ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 8, 2025

உபதேசக் கருத்துக்களை உற்று நோக்கி ஆழமாகப் பதிவு செய்து கொள்ளுங்கள்

உபதேசக் கருத்துக்களை உற்று நோக்கி ஆழமாகப் பதிவு செய்து கொள்ளுங்கள்


மனிதன் தன் எண்ணத்தின் வலிமை கொண்டு ஆயிரம் டன் எடையுள்ள ராக்கெட்டை விண்ணிலே அனுப்புகின்றான். எண்ணத்தின் வலிமை கொண்டு அண்டத்தை அறிகின்றான் அதன் உணர்வின் இயக்கத்தை அறிகின்றான் விஞ்ஞான அறிவு கொண்டு.
 
ஆனால்
1.அன்று மெய் ஞானி அலஸ்தியன் தன் உணர்வின் தன்மை பதிவாகி அகண்ட அண்டத்தில் எண்ணத்தை வீசினான்.
2.அதன் உணர்வைத் தன் உடலுக்குள் கவர்ந்தான். அதன் உணர்வின் அறிவினைக் கண்டான்
3.தீமைகளை அகற்றும் வழியும் கண்டான் அகஸ்தியன்.
 
அவன் பெற்ற உணர்வின் தன்மை அவனில் விளைந்த உணர்வுகள் இன்றும் நம் பூமியில் கலந்தே உள்ளது. அதை நாம் எளிதில் பெற முடியும்.
 
1.இப்போது உங்களுக்குள் செவி வழி இந்த உணர்ச்சிகளைத் தூண்டும் படி செய்து
2.சொல்லும் உணர்வைக் கண் வழி ஈர்த்து மூக்கு வழி சுவாசித்து
3.ணர்வின் தன்மை உங்கள் உடலுக்குள் பதிவாக்கப்படும் பொழுது
4.உணர்ச்சியின் தன்மை அமைதி கொண்டு பார்த்துத் தனக்குள் சேர்க்கச் செய்கின்றது.
 
ஆனால் உபதேசிக்கும் பொழுது வீட்டுக்குப் போக வேண்டும் தொழிலுக்கு நேரமாகிவிட்டது அங்கே சொல்லாமல் வந்து விட்டேன் என்று நினைவினைக் கூட்டினால் இங்கே உபதேசிக்கும் உணர்வுகள் அவர்களுக்கு உபயோகமாகாது.
 
உணர்வின் நிலை எதுவோ அங்கே அழைத்துச் சென்று அந்த வாழ்க்கையின் நிலையையே ஊட்டும். வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்றும் ஆற்றலைப் பெறுவது மிகவும் கடினம்…”
 
ற்று நோக்கி உணர்வின் தன்மை தைப் பெறுகின்றோமோ அதன் நிலையே பெறுகின்றது. ஆகவே
1.யாம் உபதேசிக்கும் போது கண்களால் உற்று நோக்கி
2.உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்து கொள்ளுங்கள்.
 
அதற்குப் பின்… கண்ணின் நினைவை துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி அந்த அருள் சக்திகளைப் பெருக்கி ரத்த நாளங்களில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியினைக் கண் வழி கலக்கச் செய்து ஜீவான்மா ஜீவணுக்களைப் பெறச் செய்தல் வேண்டும்.
 
கண்ணன் கருவில் இருக்கும் குழந்தைக்கு உபதேசித்தான்…!
 
1.கண்கள் ஊடுருவி அந்த உணர்வலைகளைக் கொண்டு வருகின்றது.
2.கண்ணின் நினைவை விண்ணிலே செலுத்தப்படும் பொழுது எட்டா தூரத்தில் இருந்தாலும்
3.அதிலிருந்து வரும் உணர்வை நம்மை நுகரும்படி செய்கின்றது.
 
அந்த உணர்வலைகளை உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மாக்கள் ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று இந்த உணர்ச்சிகளை உந்தப்படும் பொழுது உணர்வுகளை அதற்குள் செலுத்துகின்றது.
 
நோயாளியை உற்றுப் பார்த்து அந்த உணர்வை நுர்ந்தால் இரத்த நாளங்களிலே அது கலந்து சுழன்று அணுக்கள் பெறாது தடைப்படுத்த
1.இந்த வழியில் அருள் ஒளியை நாம் நுகர்ந்து
2.நேரடியாகக் கண்ணின் நினைவு கொண்டு உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் பெற வேண்டும் என்ற உணர்வினை உந்தி விட்டால்
3.இந்த வலிமை கொண்ட பின் தீமை என்ற உணர்வை நுகராது தடுக்கும்.
 
அதே சமயத்தில் கிட்னி ரத்தத்தைச் சுத்திகரிக்கும் சக்தி பெற்றது விஷத்தன்மைகள் அதிலே பட்டால் கிட்னி சீராக இயங்கவில்லை என்றால் இரத்தத்தைச் சுத்திகரிக்கும் நிலை இழந்து விடுகின்றது.
 
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் உறுப்புகள் முழுவதும் படர வேண்டும் என்ற உணர்வினைச் செலுத்தி விட்டால் உடல் உறுப்புகளை உருவாக்கி அணுக்கள் வலிமை பெறுகின்றது.
1.தீமை என்ற நிலை வராது உடனடியாக தடுத்து நிறுத்தப்படுகின்றது.
2.கிட்னி சீராக இயங்குகின்றது.
 
அதே சமயத்தில்… கல்லீரல் நுரையீரல் உணர்ச்சியின் வேகத்துடிப்பானால் விஷத்தின் உணர்வுகளை உந்தினால் உறுப்புகள் சுருங்கி வேதனைப்படும் நிலை வரும்.
 
அத்தகைய வேதனையை உருவாக்கும் முன் உடல் உறுப்புகளை உருவாக்கி அணுக்களுக்கு அருள் ஒளி என்ற உணர்வினைச் செலுத்தப்படும் பொழுது அது வீரியமடைந்து அந்த உறுப்புகளைத் தாக்காதபடி இந்த உணர்வுகள் பாதுகாத்துக் கொள்ளும்.
 
இந்த உணர்வை உடலுக்குள் அதிகமாக வளர்த்துக் கொண்டால் பேர்ருள் பேரொளியின் அலைகளாக மாறுகின்றது. தீமை வரும் பொழுது அந்த இருளை மாய்க்கின்றது.
 
இந்த வழியில் உயர்ந்த சக்திகளைப் பெற வேண்டும் என்று தான்
1.இயற்கையின் உண்மை நிலைகளைக் கண்டுணர்ந்த அகஸ்தியர் தன் இனத்தை வளர்க்கும் முறையை நமக்கு வகுத்துக் கொடுத்தார்.
2.அதை நாம் செயல்படுத்துதல் வேண்டும்.