ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 17, 2013

யாம் பிரார்த்தனை செய்யும் பொழுது, நீங்கள் நல்லது நடக்க வேண்டும் என்று வலுகூட்டுங்கள்

1. எமது பிரார்த்தனையே உங்களுடைய மகிழ்ச்சிதான்
நமது குருநாதர் காட்டிய அருள் வழிகொண்டு, உங்கள் உயிரான ஈசனை நீங்கள் எண்ணி, அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறவேண்டுமென்று உங்களிடம் வரம் கேட்கவே, காலை நான்கு மணிக்கெல்லாம் உங்களைப் பிரார்த்திக்கின்றேன். 

அந்த நேரத்தில் நீங்கள் ஒவ்வொருவரும் இந்த தியானத்தை எடுக்கப்படும் பொழுது, நாம் சந்தித்த அனைவரும் மகரிஷிகளின் அருளாலே அவர்கள் நலம் பெறவேண்டுமென்று உங்களுக்கு உணர்ச்சிகள் தூண்டப்படும்.

நம்மைச் சேர்ந்த தியானவழி   அன்பர்கள், நீங்கள் வியாபாரத்தாலோ மற்ற நிலைகளிலோ தொடர்பு கொண்டிருந்தாலும், இதைப் போன்று உணர்ச்சிகள் தட்டியெழுப்பும்போது, உங்கள் உணர்வின் எண்ணங்களை
மற்ற உயிரின் நிலைகள் கொண்டு,
தொடர்பு கொண்ட அந்த உயிராத்மாக்களை,
நீங்கள் சந்தித்தோர் அனைவரும் மகிழ்ந்திருக்க வேண்டும் என்ற உணர்வைச் செலுத்துங்கள்.

அந்த சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் அவர்கள் பெறவேண்டும் என்று நீங்கள் எண்ணிப் பாருங்கள். அவர்கள் மகிழ்ந்து, நீங்கள் சந்தித்தாலும் அடுத்து ஒரு நன்மையின் தன்மையினுடைய நிலைகளை நீங்கள் சாதாரண நிலைகள் கொண்டு எண்ணிப்பாருங்கள்.

உங்களை அறியாமல் கோபப்படச் செய்யும், துன்பப்படச் செய்யும், துன்புற்றுக் கொண்டிருக்கும் பிணியின் நிலைகளிலிருந்து விடுபட்டு உங்களுக்குள் மகிழ்ச்சியைக் காணலாம். உங்களை நீங்கள் நம்ப வேண்டும்.

புழுவிலிருந்து மனிதனாகத் தோன்றும் வரையிலும், அந்த உணர்வின் ஆற்றல்மிக்க நிலைகளை நமக்குள் சமைத்துக் கொடுப்பவன் உயிரே.

நம்மை ஆள்பவனும், நாம் கொடுப்பதைப் படைப்பவனும், அதைப் படைத்தபின், உணர்வின் தன்மையை செயலாக்கத்திற்கு அறிந்துணர்ந்து செயல்படும் தன்மையும் கொடுப்பது
நமது உயிரே.
அவனன்றி ஒரு அணுவும் அசையாது.

நமக்குள் உயிராக நின்று செயல்படும் நிலைகளில், நாம் எதைக் கொடுத்தாலும் சமைக்கின்றான். ஆனால், அவன் அறியாமல் எதுவுமே செயல்படாது. நாம் எண்ணியதைப் படைத்துவிடுவான், சமைத்துவிடுவான்.

ஆகையினாலே, மகரிஷிகள் காட்டிய அருள் வழிகளில் சப்தரிஷிகளின் அருள் ஒளியை நாம் பெறுவோம். அதைச் சமைத்துவிடுவான் (நமது உயிர்).

அந்த உணர்வின் ஆற்றல் மிக்க நிலைகள் நமக்குள் ஒளியின் சரீரத்தாலே, நம் மூச்சும், பேச்சும் நாம் சந்திப்போருடைய இருள்களை மாய்த்து, அவர்களுக்குள் மகிழ்ச்சி ஏற்படுத்தி, அந்த உணர்வின் சுவாசமே நமக்குள் அது மகிழ்ச்சியை ஊட்டும்.
2. உங்களை மகிழ வைக்கும்படி சொன்னார் குருநாதர்
ஆக, மனிதன் என்ற தன்னிலை அடைந்து, நாம் மெய் ஒளியைக் காண முடியும். உங்களை நீங்கள் நம்பி, அந்த நிலைகள் பெறுவதற்குத்தான் உங்களுக்குள் ஆற்றல் மிக்க நிலைகளைப் பெறச் செய்வது.

நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர், எமக்கு பல இன்னல்களைக் கொடுத்து, அந்த இன்னல்களுக்கு மத்தியிலே, உணர்வின் செயலாக்கத்தை  நீ எப்படிப் பெறவேண்டும்? என்று உணர்த்தினார்.

அவர் உணர்த்திய அருள் வழியை யாம் பெற்றபின்,
உங்களையெல்லாம் பூஜிக்கச் சொன்னார்,
உங்கள் உடல்களையெல்லாம் மகிழவைக்கும்படி சொன்னார்,
அந்த ஆலயங்களெல்லாம் புனிதம் பெறவேண்டும் என்று நீ செய், என்றார். அதைத்தான் செய்கிறோம். 

குருநாதரின் திருப்பணியைத்தான் யாம் செய்து கொண்டிருக்கின்றோம். 
3. யாம் பிரார்த்தனை செய்யும் பொழுது, நீங்கள் நல்லது நடக்க வேண்டும் என்று வலுகூட்டுங்கள்
இதைக் கேட்டுணர்ந்தவர்கள், நீங்கள் வீட்டிலிருந்து இதைச் செய்யப்படும் பொழுது, உங்களுக்காக வேண்டி யாம் செய்யும் இந்தப் பிரார்த்தனைகள் உங்கள் உணர்வுக்குள் சிக்குகின்றது.

எல்லாமே, அந்த அருள் வழியில் நலமாக, நல்லதாக ஆகவேண்டும் என்று எண்ணுங்கள். நலமாக வேண்டுமென்று
உங்கள் எண்ணத்தை வலுக்கூட்டுங்கள்.
வேதனையான உணர்வுகளைக் கலந்துவிடாதீர்கள்.
           
குடும்பமானாலும், குழந்தைகளானாலும், தொழிலானாலும், மகரிஷிகள் அருள் சக்தி பெறவேண்டும் என்று குருநாதர் அருள் ஒளியாலே இது நலமாக வேண்டும் என்று, ஒவ்வொரு நிமிடமும் எண்ணி அதைச் சுவாசிக்கும் பொழுது, அது ஆற்றல்மிக்க சக்தியாக உங்களுக்குள் கூடுகின்றது.

உங்கள் மூச்சின் அலைகள், எதை நல்லதாக வேண்டும் என்று எண்ணுகிறீர்களோ, அந்த எண்ணங்களுக்குள் அது பிரதிபலிக்கும்.
இப்படி நீங்கள் வளர்ந்தால் தான்,
உங்கள் மூச்சின் அலைகள்தான்
இங்கே காற்று மண்டலத்திலே படரவேண்டும்.

சாமி செய்வார், சாமி செய்யும், ஜோசியம் செய்யும், தெய்வம் செய்யும், அந்தத் தெய்வம் செய்யும் என்பதற்குப் பதில், நீங்கள் இதைப் போன்று எண்ணி, அந்த உணர்வை உடலுக்குள் செலுத்தும் பொழுது, அதுவே உங்களுக்குள் தெய்வமாக உள் நின்று செயல்படும்.

இதைத்தான், ஆதிசங்கரர் அத்வைதம் (கண்ணுக்குப் புலனாகாத காற்றில் மறைந்துள்ள) என்ற நிலையில் தெளிவாகக் காட்டியுள்ளார். ஆக, அதைப் பின்பற்றி அந்த வழிகளிலே நீங்கள் பெறவேண்டும் என்று, யாம் பிரார்த்திக்கின்றோம்.