1. பிறருடைய கஷ்டங்களைப் பார்த்து, குறி சொல்பவர், ஜோதிடம் சொல்பவரின்
நிலைகள்
இன்று பக்தியின் மார்க்கங்களிலே, எத்தனையோ எண்ணங்களை நமக்குள்
நாம் செருகி வைத்திருந்தாலும், அதற்குள் நாம் பலவீனமான எண்ணங்களைச் செலுத்திவிட்டால்,
பல நிலைகளும் தெரியும். ஆக, குறி சொல்வதும், ஜோதிடக்காரர்கள் மாதிரி முன்னால் அறிவதும், நல்ல நேரம் கெட்ட நேரம் அறிந்து, சொல்ல முடியும்.
அத்தகைய நிலைக்கு இட்டுச்
சென்றுவிட்டால், ஒரு மனித உடலுக்குள் அவர்கள் உடலில் விளைய
வைத்த, அந்தத் தீமையின் உணர்வுகளும்
நமக்குள் வந்து சேரும்.
இப்பொழுது சாதாரணமாக, உங்கள் உடலிலிருந்து பல உணர்வுகள்
வெளிப்படுகின்றது என்று வைத்துக் கொள்வோம். யாம் உங்களைப் பார்த்தவுடனே, உங்களைப் பற்றிய அனைத்தையுமே யாம் அறிந்து கொள்ள முடியும்.
அவ்வாறு அறிந்து கொண்டால், உங்கள்
வாழ்க்கையிலே எத்தகைய துன்பங்களை உங்கள் உடலிலே விளைய வைத்திருக்கின்றீர்களோ, அந்த உணர்வை
இழுத்து, சுவாசித்துத்தான், உங்கள்
நிலையை யாம் சொல்ல முடியும்.
ஒருவர் துன்பப்படுகின்றார்
என்று, அவரை நாம் ஏக்கத்துடன்
அல்லது பரிவுடன் பார்த்தாலோ அவர் உடலிலே விளையக்கூடிய துன்ப உணர்வலைகள் நமக்குள் ஈர்க்கப்பட்டு, நமக்கு
நடுக்கமும், பயத்தையும், சோர்வையும்,
மயக்கத்தையும் உண்டாக்கும். அந்தந்தச் சந்தர்ப்பத்திற்குத் தக்கவாறு
உண்டாக்கும்.
ஏனென்றால், நமக்குச் சம்பந்தமில்லாதபடி திடீரென்று
எதிர்ப்பார்க்காதபடி அந்தப் பரிவு கொண்டு, பயம் கலந்த
நிலைகள் கொண்டு ஈர்த்துவிட்டாலோ,
நாம் தவறு செய்யவில்லை என்றாலும், நுகரப்பட்டு
நம் உடலுக்குள் நம்மை மயக்கம்
அடையச் செய்யும்
மற்ற நிலைகளைச் செய்யும்.
2. பிறருக்காக மந்திரிப்பவரின் நிலைகள்
சக்தியின் தன்மை பெற்றவர்கள் ஒரு உடலில்
இருக்கக்கூடிய உணர்வைச் சுவாசித்து,
அவர் கஷ்ட நஷ்டங்களையும் அவர் எதிர்கால நிலைமைகளையும் சுவாசித்துத்தான், அவர்களுக்குள் உணர முடியும்.
அப்படி உணர்ந்தாலும், வலுக் கட்டாயமாகச்
சுவாசிக்கப்படும் பொழுது, பிறர் உடலில் இருக்கக்கூடிய தீய சக்திகளையும் அவர் உடலுக்குள் பெருக்கிக் கொள்ள முடிகின்றது.
இந்த மந்திரங்கள், எந்திரங்கள் செய்பவர்கள், ஒவ்வொருவருடைய
துன்பங்களைப் போக்குவதற்கு, இதே மாதிரியான ஈர்க்கும் ஆற்றலின்
நிலை கொண்டு பிறருக்கு மந்திரித்து, அந்த மந்திரத்தினாலே அவர் உடலிலிருக்கக்கூடிய தீய விளைவை, இவர்கள் இழுத்துக் கொள்ள முடியும்.
இன்று, மனிதனுக்குள் எத்தனையோ வகையான எண்ணங்களை நமக்குள்
வளர்த்திருக்கின்றோம், நாம் எந்தெந்த ஆசையின் நிலைகளில் வளர்ந்திருக்கின்றோமோ,
அந்த ஆசையின்
உணர்வுகள் ஊடுருவிவிடும்.
அப்படி ஊடுருவி
விட்டால்
அதன் வழியிலே
இட்டுச் சென்றுவிடும்.
ஏனென்றால், “அறிதல்” என்று ஈர்த்துச்
சொல்லக்கூடிய பக்குவம் வந்துவிட்டாலே, ஒருவர் உடலில் இருக்கக்கூடியது, தன்னிச்சையாகவே இவர் நினைக்கப்படும்
பொழுது, இது வந்துவிடுகின்றது.
அவர் உணர்வை மந்திரக்காரர் அறிவார். அவர் வியாதியைப் போக்கும் தன்மைகள்
வரலாம். அடுத்தவர்களுக்கு நன்மையாகலாம்.
ஆனால், இவர் உடல்களில் வந்து தீய
சக்திகள் விளைந்து
மனித உணர்வின் ஈர்ப்பலைகளுக்குள்தான் சிக்கவேண்டும்.
ஞானிகளின் உணர்வலைகளுக்குள்
செல்ல முடியாது.