ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 21, 2025

“அகஸ்தியனின் முழு ஆற்றலையும்… நீங்கள் பெறும் சந்தர்ப்பம்”

“அகஸ்தியனின் முழு ஆற்றலையும்… நீங்கள் பெறும் சந்தர்ப்பம்”


27 நட்சத்திரங்களும் ஒன்றுக்கொன்று எதிர் நிலையாகி தூசிகளாகக் கலந்து வரப்படும் பொழுது உராயும் நிலையில் அதிர்வுகளாகி மற்றதோடு கலந்து தூசிகளாக மாற்றி விடுகின்றது.
 
பல பல வர்ணங்களும் பல பல நிலைகளை உருவாக்கும் துகள்களாக மாற்றி விடுகின்றது.
1.அதைச் சூரியன் எவ்வாறு எடுத்து வைத்துக் கொள்கின்றது என்பதையும்
2.தை அகஸ்தியன் எப்படி கண்டான் என்பதையும் “நீ உற்றுப் பார் என்றார் குருநாதர்.
 
அடிக்கடி மின்னலைப் பார் என்று சொல்வார்… பார்த்தால் கண் போய்விடுமே என்று எனக்கும் அவருக்கும் சண்டை வரும். பின் அந்த மின் அதிர்வுகளை உற்றுப் பார்க்கும் பொழுது மற்றதுடன் எப்படி ஊடுருகின்றது…? என்பதனை அறிந்தேன்.
 
முதலிலே பயந்தேன்
1.பின் அவர் சொன்ன முறைப்படி எடுக்கப்படும் பொழுது அது எப்படி அடங்குகின்றது
2.உன் உடலுக்குள் இருக்கும் அணுக்கள் எப்படி அதைப் பெறுகின்றது…? அதைப் பெறக்கூடிய தகுதி நாளடைவில் வரும் பொழுது
3.நீ அதை பெற முடிகின்றது என்று குருநாதர் உணர்த்துகின்றார்.
 
துருவ நட்சத்திரமாக இருப்பதும் இதன் வழி தான்.
 
பல மின்னலின் ஒளிக்ற்றைகளைத் தனக்குள் பெருக்கிப் பெருக்கி உயிரின் துடிப்பு எப்படி மின்னலால் நட்சத்திரங்களால் உருவானதோ அதைப் போன்று
1.பல நட்சத்திரங்களின் உணர்வுகளை நுகர்ந்து நுகர்ந்து உடலுக்குள் இருக்கும் அணுக்கள் ஒளிக் கதிர்களாக மாற்றிய அகஸ்தியன்
2.உயிருடன் ஒன்றி அவன் நிலை கொண்டு உள்ளான் துருவ நட்சத்திரமாக.
 
அந்த எல்லை அடைய வேண்டும் என்றால் அகஸ்தியன் தாய் கருவிலே சந்தர்ப்பத்தால் அவன் எவ்வாறு பெற்றான்…? அதன் வழியில் எப்படி வளர்ந்தான்…? என்ற நிலையைத் தெளிவாக்கிக் கொண்டு வருகின்றார்.
 
ஏனென்றால் தாவர இனங்கள் மாறுவதும் உடலான பிற்பாடு வளர்ச்சிகள் எப்படி வருகிறது…? என்பதையும் ஒவ்வொரு இடங்களுக்கும் அது அழைத்துச் சென்று அந்த உணர்வைக் காணும்படி செய்தார்.
 
விஷத்தை ஒடுக்கும் சக்தி உடல் பெற்ற பின் தாவர இனங்களுக்குக் கிடைத்து அதே தாவர இனம் மனிதனைக் காக்கும் நிலை வருகின்றது மனிதனை காக்கும் நிலையானாலும் அந்த உணர்வுக்குள் நுகர்ந்தது அனைத்தும் கருவில் இருக்கக்கூடிய குழந்தைக்குக் (அகஸ்தியனுக்கு) கிடைக்கின்றது.
 
1.உங்களிடம் இப்பொழுது சொல்கிறேன் என்றால் எனக்கு குருநாதர் இதையெல்லாம் காட்சியாகக் காட்டினார்.
2.நாம் இப்போது சொன்னதை நீங்கள் எடுத்துக் கொண்டால் அந்த அருள் சக்தி உங்களுக்குக் கிடைக்கும் பொழுது
3.கஸ்தியன் கண்ட பேருண்மைகளை நீங்களும் காண முடியும். அது விளையும் போது பிறவி இல்லா நிலையும் அடையலாம்.
 
அதற்கே உங்களுக்குள் இதைப் பதிவாக்குகின்றேன்
 
நீங்கள் நினைவு கொண்டு அதனை வளர்த்துக் கொள்ளுதல் வேண்டும். அதைப் பெற்று மனிதனுக்கு பின் பிறவியில்லா நிலை அடைந்த அருள் மகரிஷியின் உணர்வை நுகர்ந்து அதை உருவாக்குதல் வேண்டும்.
 
கஸ்தியன் சிறு குழந்தையாக இருக்கும் பொழுது இவன் உற்றுப் பார்த்த நிலையில் அந்த நட்சத்திரங்களில் வெளிப்படும் மின்னல்கள் ஒன்றுடன் ஒன்று தாக்கும் பொழுது
1.அந்த ஒளிக் கதிர்களை இந்தக் குழந்தையும் பார்க்கின்றது நுகர்கின்றது
2.உடல்களிலே சேர்த்துச் சேர்த்து அந்த அணுக்களின் தன்மை விஷத்தை ஒடுக்கிடும் அணுக்களாக மாறுகின்றது.
 
அந்த வழியில் வளர்ந்தவன் தான் மூன்று வயதாகும் பொழுது காட்டிற்குள் நடந்து சென்றாலே இவன் பின் ஒரு கூட்டமே செல்கின்றது. அவன் எண்ணத்தால் செல்லும் பொழுது இளமைப் பருவத்தில் பாம்போ தேளோ மற்ற விஷ ஜந்துகளோ யானைகளோ, புலிகளோ மற்ற கொடூர மிருகங்களோ இவனைக் கண்ட பின் அப்படியே நின்று விடுகின்றது.
 
ஏனென்றால் அதில் உள்ள விஷத்தின் இயக்கம் தடைப்படுவதனால் செயலற்ற நிலையாகின்றது.
 
1.அகஸ்தியன் உடலிலிருந்து வரக்கூடிய விஷத்தை ஒடுக்கிடும் மங்களை நுகர்ந்தால் அந்த மிருகங்களின் அணுக்கள் ஒடுங்கி
2.இவனைத் தாக்குவதிலிருந்து தன்னைப் பாதுகாக்கும் நிலைகளிலேயே அமிழ்ந்து விடுகின்றது.
3.இவன் அங்கிருந்து சென்ற பின் சிறிது நேரம் கழித்துத் தான் மூச்சுகளை எடுத்து பின் செல்கின்றது என்பதனை
4.கஸ்தியன் வாழ்ந்த காலத்தில் எப்படி நடந்து கொண்டான் என்ற நிலையைத் தெளிவாகக் காட்டுகின்றார் குருநாதர்.
 
நமது குரு இந்த உண்மையின் இயக்கங்களை உணர்ந்தார். பின் எனக்குள் அதைப் பாய்ச்சி நீ எதைச் செய்ய வேண்டும் என்று எம்மைத் தெளிவாக்கிக் கொண்டே வருகின்றார்.
 
கஸ்தியன் சென்ற பாதைகளில் அவன் பாத நிலைகள் கீழே டிந்துள்ளது…
1.அந்த உணர்வுகளைப் பூமியில் இழுத்து வைத்துள்ளது.
2.அவன் எந்தெந்தப் பாதையில் எப்பொழுது சென்றானோ
3.அந்தப் பாதையில் செல்வோருடைய நிலைகளிலும் சிலருக்கு ந்த அற்புத சக்திகளும் கிடைத்துள்ளது.
4.அதன் உணர்வை நீ நுகர்ந்து காட்டுக்குள் செல்லும் பொழுது
5.கஸ்தியன் பாதம் பட்ட இடங்கள் எல்லாம் ந்த நிலையில் இருக்கின்றதோ
6.அதே உணர்வுடன் நீ செல்லப்படும் பொழுது அந்த அருளை நீ பெறலாம்.
 
இப்படி அகஸ்தியன் சென்ற காட்டுப் பகுதிகளுக்கு எல்லாம் என்னை அலையும்படி செய்தார் குருநாதர்.
 
ஒரு கம்ப்யூட்டருக்குள் இயக்கத்தை ஊட்டியபின் அதனுடைய அலை வரிசையில் சென்ற பின் அதனுடன் தொடர்பு கொண்ட இயந்திரங்களை எப்படி எல்லாம் இயக்குகின்றதோ இதைப் போல குரு காட்டி அருள் வழியில் என் உடலுக்குள் பதிவான பின் அகஸ்தியன் சென்ற பாதையில் என்னை அதே பாதையில் இந்த உணர்ச்சிகளைத் தூண்டி என்னை அங்கே போகும்படி செயல்படுத்துகின்றார்.
 
அந்த பகுதிகளுக்குச் செல்லும் பொழுதெல்லாம் அகஸ்தியன் எதை எதையெல்லாம் செய்தான் என்று காட்டுகின்றார் குருநாதர்