தீமை செய்யும் அணுக்கள் உடலுக்குள்
உருவாகாமல் தடுக்க வேண்டும் என்றால் என்ன செய்யவேண்டும்?
தீமையானவற்றைச் சந்தித்த உடனே
நம் நினைவு புருவ மத்திக்குச் செல்ல வேண்டும்.
“ஈஸ்வரா” என்று உயிரான ஈசனிடம்
கண்ணின் நினைவினைச் செலுத்தி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய்
ஈஸ்வரா என்று அங்கே நிறுத்துதல் வேண்டும்.
உதாரணமாக நாம் சாலையில் போகும்பொழுது விஷத்தை நுகர்ந்து விட்டால், அதனின் அணுக்கள் உடலில் உருவாகி, விஷத்தன்மைகளை உணவாகச் சாப்பிட்டு வளரும் உடலாக மாற்றிவிடுகின்றது.
ஆகவே, கெட்டதை
நுகர்ந்தாலும், உடலுக்குள் போகாமல் தடுக்க வேண்டும், அதற்குத்தான் உங்களை ஆயுள் மெம்பராக துருவ
நட்சத்திரத்துடன் இணைப்பது.
கெட்ட வாசனை
வரும்பொழுது,
“ஈஸ்வரா” என்று நமது உயிரை புருவ
மத்தியில் எண்ணி,
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும்
என்று இங்கே புருவ மத்தியில் நிறுத்திவிட வேண்டும்
வாசனை சிறிதுதான்
உள்ளே போகும். “துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள்
உடலில் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும்” என்று வலுக்கூட்ட
வேண்டும்.
அவ்வாறு செய்யும்பொழுது, சிறிது
விஷத்தையும் அது தள்ளிவிடும், ஏனென்றால்
அதைவிடச் சக்தி வாய்ந்தது துருவ நட்சத்திரத்தின் ஆற்றல். நமது ஆத்மா சுத்தமாகின்றது,
நமது கையில்
அழுக்கு பட்டது என்றால்,
நாம் கையைக்
கழுவுகின்றோம். அதைப் போன்றுதான்,
நம் ஆன்மாவில்
பட்டவுடன், சுத்தப்படுத்தவேண்டும்.
அப்படிச் சுத்தப்படுத்துவதற்குத்தான், துருவ
நட்சத்திரத்தின் உணர்வை அதிகமாகச் சேர்த்துக் கொள்ள
வேண்டும். அந்த உணர்வுகள்
உடலில் சக்திவாய்ந்ததாக ஆகும் பொழுது, தீய வாசனைகளைக் குறைக்கும்.
இவ்வாறு, நமது வாழ்க்கையில்
வரும் தீமைகளை அகற்றத்தான், எம்மை குருநாதர் துருவ நட்சத்திரத்துடன் ஆயுள்
மெம்பராக்கியது போன்று, உங்களையும் இணைக்கச் செய்கின்றோம்..