
கோபம் அதிகமானால் விளையும் தீமைகள்
சந்தர்ப்பவசத்தால் “கோப உணர்வுகளை”
அதிகமாக… தொடர்ச்சியாக நுகர நேர்ந்தால் இந்தக் கார உணர்ச்சிகள் நம் இரத்தங்களிலே உந்தப்படும்
போது இரத்தத்தில் இருக்கும் நீரின் சக்தியை
வடிக்கப்பட்டு அது காணாது போய் விடுகின்றது.
இந்த இரத்தக் கொதிப்பு உள்ளோருக்கு அடிக்கடி
ஆவேச உணர்வுகளும் தாகமும் வரும். இந்த உணர்வுகள் படரப்படும் பொழுது அந்த உணர்ச்சியின் வேகங்களாகும் பொழுது சிறு மூளையின்
இயக்கத்திற்குச் சென்ற உடனே அதன் உணர்வைத் தாங்காது அது அதிகரித்துவிட்டால் கைகால் நரம்புகளை
வேகமாக இறுக்கி மடக்கிவிடும்.
1.நாம் எவ்வாறு “ஆ…!”
என்று அலறப்படும் பொழுது வாயின் தன்மை
தன்னிச்சையாக அந்த உணர்ச்சிகள் இயக்கச் செய்கின்றதோ
2.இதைப்போன்று தான் இந்தக் கார உணர்வின் சத்து நமக்குள் இப்படி இயக்கமாக மாறிவிடுகிறது.
3.“ஆ…!” என்று அலறுவது போல நம்
இரத்தத்திற்குள் இருக்கும் நீர் சத்து நிலைகள் மடிந்து விடுகின்றது
அல்லது வேர்வையாகக் கொட்டி விடுகின்றது.
இந்த இரத்தக் கொதிப்பு உள்ளவருக்கு நடக்கும் பொழுது தலைசுற்றல்
கிறுகிறுப்பு இத்தனையும் வரும். அடுத்து
ஒரு காரியத்தை எண்ணினார்கள் என்றால் அதைச்
செயல்படுத்தும் போது உணர்ச்சியின் வேகங்கள் உந்தப்பட்டு
1.உடனே மயக்கத்தின் நிலைகள்
“ஹோமா ஸ்டேஜிக்கும்” சென்றுவிடும்.
2.சிந்தனையற்ற நிலைகளும்
நரம்பியல்களை இயக்காதபடி இருதய வால்வுகளைச் சரியாக இயக்காத நிலைகள் ஆகி விடுகின்றது.
காரணம் இந்த உணர்வின் வேகம் அதிகரித்து விட்டால் இரத்தத்தில் கார உணர்ச்சிகள் அதிகரிக்கும் பொழுது இரத்த வால்வுகளிலே கார உணர்ச்சிகள் ஆனபின் அந்த வால்வின் நுழைவாயிலில் அதிக வீக்கம் ஆகிவிடுகிறது.
உற்பத்தியான இரத்தத்தை
உள்ளுக்குள் இழுத்து வடிகட்டும் நிலையாக
ஈர்க்கப்படும் பொழுது வராது. அப்பொழுது கடினமாக
இழுக்கப்படும் பொழுது அந்த ஒரு பாகத்தில் எரிச்சலும் அடுத்த
பாகம் இழுக்கும் நிலைகள் மின் அதிர்வைப் போன்று பளீர்….ர்ர்… என்று மின்னிவிடும்.
இப்படி மின்னினாலும் இதன் தொடர் வரிசை தனக்குள் வரவில்லை என்றால்
ஆவேச உணர்வு கொண்டு பதட்டமும் பயமும் நடுக்கமும் ஏற்பட்டு விடுகின்றது.
நடுக்கமும் பயமும் உருவானால் அது அதி துரிதமாக இயங்கப்படும் பொழுது… நம் எண்ணங்கள் அப்பொழுது எதுவாகின்றதோ…
1.நாளை இந்தக் குடும்பம்… தன் குழந்தைகள்
என்ன ஆவார்கள்…?
2.தொழில் என்னவாகும்…? பணம் கொடுக்கல் வாங்கல் என்ன ஆகும்…? என்று அதனால்
பலவாறு சோர்வடையும் நிலைகளும்
3.உணர்ச்சியின் வேகம் பயம் அதிகரித்து நடுக்கத்தில் கொண்டு போய் விடுகின்றது.
4.இவ்வாறு ஒரு சமயம் இரண்டு
சமயம் ஆனால் இந்த உணர்வுகள் இயக்கி “ஹார்ட் ஃபெயிலியர்…!”
இருதய வால்வுகள் சீராக இயங்காது ரத்தத்தின் அழுத்தம் அதிகமாகச் செல்லாது. அப்போது ரத்தத்தின் அழுத்தம் உள்ளே அதிகமாகி விட்டால் கை கால்களைச் சுண்டிவிடும்.
பயமும் நடுக்கமும் அதிகரிக்கப்படும்
பொழுது இருதயம் வேகமாகத் துடிக்கும் நிலை வரும் பொழுது அதற்கு வேண்டிய இரத்தம் சரியாக வரவில்லை
என்றால் பட்…! என்று நின்று விடும்.
ஹார்ட் அட்டாக் என்று மருத்துவர்கள் இதைச் சொல்வார்கள்.