்டலங்களின் அருளாற்றலையும் பெற, நமது குருநாதர் எமக்குச் சில சில முறைகளைக் காட்டியுள்ளார்.

அந்த முறைப்படி விண்ணின் ஆற்றல்மிக்க சக்திகளை யாம் நினைவு கொண்டு எடுத்து, உங்கள் எல்லோருக்கும் கிடைக்கச் செய்ய ஜெபமிருந்து கொண்டிருக்கின்றோம்.

குரு வழியிலே யாம் செய்யும் பொழுது, நீங்களும் அந்த உணர்வுகளைச் சுவாசித்தால், குரு பலனின் தன்மையைப் பெறமுடியும்.