ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 31, 2026

“வாழ வைக்க வேண்டும்…” என்ற எண்ணம் தான் நமக்கு வர வேண்டும் என்றார் குருநாதர்

“வாழ வைக்க வேண்டும்…” என்ற எண்ணம் தான் நமக்கு வர வேண்டும் என்றார் குருநாதர்


யாம் ஒரு முறை குருதேவர் ஆணைப்படி இமயமலைக்குச் சென்றோம். அப்பொழுது உடலில் கோவணம் மட்டுமே அணிந்திருந்தோம். வேறு எந்தத் துணியும் எம்மிடம் இல்லை.
 
அங்கே நிலவும் குளிரில் குருதேவர் அருளிக் கொடுத்த உணர்வுகளை யாம் நுகர்ந்து கொண்டிருந்ததால் எம் உடலில் வெப்பம் உருவாகி குளிர் எதுவும் தாக்காத வண்ணம் அங்கே நடந்து சென்று கொண்டிருந்தோம்.
 
அந்த பனிமலைப் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த பொழுது யாம் ஒரு இடத்தைக் கடந்திருப்போம். சற்று நேரத்தில் கால் வைத்து நடந்த பகுதி இடிந்து தகர்ந்து விழுந்தது. தகர்ந்து விழுந்த இடத்தைப் பார்த்தால் பெரிய பாதாளமே அங்கே இருந்தது.
 
அதைப் பார்த்தவுடன் எமது சிந்தனைகள் எங்கே சென்றது…?
1.எமது குழந்தைகள் எமது குடும்பம் எவ்வாறு இருக்கின்றதோ?
2.யாம் மீண்டும் அவர்களைச் சந்திக்க முடியுமா? அல்லது இங்கேயே விழுந்து இறந்துவிடுவோமா?
3.இந்த பாதாளத்தில் விழுந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? என்றுதான் எமது சிந்தனைகள் சென்றன. 
 
உடல் மீது தான் ஆசை தோன்றியது. குரு கொடுத்த உணர்வுகளை அந்த நேரத்தில் மறந்துவிட்டோம்.
 
இதனால் எமது உடலில் குளிரெடுத்தது. இதயம் படபட எனத் துடித்து இரைச்சலாகிசற்று நேரத்தில் இறந்தே விடுவோம்என்ற நிலை எம்மிடத்தில் உருவானது.
 
அப்பொழுது குருதேவர் எமக்கு முன்னால் உதயமானர்.
 
மனமே இனியாகிலும் மயங்காதே,
பொல்லா மானிட வாழ்க்கையில் தயங்காதே.
பொன்னடி பொருளும் பூமியில் சுகமோ?
மின்னலைப் போல மறைவதைப் பாராய்.
 
நேற்று இருந்தார் இன்று இருப்பது நிஜமோ?
நிலையில்லா இவ்வுலகம் உனக்குச் சதமா?
மனமே இனியாகிலும் மயங்காதே
பொல்லா மானிட வாழ்க்கையில் தயங்காதே…!
என்ற இந்த பாடலைப் பாடினார்.
 
சோதனையான சமயத்தில் இப்படி ஆகின்றதேஎன்று வருந்தி உன் குழந்தைகளையும் மற்றவர்களையும் எண்ணிப் படபடப்பாகி மயங்குகின்றாய்.
 
ஆனால் சற்று நேரத்திற்கு முன் உனது உயிர் போயிருந்தால் இந்தப் பொன்னடி பொருளை எங்கே காணப் போகின்றாய்? என்று கேட்கிறார் குருதேவர்.
 
ஆகவே
1.ஆசையின் உணர்வை விடுத்து அருள் ஒளியின் உணர்வை எடுத்து
2.என் குழந்தைகள் அருள் ஞானம் பெற வேண்டும்இருளை அகற்றி மெய்ப் பொருள் காண வேண்டும்
3.அவர்கள் வாழ்க்கை நலம் பெற வேண்டும் என்ற உணர்வினை எடுத்தால் அவர்களை வாழ வைக்கலாம்.
 
நமக்குள் அருள் உணர்வைக் காக்கலாம் என்றார் குருதேவர்.
 
1.மனிதருக்கு வாழ வைக்க வேண்டும் என்ற எண்ணம்தான் வரவேண்டுமே தவிர
2.“இப்படி ஆகி விட்டதேஎன்று எண்ணக் கூடாது.
 
ஏனென்றால் இப்படி ஆகி விட்டதே…! என்று வேதனையை எடுக்கப்படும் பொழுதுதான் விஷத்தின் தன்மையைக் கவர நேருகின்றது. அதனால் மனிதரின் செயலாக்கத்தின் தன்மை குறைகின்றது.
 
இது போன்று யாம் செல்லும் பாதையில் விபத்துக்கள் நேரிடும் பொழுதெல்லாம் எமக்குக் குடும்பத்தின் ஞாபகம் வரும். அப்பொழுது இதிலிருந்து எப்படி காத்துக் கொள்வது…? என்று நினைவுபடுத்திக் கொண்டே இருப்பார் குருநாதர்.
 
ஆகவே குரு காண்பித்த அருள் வழியில்
1.நாம் அனைவரும் நம் உடல்  நமக்கு சொந்தமில்லை…! என்று உணர வேண்டும்.
2.உயிருடன் ஒன்றும் உணர்வை அருள் ஒளியின் உணர்வாக இணைத்துச் சொந்தமாக்குதல் வேண்டும்
3.மகரிஷிகளின் அருளைப் பற்றுடன் பற்றுதல் வேண்டும்.
4.நமது வாழ்க்கையில் வரும் தீமைகளைப் பற்றற்றதாக மாற்றுதல் வேண்டும்.
 
ஒவ்வொரு சமயத்திலும் மனிதர் தாம் சந்தர்ப்பத்தால் அறியாது வரும் தீமைகளில் சிக்கிக் கொள்வதை உணர்த்தி மனிதர் தாம் எவ்வாறு தீமைகளிலிருந்து மீள்வது?” எனும் நிலையை அனுபவரீதியாக எமக்கு உணர்த்தினார் குருநாதர்.

பித்து நிலையிலிருக்கும் இந்த உலகிலிருந்து “விடுபட்டுச் செல்கிறேன்” என்றார் குருநாதர்

பித்து நிலையிலிருக்கும் இந்த உலகிலிருந்து “விடுபட்டுச் செல்கிறேன்” என்றார் குருநாதர்


இந்த வாழ்க்கையில் பித்தனைப் போல் தான் இருந்தார் நமது குருநாதர்.
 
இந்த உலகமே பித்து நிலையில் இருக்கின்றதுஎன்பதை உணர்த்துவதற்கு இந்த உலகில் உள்ளோர்க்கு அவரைப் பார்த்தால் பித்தனாகத்தான் தெரியும்.
 
ஆனால் இந்த உலக மக்கள் பித்துப்பிடித்துப் பித்தனாக உள்ளனர். இதிலிருந்து நான் விடுபட்டே செல்கின்றேன் என்றார். இந்த உண்மையின் உணர்வின் இயக்கத்தை அவர் தெளிவாகப் பதிவு செய்து கொண்டார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.
 
ஆகையினால்
1.மற்றவர்கள்யார் தவறு செய்கின்றார்கள்?
2.எப்படிச் செய்கின்றார்கள்? என்பதைச் சிந்திப்பதில்லை.
3.அதை அவர் ஏற்றுக்கொள்வதும் இல்லை.

உயிர் உணர்வு உடல் - இயக்கம்

உயிர் உணர்வு உடல் - இயக்கம்


ஒரு மரம் பட்டு அதனுடைய சத்தெல்லாம் இழந்தாலும்தில் விளைந்த சத்தினைச் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து சேமித்து வைத்துக் கொள்கின்றது.
1.சேமித்த உணர்வின் தன்மை பூமியின் பரத்தில் பரமாத்மாவில் அலைகளாகத் தொடர்கின்றது பரமாத்மாவாக இருக்கின்றது.
2.மண்ணிலே ஊன்றப்பட்ட வித்து தன் தாய் மரத்தின் உணர்வை நுகர்ந்து மரமாக விளைந்து மீண்டும் தன் இனத்தின் வித்தை உருவாக்குகின்றது.
 
இதைப் போல தான் சூரியனால் உருவான இந்த உணர்வுகள் அதனுடைய அலை வரிசைகள் தொடர்ந்து தன் எதன் வழிகளில் அது கவர்ந்ததோ அந்த இன வித்துக்கள் மாறுவதும் மரம் ஒன்றுடன் ஒன்று இணையப்படும் பொழுது மரத்தின் இனங்கள் மாறுவதும் தாவர இனங்களும் மாறுகின்றது.
 
தைப் போன்றுநம் உடலுக்குள் இருக்கும் உயிர் நாம் எண்ணியது எதுவோ அதை ஜீ அணுக்களாக மாற்றி…”ந்த உணர்வின் லமாக உடலாக மாற்றி அமைக்கின்றது.
 
சூரியனைப் போல உயிர் மாற்றிக் கொண்டிருக்கும் நிலையில்
1.இந்தப் பூமியில் காற்றுடன் கலந்துள்ளது
2.ஆனால் நம் உடலில் ரத்தத்துடன் கலக்கின்றது.
 
நாம் எண்ணியது எதுவோ அது அனைத்தும் ஜீவ அணுக்களாக ரத்தங்களிலே ருப் பெறுகின்றது.
 
பல கோடி வித்துக்களாக உருப்பெற்றாலும் அந்தந்த மரம் காற்றிலே மிதந்து வரும் தன் இனத்தின் சத்தை எடுத்து விளைவது போல நமக்குள்ளும் விளைகின்றது.
 
ஒருவன் தீமையாகப் பேசுகின்றான்…! அவனிடமிருந்து சொல்லாக வருகின்றது அவனில் விளைந்த வித்தாக அது வெளிப்படுகின்றது. நாம் அதை உற்றுப் பார்க்கப்படும் பொழுது ஊழ்வினையாக நமக்குள் பதிவாகின்றது. வினை தான் வித்து என்பது.
 
ஒரு வித்து தன் சத்தைக் காற்றிலிருந்து எவ்வாறு கவர்கின்றதோ அதைப் போல்
1.நமக்குள் எண்ணங்களாகப் பதிவு செய்த ஊழ்வினை மீண்டும் தன் உணர்வின் சத்தை ஆன்மாவாக மாற்றுகிறது.
2.மாற்றிய பின் சுவாசித்து உயிரிலே பட்டு அது தான் எண்ணமாக மாறுகின்றது.
3.அது உடலுக்குள் செயல்படும்போது அந்த உணர்வின் ந்து விசையால் நம் உடல் அங்கங்கள் அதற்குத்தக்க அசைகிறது.
 
நாதத்தின் சுருதி கொண்டு வாத்தியங்களை இசைக்கிறார்கள். அதைக் கேட்டு… அந்த இனிமை கலந்த உணர்வுகளை ஒரு தரம் பதிவாக்கி விட்டால் ந்த ராக இணைப்பிற்கு அந்த இசையின் வாசிப்பிற்கு நம்முடைய அங்கங்கள் இசைந்து இயக்குகின்றது.
 
வாசிக்கத் தெரியவில்லை என்றால் சீராகப் பதிவு செய்யவில்லை என்றால் என்னதான் வாத்தியம் வாசித்தாலும் அது வராது.
 
இனிமை கொண்ட வாத்தியத்தின் உணர்வின் தன்மையை தனக்குள் பதிவு செய்யும் பொழுது அது பதிந்த பின் தன்னிச்சையாக அவருடைய அங்கங்களை அசைப்பதும் மீண்டும் ரசனையை அவர்கள் கூட்டும் பொழுது அதற்கு தகுந்தாற் போல் அந்த வாத்தியங்கள் மிகவும் நயமாகவும் பிறரை மகிழ்விக்கும் நிலையும் ஆட்டிப்படைக்கும் நிலைகளும் வருகின்றது.
 
இதைப் போன்று தான்
1.ஒரு மனிதன் கோபித்த உணர்வின் தன்மையைப் பதிவு செய்து கொண்டால்
2.அந்த உணர்வின் நாதங்கள் நமக்குள் கோப உணர்ச்சிகளைத் தூண்டி இந்த உணர்வுக்கொப்ப நம் ங்கங்களை இயக்குவதும்
3.தே உணர்வின் தன்மை கொண்டு நமக்குள் மற்றவரை அழித்திடும் நிலையோ இம்சிக்கும் நிலையாகவோ அது நமக்குள் தோன்றும்.
 
அவ்வாறு தோன்றிய உணர்வுகள் நம் உடலுக்குள் இம்சைப்படும் உணர்வுகளாகவே உருப்பெறுகின்றது.ப்பொழுது மகிழ்ச்சியாக உருவான இந்த உடல் நலியும் தருணம் வருகின்றது.
 
பிரபஞ்சத்தில் சூரியன் இயக்குவது போல
1.நாம் எண்ணிய உணர்வுகள் வையோ அவை அனைத்தையும்
2.உயிர் உடலுக்குள் அணுக்களாக மாற்றிக் கொண்டே இருக்கிறது.

January 30, 2026

“தங்கத்தைப் போன்று…” எங்கள் மனம் மங்காத அந்த அருள் சக்தி பெற அருள்வாய் ஈஸ்வரா

“தங்கத்தைப் போன்று…” எங்கள் மனம் மங்காத அந்த அருள் சக்தி பெற அருள்வாய் ஈஸ்வரா


தியானமிருந்து பழகிக் கொண்டவர்கள் ஆத்ம சுத்தியைக் கடைப்பிடிக்க வேண்டும். எப்பொழுது நாம் வீட்டைவிட்டு வெளியில் சென்றாலும் கண்டிப்பாக ஆத்ம சுத்தி செய்ய வேண்டும்.
 
உதாரணமாகநம்முடைய நண்பர் ஒருவர் நம்மிடம் அவருடைய கஷ்டத்தைச் சொல்கிறார் என்று வைத்துக் கொள்வோம். நாம் காது கொடுத்துக் கேட்கிறோம். அவருடைய கஷ்டத்தை நாம் கேட்கும் பொழுது நமது உடல் சுருங்குகின்றது… நம்மையறியாமலேயே முகம் வாடுகின்றது.
 
அவ்வாறு அவருடைய கஷ்டத்தையெல்லாம் நாம் கேட்டுணரும் பொழுது
1.அந்த உணர்வுகள் நம் உடலுக்குள் சென்று
2.அது உமிழ் நீராக மாறி நம் ஆகாரத்துடன் கலந்து
3.நாம் எந்த நல்ல குணத்துடன் கேட்டோமோ அந்த உணர்வான சத்து ஆகாரத்துடன் கலந்து
4.நாம் எண்ணிய நல்ல எண்ணங்களுக்குள் கஷ்டமான உணர்வு கலந்து விடுகின்றது.
 
அவருக்கு நாம் பணத்தைக் கொடுத்து உதவி செய்தாலும் கூட அவருடைய துன்பமான உணர்வுகள் உமிழ் நீராக வடிக்கப்பட்டு நம் ஆகாரத்துடன் கலந்து இரத்தத்துடன் கலந்து விடுகின்றது.
 
அப்படி இரத்தத்தில் கலந்து செல்லும்போது அதை நமது நுரையீரல் சுவாசப்பை எடுத்து
1.இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் உறுப்புகளுக்கு அனுப்பப்படும் பொழுது
2.அவர்கள் எப்படி வேதனைப்பட்டார்களோ அந்த உணர்ச்சிகள் நம் உறுப்புகளில் முதலில் ஏற்படும்.
 
அப்பொழுது இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் கிட்னி அதைச் சரியாகச் சுத்தப்படுத்தாது. அவ்வாறு சுத்தப்படுத்தாமல் அனுப்பும்போது
1.நம் உடல் முழுவதற்கும் அந்த இரத்தம் செல்லும் பொழுது
2.நமது உடலுக்குள் வேதனையை உண்டாக்கும் நிலை வருகிறது.
 
அந்த வேதனையான உணர்வுகள் செல்லும்போது அந்த நல்ல குணத்துடன் இது இரண்டறக் கலந்து விடுகின்றது.
 
உதாரணமாகஒரு தொட்டியில் நீரை ஊற்றி ஒரு தங்கக் கட்டியை எலக்ட்ரானுடன் இணைக்கப்பட்டு நீருக்குள் போட்டுவிடுவார்கள். அதே சமயம் ஒரு செம்புக் கட்டியுடன் எலக்ட்ரானிக்கைக் கலக்கச் செய்து நீருக்குள் போட்டுவிடுவார்கள்.
 
1.செம்பில் எலக்ட்ரானிக்கை அதிகமாகக் கூட்டித் தங்கத்திலே குறைத்துக் கொடுக்கும் பொழுது
2.தங்கத்திலிருக்கக்கூடிய (தங்கச்) சக்திகள் கரைந்து
3.அதிகமாகக் கூடிய செம்பின் எலக்ட்ரானிக் தைக் கவர்ந்து  
4.செம்புக்குள் தங்க முலாம் பூசிவிடும்.
 
உள்ளே இருக்கக்கூடிய செம்பு கறுப்பதை விடுத்து இந்தத் தங்கத்தின் முலாமாக ஆகிஅது தெளிவாகின்றது.
 
ஆனால் அதே சமயம்,
1.தங்கத்திற்குள் எலக்ட்ரானிக்கை அதிகமாகச் சேர்த்து செம்பில் குறைவான எலக்ட்ரானிக்கைச் சேர்த்தால்
2.செம்பின் சக்திகள் கரைந்து தங்கத்திற்குள் முலாம் பூசிவிடும்
3.அடிக்கடி செம்பு எப்படிக் கருக்கின்றதோ அதே மாதிரி தங்கம் கறுத்துவிடும்.
 
அதே போல் தான் நல்ல எண்ணங்கள் கொண்டு ஒருவருடைய துன்பமான உணர்வைக் கேட்டறியும் போது அந்த உணர்வுகள் நம் இரத்தத்துடன் கலந்து அது உடலுக்குள் செல்லும்போது
1.நாம் எந்த குணம் கொண்டு கேட்டுக் கொண்டிருந்தோமோ
2.அந்த நல்ல குணத்தில் துன்ப உணர்வுகள் முலாமாகப் பூசிவிடும்.
 
ஏனென்றால் நல்ல குணம் கொண்டு நாம் பேசினாலும் அவர் படும் துன்பத்தின் மேல் எண்ணங்களை அதிகமாகச் செலுத்தி
1.“உனக்கு எப்படி இப்படிக் கஷ்டம் வந்தது…?” என்று கேட்கப்படும் போது
2.அந்த நல்ல உணர்வுகளுடன் அவரின் நோயான உணர்வுகள் முலாம் பூசிவிடும்.
 
முதலில் ம் நல்ல குணங்கள் நோயற்ற நிலையும் தெளிவான நிலைகளும் உடலில் தெம்பாக இருந்தது. ஆனால் கஷ்டத்தைக் கேட்டவுடன் மங்கிவிடுகிறது.
 
அதாவது… தங்கம் எப்படிப் பளப்பளப்பாக இருந்ததோ அதைப் போல நமது தெளிவான எண்ணங்களில் அவருடைய துன்ப உணர்வுகள் கலக்கப்படும் பொழுது நம்மை அறியாமலேயே சோர்வடைந்து விடுகின்றோம்.
 
இது நாளாக நாளாகநமக்குள் நோயாக வந்து சேர்ந்து விடுகின்றது. நமது எண்ணமும் தெளிவற்றதாகப் போய்விடுகின்றது. நாம் துன்பத்தைக் கேட்டறிந்தோம் அதை உடனே துடைக்க வேண்டுமல்லவா?
 
அதைத் துடைப்பதற்குத்தான் இந்த ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தை உங்களுக்குக் கொடுக்கின்றோம். துன்பத்தைக் கேட்டறிந்தபின்,…
1.உடனே ஈஸ்வரா என்று நம் உயிரை எண்ணி
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளை நுகர்ந்து நம் உடலுக்குள் செலுத்தி
3.நம் உடலில் உள்ள இரத்தங்கள் முழுவதும் படர வேண்டும் என்று எண்ணித் தியானித்து அதைச் சுத்தப்படுத்த வேண்டும்.
 
பின்… துன்பப்பட்டவர்கள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற்றுத் துன்பத்திலிருந்து விடுபடும் அருள் சக்தி அவர்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று நாம் தியானித்து அந்த அருள் சக்திகளை அவர்களுக்குப் பாய்ச்ச வேண்டும்…!”
 
இப்படி ஆத்ம சுத்தி செய்து நம் நல்ல குணங்களை மங்காது நாம் காத்துக் கொள்ள வேண்டும்.

ஈசனுக்கு மகிழ்ச்சி

ஈசனுக்கு மகிழ்ச்சி


நாம் இங்கே கற்றுக் கொண்ட நிலைகள் நம் குடும்ப வாழ்க்கையிலும் சரிநம் எதிரியாக இருந்தாலும் சரிநம் சொல்லின் நிலைகள் அங்கே இனிமைப்படுத்த வேண்டும்.
 
1.மற்றவர்கள் காரமான நிலைகளில் பேசினாலும் நாம் எடுத்துக் கொண்ட ஜெபத்தின் பலன்
2.பிறர் காரமாகப் பேசக்கூடிய உணர்வுகளைத் தடுத்து நிறுத்தும் ஆற்றலாகப் பெற வேண்டும்.
 
ஒவ்வொரு நிமிடமும் உங்களுக்குள் அந்த ஆற்றல் பெறுவதற்கு சதா நீங்கள் ஆத்ம சுத்திஎன்ற ஆயுதத்தை எடுத்து உங்கள் உயிரை ஈசனாக மதித்துச் செயல்படுத்திப் பாருங்கள்.
 
1.ஆலயங்களில் அந்த ஈசனுக்குப் “பாலாபிஷகம்செய்வது போன்று
2.உங்கள் ஈசனுக்கு அந்த மெய் ஞானியின் அருள் சக்தியை நீங்கள் சுவாசித்து அபிஷேகிக்க வேண்டும்.
 
அந்த மெய் ஞானிகளின் உணர்வின் மணங்கள் உங்களுக்குக் கிடைக்கச் செய்வதற்காக உங்கள் உயிரைக் கடவுளாக மதித்து அந்த அபிஷேகத்தை யாம் செய்து கொண்டே இருக்கின்றோம்…”
 
ஆகையினாலே ஒவ்வொரு நிமிடமும் ஆத்ம சுத்தியைச் செய்து அந்த மகரிஷிகளின் அருள் ஒளியைச் சுவாசித்து உங்கள் உயிரான நிலைகளை மகிழச் செய்யுங்கள்.
 
ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தை நாம் எடுத்துப் பயன்படுத்தி பிறருக்குச் சொன்னாலும்
1.நாம் வெளிப்படுத்தும் இந்த உணர்வுகளை அவர்கள் சுவாசித்து
2.அவர் உடலில் இருக்கக்கூடிய உயிரான ஈசனிடம் ஒலிகள் பட்டு அதே உணர்வுகள் தூண்டப்படுகின்றது.
 
நாம் பேசிய உணர்வுக்கொப்ப அந்த உணர்வின் நிலைகள் அந்த உடலை இயக்கச் செய்து நம்மைப் பக்குவப்படுத்துவதோ நல்ல சொல்லைச் சொல்வதோ போன்ற நிலைகள் ஏற்படுகின்றது.
 
இதையெல்லாம் கண்டுணர்ந்த நாம் ஒவ்வொரு நிமிடமும் இதைப் பாச அணைப்புடன் செயல்படுத்த வேண்டும்.
 
குழந்தை தவறு செய்தாலும் பாசத்துடன் அணைத்துக் கொள்கின்றோம். நம் உடலிலே வேதனையாகும் பொழுது ஒரு அசுத்தம் பட்டு விட்டால் அசுத்தம் என்ற நிலைகளை எண்ணாதபடி அதைத் துடைக்க முற்படுகின்றோம்.
 
அதைப் போன்று
1.பிறருடைய எண்ணங்களில் அசுத்த சொற்கள் வந்தாலும்
2.நாம் எண்ணத்தாலே துடைக்கும் பக்குவம் கொண்டு செயல்பட வேண்டும்.
 
பிறரிடம் அசுத்த உணர்வின் எண்ணங்கள் தோற்றுவித்தாலும் நாம் ஆத்ம சுத்திஎன்ற ஆயுதத்தைப் பயன்படுத்தி அவருடைய அசுத்தத்தை நீக்கும் ஆற்றலை நாம் செய்து பழகுவோமேயானால் நமக்குள் ஐக்கியமாகும் நிலைகள் பிறக்கும்.
 
1.இதன் மூலம் நாம் அனைவரும் ஏகாந்தமாக மகிழ்ந்து வாழலாம்.
2.அந்த மகரிஷிகள் சென்ற எல்லையை அனைவரும் எளிதாக அடைய முடியும்.
 
எமது அருளாசிகள்.