ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 5, 2025

ஞான வித்து

ஞான வித்து


பிறரின் நோயைப் பற்றி நாம் அறிந்து உதவி செய்தாலும் ந்த நோயின் அணுக்கள் நம் நல்ல குணத்துடன் இணைந்து அதைப் பாழாக்கிடாதபடி நாம்  தடுத்துப் பழகுதல் வேண்டும்.
 
தைத் தான் மூலாதாரத்தில் மூண்டெழும் கனலைக் காலமறிந்து உன் செயலை எவ்வாறு செயல்படுத்த வேண்டும்…?” என்று காட்டுகின்றது தத்துவங்கள்.
 
நோயின் தன்மை உயிரான மூலாதாரத்தில் மோதுகின்றது.ந்த உணர்வினை அறிகின்றோம்.
1.அப்போது நாம் எதைச் செய்ய வேண்டும்…? நாம் நுகர வேண்டியது எது…?
2.அந்த தீமையைக் கண்டு நுகர்ந்த பின் நாம் செய்ய வேண்டிய பக்குவம் எப்படி இருக்க வேண்டும்…? என்பதைத்தான் இங்கே காட்டுகின்றார்கள்.
 
இதை வென்றவன் அருள் மகரிஷி துருவ நட்சத்திரம் என்பதை உணர்ந்து இருக்கின்றோம். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று உயிரிடம் வேண்ட வேண்டும்.
 
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடலிலுள்ள இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்
1.ஏனென்றால் வேதனைப்படும் உணர்வை நுகர்ந்த பின் இரத்த நாளங்களில் தான் கலக்கின்றது
2.இந்த விஷத்தின் தன்மை உடல் முழுவதும் பரவுகின்றது இரத்தத்தின் துணை கொண்டு.
3.இந்த உடலில் வளரும் நல்ல அணுக்கள் விஷத்தைக் கண்டபின் தன் உணர்வு கிடைக்காததனால் சோர்வடைகின்றது… நல்லதாக உருப் பெறுவதில்லை.
 
அடுத்த கணம் என்ன செய்ய வேண்டும்…?
 
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் எங்கள் ரத்த நாளங்களிலே கலக்க வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று வேதனை உணர்வு அந்த நல்ல அணுக்களுக்குள் சேர்வதற்கு முன் அதனைத் தடுக்க வேண்டும்.
 
கண்ணன் கருவில் இருக்கும் குழந்தைக்கு உபதேசித்தான்.
1.தீமை என்ற உணர்வு இங்கே வருகின்றது
2.அது வருவதற்கு முன் நீ உன்னை காத்துக் கொள்ளும் நினைவினைக் கண்ணின் நினைவு கொண்டு
3.உடலில் இருக்கும் அணுக்களுக்கு துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்ற உணர்வினை வலுவாக்கினால்
4.இதன் அருகிலே வரப்படும் பொழுது அந்த உணர்வினை அகற்றிவிடும் அல்லது மாய்த்துவிடும்.
 
அதனால் தான் கண்ணுக்குப் பெயர் இடையன் என்று வைத்தார்கள்.
 
கண்ணின் கருவிழி நோயாளியை உற்று நோக்குகின்றது. அவன் வேதனைப்படுகிறான் என்று உயிரோடு உணர்த்துகின்றது. அவனைக் காக்க வேண்டும் என்று ஆறாவது அறிவு கொண்டு நாம் செயல்படுகின்றோம்.
 
ஆனால் அந்த உணர்வு நமக்குள் வந்தபின் நம் உடலுக்குள் தீமை புகாது அந்த அணுக்கள் உட்கொள்ளாது அருள் மகரிஷியின் உணர்வுகளை இங்கே கண் கொண்டு உயிருடன் ஒன்றி இந்த உணர்வினை உடலுக்குள் செலுத்தி கண்ணின் நினைவினை அந்த அணுக்களுக்கு உபதேசித்தல் வேண்டும்.
 
1.இந்த உணர்வின் தன்மை ருப் பெற்றபின் இதன் வலுகொண்ட பின் அதன் அருகிலே ரத்தங்களில் வந்தாலும் ஏற்றுக் கொள்ளாது
2.இதனின் உணர்வுகள் நம் உடல் உறுப்புகளில் வரும் பொழுது கிட்னி அந்த விஷத்தைப் பிரித்து விடுகின்றது வெளியேற்றி விடுகின்றது
3.ஏற்றுக் கொள்ள முடியாத நிலை வரும்பொழுது இது பிரித்து விடுகின்றது.
 
ஆகவே நாம்ண்ணும் அருள் உணர்வுகள் உடல் உறுப்புகளில் வலுப் பெறும் போது அந்தக் கிட்னியை ந்த விஷத்தன்மை செயலற்றதாக மாற்றுவதற்கு முன்… கிட்னியை உருவாக்கி அணுக்களுக்கும் அருள் ஒளி படர்கின்றது.
 
பின் அந்த விஷத்தின் தன்மையை வடிக்கும் தன்மையாக வெளியேற்றி விடுகின்றது.
 
ஆனால் நாம் மாற்றத் தவறினால் என்ன நடக்கிறது…?
 
வேதனைப்படுவோர் உணர்வை நுகர்ந்தால் அது அணுக்களாக மாறப்படும் பொழுது கிட்னிக்கு சிறுநீரகத்தின் மூலம் அதைச் சீராகப் பிரிக்காதபடி விட்டுவிடுகிறது. ரத்தத்தைச் சுத்திகரிக்கவில்லை என்றால் விஷத்தின் தன்மை மற்றொன்றுக்குச் சேர்கின்றது. வடிக்கத் தவறினால் உடலுக்குள் கடும் நோய் உருவாகி மடியும் தன்மை வருகின்றது.
 
ஆகவே நமது ஞானிகள் காட்டிய அருள் வழியில் இந்த வாழ்க்கை எவ்வாறு வாழ வேண்டும்…? என்ற உணர்வினைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
 
நான் சொல்வது உங்களுக்கு எளிதாக இருக்கலாம்.
1.இதை எல்லாம் கண்டுணர்வதற்கு எவ்வளவோ சிரமப்பட்டேன் கடும் வேதனைகளை அனுபவித்தேன்.
2.வேதனை எப்படி வருகின்றது என்று உணரும்படி செய்தார் குருநாதர்.
3.வேதனை உன்னைத் தாக்கப்படும் பொழுது அதை நீ எவ்வாறு மாற்ற வேண்டும்…?
4.என்னென்ன உபாயங்களைக் கையாள வேண்டும்…? என்று என்னைத் தெளிவாக்கினார்.
5.அதனின் உணர்வினைத் தான் ஞான வித்தாக உருவாக்கி உங்களுக்குள் பதிவாக்குகிறேன்.
 
காரணம்… தீமை வரும் பொழுது உங்கள் ண்ணத்தால் அதை அகற்றிடும் வலிமை நீங்கள் பெற வேண்டும் என்று தான் தொடர்ந்து இங்கே உபதேசித்துக் கொண்டு வருகின்றேன்.