ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 26, 2025

நம் குலதெய்வங்கள் “சப்தரிஷி மண்டலத்தில் இணைந்து விட்டார்களா…?” என்று சந்தேகப்பட வேண்டியதில்லை

நம் குலதெய்வங்கள் “சப்தரிஷி மண்டலத்தில் இணைந்து விட்டார்களா…?” என்று சந்தேகப்பட வேண்டியதில்லை


கூட்டுத் தியானத்தின் மூலம் அவரவர்கள் குடும்பத்தைச் சார்ந்த குலதெய்வங்களை உடலை விட்டுப் பிரிந்த உயிரான்மாக்களை இன்று விண் செலுத்தினோம்
1.அவர்கள் அனைவரும் சப்தரிஷி மண்டலங்களுடன் இணைந்து விட்டார்கள்.
2.ஆனால் இணைந்து விட்டார்களா…! இல்லையா…? என்று நீங்கள் சந்தேகப்பட வேண்டாம்.
 
துருவ தியானம் முடிந்தபின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற எங்கள் குலதெய்வங்களின் உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து உடல் பெறும் உணர்வுகள் கரைந்து பெருவீடு பெருநிலை என்ற நிலை அடைந்திட வேண்டும் என்று நீங்கள் எண்ணினால்
1.அந்த ஆன்மாக்கள் ஒளியின் சரீரமாக சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்ததை நீங்களும் காணலாம்.
2.ஒரு 48 நாட்களுக்குத் தொடர்ந்து இதைச் சீராகச் செய்து வாருங்கள்.
3.சப்தரிஷி மண்டலத்திலிருந்தும் துருவ நட்சத்திரத்திலிருந்தும் பேரருளைப் பெறக்கூடிய தகுதி பெறுகின்றீர்கள்.
 
அவர்கள் முன் செல்ல அந்த உணர்வின் தன்மை நமக்குள் இணைந்து வருகின்றது.
 
சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து விட்டால் உடல் பெறும் உணர்வுகள் கரைந்து விடுகின்றது. கரைந்து விட்டால் சூரியனுடைய காந்த சக்தி அதைக் கவர்ந்து மாற்றிவிடும்.
 
உயிருடன் ஒன்றிய உணர்வின் அறிவுகள் துருவ நட்சத்திரத்தின் உணர்வுடன் இணைந்ததால்
1.அதிலிருந்து வரும் உணர்வினை உணவாக உட்கொண்டு
2.ஒளியின் சரீரமாக சப்தரிஷி மண்டலத்தில் வாழத் தொடங்குகின்றனர் நம் முன்னோர்கள்.
 
ஆகவே நாம் இதை முழுமைப்படுத்தி உடலுக்குப் பின் பிறவி இல்லாத நிலை அடைதல் வேண்டும். நம்முடைய முன்னோர்களை இப்படி அனுப்பினால் நமக்கும் நலம் பெறும் சக்தி கிடைக்கும்.
 
நண்பர்கள் உடலைப் விட்டுப் பிரிந்திருந்தால் துருவ தியானத்தில் இருந்து துருவ நட்சத்திரத்தின் சக்தியை முதலில் நமக்குள் வலுவாக்கிக் கொள்ள வேண்டும்.
 
அவர் உடலில் நோயோ மற்ற துன்பங்கள் இருப்பினும் இந்த உணர்வுகள் நமக்குள் பதிவாகி இருந்தால் அது நமக்குள் வளராது தடுக்கக் காலை துருவ தியானங்களில் மகரிஷிகளின் அருள் உணர்வுகள் எங்கள் உடலில் படர வேண்டும் என்று எண்ணி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணி
1.அந்த ஆன்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து விட வேண்டும் என்று எண்ணினால்
2.அவருடைய உணர்வுகள் நமக்குள் வளராது அவர்களும் சப்தரிஷி மண்டலத்தின் ஈர்ப்பு வட்டத்தில் இணைகின்றனர்.
3.அவர்களும் பிறவி இல்லாத நிலை அடைகின்றனர்.
 
மனிதர்கள் நாம் தான் இதைச் செயல்படுத்த வேண்டும்.