
இந்த உபதேசம் எளிதானதல்ல…!
பூமிக்குள் உருவாகும் தாவர
இனங்கள் அனைத்திற்கும் உணவு எங்கிருந்து எப்படிக்
கிடைக்கிறது…? என்பதை அறிய முற்படுகின்றான் அகஸ்தியன். அப்பொழுதுதான் பூமி துருவத்தின் வழியாக அதைக் கவர்கிறது என்று உணர்ச்சியால் அறிகின்றான்.
1.துருவத்தினை நோக்கி உணர்வினைச் செலுத்துகின்றான்
2.அது தாவர இனங்களுக்குப் போவதற்கு முன் இவன் நேரடியாக நுகரும் தன்மை வருகிறது.
3.இவனுக்குள் இருக்கும் சக்தியின்
தன்மை அதை மாற்றி அமைக்கின்றான்.
மற்ற மண்டலங்களிலிருந்து வருவதை
நட்சத்திரங்கள் பால்வெளி மண்டலமாக மாற்றி அதிலிருந்து வரும்
துகள்கள் ஒன்றுடன் ஒன்று உராயப்படும் பொழுது மின்னல்களாக மாறி ஒளிக்கற்றைகளாகப் பரவி மற்றதுடன்
இணைந்து விடுகின்றது… பல மாற்றங்கள் ஆகின்றது.
1.அகஸ்தியன் துருவத்தை உற்று நோக்கும் பொழுது அந்த
நட்சத்திரத்தின் உணர்வுகளைப் பார்க்க
நேருகின்றது.
2.அதை அவன் நுகர நேர்கின்றது. அவன் உடலுக்குள் அத்தகைய அணுக்கள் பெருக நேர்கின்றது.
கார்த்திகை நட்சத்திரத்தின்
சக்தியும் ரேவதி நட்சத்திரத்தின் சக்தியும் அதிலிருந்து
வரக்கூடிய துகள்கள் தூசியாக வரப்படும் பொழுது… வியாழன் கோளிலிருந்து வெளிப்படக்கூடிய கதிரியக்கமும் சந்திக்கும் பொழுது… அதைக் கண்ட பின் தாக்கி ஓடும் வேகத்தில் ஒன்றுடன் ஒன்று உராய்ந்து மோதி… அதிலே சிக்குண்ட நிலைகள்
கொண்டு தான் துடிப்பு என்ற நிலையில் “ஒரு உயிரணு உண்டாகிறது…”
இந்த நட்சத்திரத்தின் இயக்கத்தில் தான்
உயிர் உருவாகின்றது.
1.மின்னணு போன்று அது
துடித்துக் கொண்டே இருக்கும் நமது உயிர்.
2.நுகரும் உணர்வைத் தான்
அதே துடிப்பின் நிலை கொண்டு உடலாக மாற்றுகின்றது.
ஏனென்றால் எல்லாவற்றிலும்… செடி கொடிகள் அனைத்திலும் நட்சத்திரங்களின் இயக்கங்கள் உண்டு நட்சத்திரங்கள் இல்லாது எதுவும்
இல்லை கல்லானாலும் மண்ணானாலும் அதிலே அது உண்டு.
கார்த்திகை நட்சத்திரம் ஆண்பால்… ரேவதி நட்சத்திரம் பெண்பால். ரேவதி நட்சத்திரத்தின் சக்தி அதிகமாகப்
பெற்றிருந்தால் அந்த பாறைகள் வளரும் பெண்பால் என்று அந்தப்
பாறைகள் வளர்ச்சியாகும்.
கார்த்திகை நட்சத்திரம் என்ற ஆண்பால் உணர்வுகள் பெற்றிருந்தால் அதனின் வளர்ச்சி
குன்றியே தான் இருக்கும். செடிகளிலும்
ஆண் செடி பெண் செடி என்ற நிலையில் உருவாகின்றது.
நமது உயிருக்குள்ளும் அத்தகைய நிலை உண்டு. கார்த்திகை நட்சத்திரம்
ஆண் பால் என்றால் ரேவதி நட்சத்திரம் பெண்பால் ரேவதி நட்சத்திரத்தின் துகள்கள்
அதிகமாக இருந்தால் பெண்ணாக உருவாக்கி மற்றொன்றைத் தன் இனத்தை
உருவாக்கும் சக்தி பெறுகின்றது.
கார்த்திகை நட்சத்திரம் என்றால் அதில் ஆண்
என்ற நிலையில் தான் இருக்கும். இவ்வாறு நட்சத்திரங்களின் உணர்வு கொண்டு ஆண் பெண் என்ற உணர்வுகள் உருப்பெறுகிறது. பெண்ணாக இருந்தால் கருவாக்கி தன் இனத்தை அதன்
ரூபமாக உருவாக்கும் நிலை பெறுகின்றது.
இவையெல்லாம் இயற்கையின் நியதிகள் என்று நமது குருநாதர் தெளிவாக்குகின்றார்.
1.உங்களுக்குச் சுருங்கச் சொல்கின்றேன் பார்த்த நிலையோ ஏராளம்.
2.அதையெல்லாம் வடித்து உங்களிடம் சொல்ல வேண்டும் என்றால் உங்களுக்குப் பொறுமை
பத்தாது…
3.அவ்வளவு காலம் உங்களால்
உட்கார்ந்து இருக்கவும் முடியாது.
கேட்க வேண்டும் என்ற ஆர்வம் உங்களிடம் இருக்கும். அதே சமயத்தில் சிலருக்கு உடல் வலியும் இருக்கும்.
1.ஆனாலும் இதையெல்லாம்
கேட்டு நுகரப்படும் பொழுது அவருடைய உடல் வேதனைகள் குறையும்.
2.முதலில் உட்கார
முடியவில்லை என்று நினைத்திருப்பார்கள். இதை நுகர நுகர அந்த உடலில் இருக்கக்கூடிய வலிகள் நீங்குவதைக் காண முடியும்.
3.இருதய ஓட்டத்தின்
துடிப்பு அதிலே அடைப்புகள் இருந்தால் இந்த உபதேசத்தைக் கேட்கக் கேட்க
4.இருதய ஓட்டத்தின்
அடைப்புகளும் நீங்கும்… இதயம் சீராக இயங்கும்.
இந்த உபதேசம் எளிதானதல்ல…!
அகஸ்தியன் கண்டதை நமது குருநாதர் காட்டிய
நிலையில் அதைக் கவர்ந்து உணர்வின் ஒலியாக வெளிப்படுத்தும்
போது கேட்போர் செவிகளில் பட்டு இந்த உணர்வைக் கவர வேண்டும்
என்று கண்ணின் பார்வையைச் செலுத்தப்படும் பொழுது நுகர்ந்து உயிரிலே பட்டு தான் உணர்வின் தன்மையே வருகின்றது.
அந்த உணர்வுகள் உங்கள் உடலில்
சேர்க்கப்படும் பொழுது உடல் முழுவதும் சுழல்கின்றது. இதைச் சுழலச் செய்து
1.ஆதியும் அண்டத்தையும் அறிந்த அகஸ்தியன் உணர்வுகளை நீங்கள் எப்படியும் பெற வேண்டும்.
2.நஞ்சினை வென்று ஒளியின்
சரீரமாக அவன் எப்படிப் பெற்றானோ அந்த
நிலை நீங்கள் அடைய வேண்டும் என்பதற்குத்தான்
3.இதை உங்களிடம்
உபதேசித்துக் கொண்டே இருக்கின்றேன் அடிக்கடி.
ஆனால் ஒவ்வொரு
சந்தர்ப்பத்திலும் சில வித்தியாசம் இருக்கும் முழுமையும்
சொல்ல முடியாது.
1.இன்று சொன்னதை நாளை
அதனுடன் சிறிதளவே இணைத்து அதைச்
சேர்க்க முடியும்.
2.கண்ட உண்மையின் உணர்வினை அந்தந்தச்
சந்தர்ப்பத்திற்கு தக்கவாறு தான் உபதேசிக்க முடியும்...
உங்களை நுகரச் செய்ய முடியும்
3.உயிர் உங்களுக்குள் ஜீவணுவாக மாற்றும் திறன் எதுவோ அதன் அளவு அங்கே மாறும்.
அகஸ்தியன் அருளாற்றலைப் பெற
செய்வதற்குத் தான் இதைச் செய்வது.