
வழி நடத்த நான் இருக்கின்றேன்… சங்கடத்தை விட்டிடப்பா…!
கடலில் சதா சர்வ
காலமும் கரைதனில் அலை வீசி மீண்டும் அதன் செயல் நடைபெறுதல் போலவே... சூட்சும நுண் அலைகள்
நீல வண்ணம் காட்டிடும் அன்பாகக் கருணை என்னும் நிலையில்... நீ அன்பு என்னும் அலைக்கரத்தை
நீட்டியே மெய் வழி அறிவாய்…!
யாம் சொல்லும்
தியானத்தின் மூலம் எடுக்கும் நுண் மின் காந்த அலைகளால் இருளான இந்த உடலுக்குள் “ஒளி
பெற்றிடும் உயிரணுக்கள் தோன்றிடும்...”
1.அப்படி ஒளி மண்டலமாகும்
ஆக்கத்தில் திகழும் மூலக்கனல் பெறும் கந்தன்
2.தாய் மூச்சு நாடியின்
(குறுதெலும்பு பாகம்) துணையுடன் மேல் எழுந்தே ஆறு ஆதார நிலைகளில்
3.நன்மை என்னும்
உறுதி மலை மேல் ஏறி... ஆகாயக் கூறு என்றே அழைக்கப் பெற்றிடும் சிரசின் உச்சியில்
4.ஒளி பொருந்திய
வேல் போல் தோற்றம் தந்திடும் அமைப்பினில் கிளர்ந்து எழுகின்ற பொழுது…
5.தாய் மூச்சு நாடியின்...
சக்தி ஒளி மண்டல சுவாச அலைகளை
6.கடல் அலைகள் ஒன்றன்பின்
ஒன்றாகக் கரைதனையில் வந்து மோதுவதைப் போல்
7.சிரசினில் மோதிடும்
இடைவிடா காந்தப்புலன் மெய் ஒலி/ஒளி காட்டித் தடைப்படாத ஆனந்தத்தை உமக்கு அளித்திட...
இனி தடை ஏது…?
ஆகவே... எத்தகைய
சங்கட அலைகளையும் எண்ணியே ஈர்த்துக் கொண்டிடுதல் “இனி உன் நிலைக்குத் தகாதப்பா…”
சூரியனின் ஒளிக்கதிர்கள்
பட்டு இயற்கையில் பூத்திடும் புஷ்பங்கள் அனைத்துமா விரிந்து மனம் வீசுகின்றது…? பக்குவப்பட்ட மலர்களையே கதிரவனின் கதிர் ஒளி அரவணைத்துப்
பூக்கச் செய்கின்ற அன்பினை உணர்ந்து கொண்டாயா…?
1.ஓர் முறை வழி
நடந்த என் பயணத்தில் என் தலைச்சுமையை இறக்கி வைத்து... இளைப்பாற்றி...
2.மேல் உத்தரியத்தினால்
காற்றினை வீசி அரவணைத்த உனது உள்ளம் தான் இன்னும் உன்னை நாடியே வந்தடையச் செய்கின்றது.
3.சிவத்தின் தன்மை
சிவாயத்துள் உன் மனநிலையை அறிந்து கொண்டிடவே தொடங்கிய பயணம் தொடர்கின்றது.
சகடம் போல் சுற்றுகின்ற
வாழ்க்கைதான்... எண்ணத் தேர் மனமாம் மனதில்... அசைந்து அசைந்து ஏறுகின்ற செயலிலும்
சகடம் சுழல்கின்றது.
தேரின் மையம் எது
தெரியுமா…?
“தனித்துவ சக்தி”
செயலுறுகின்ற மூகமோ (மௌனம்) அன்றி நிதானமோ…
1.சுழலுகின்ற சகடத்தையும்
அந்தச் சுழற்சியின் ஓட்டத்தில் சுழலச் செய்யும் நிலை பெற்ற தேரின் அமைப்பை
2.அந்நிலையில் நிலைக்கச்
செய்து... சாஸ்வதக் காட்சியாக வெளித் தோன்றாது.
சிறு பாகமான “அச்சாணி”
விசை சேர்த்துக் கொள்கின்ற மையமாம் தனி சக்தி விசையாக்கும்.
1.வாழ்வினுக்கும்
வழித் துணை என்றாலும்
2.செலுத்துபவனாய்
நாமிருக்க... பஞ்சபூதங்கள் அமைவு பெறும் அனைத்தும் ஆகாயம் என்ற பால் வெளி.
வேதாள மாமகரிஷி
அன்று உரைத்த “இந்த உரையில்” மறைபொருள் இரகசியங்கள் பல உண்டு.