ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 6, 2025

நன்மை செய்வதை… நாம் நிலையானதாக இருக்கச் செய்ய வேண்டுமல்லவா…!

நன்மை செய்வதை… நாம் நிலையானதாக இருக்கச் செய்ய வேண்டுமல்லவா…!


நமது கண்கள் நமக்கு நல்ல முறையில் உதவி செய்கின்றது… நம்மைப் பாதுகாக்கின்றது. அதற்குப் பெயர் இடையன் என்று வைத்துள்ளார்கள்.
 
ரோட்டிலே செல்கின்றோம். எதிரிலே எதிர்பாராது ஒரு மாடு மிரண்டு வருகின்றது. கண்ணின் கருவிழி அந்த மாட்டினை நமக்குள் பதிவாக்கி விடுகின்றது ருக்மணி.
 
மாடு மிரண்டு வரும் வேகத்தினைஅந்த உணர்வு வெளிப்படுவதைச் சூரியனுடைய காந்தப்புலறிவு கவர்கிறது. அதன் உணர்வை நம் கண்ணுடன் சேர்ந்த காந்தப்புலனோ கவர்கின்றது நம்மை நுகரச் செய்கின்றது.
 
இந்த உணர்வுகள் மோதும் பொழுது அதனால் விபத்து ஏற்படும் என்ற உணர்வினைக் கூட்டிப் பாதுகாக்கும் உணர்வுகளைத் தூண்டி அந்த இடத்தை விட்டு நகரும்படி செய்கின்றது.
 
1.அப்பொழுது நம்மை மேய்ப்பது யார்…? நமது கண்களே…!
2.அந்தத் தீமையில் இருந்து விடுபட உணர்த்துகின்றது.
3.ஆனால் நமது உயிரோ அந்த உணர்வின் வலிமையை நமக்குள் அணுவாக உருவாக்கி விடுகின்றது.
4.அந்த அணுவை நாம் மாற்றும் திறன் வருதல் வேண்டும்.
 
ஈஸ்வரா…! என்று அடுத்த கணமே அந்தப் பயத்தால் நுகர்ந்த உணர்வு தனக்குள் அதிகரிக்காது துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்ற உணர்வினைக் கலந்து இதை ஓம் நமச்சிவாய என்று நம் உடலாக மாற்றிக் கொள்ளுதல் வேண்டும்.
 
ஆனால் காக்கப்பட்டோம். இருந்தாலும்
1.பயத்தின் உணர்வு அந்த வேகத்தின் தன்மை அணுக்களாக விளைந்தால் உடலில் இருக்கக்கூடிய சாந்த குணங்கள் இதைக் கண்ட பின் நடுங்கும்.
2.உடலிலே அடிக்கடி பதட்ட நிலை வருவதைக் காணலாம். ஏன் பதறுகின்றோம்…? பதட்டம் வருவது ஏன்…? என்ற நிலையே நமக்குத் தெரியாது.
3.நுகர்ந்த உணர்வின் இயக்கம் நம் உயிர் அதை அணுவாக உருவாக்குகின்றது. அந்த உணர்வின் செயலாக நம்மை இயக்குகின்றது.
 
இதைப் போன்ற கொடுமையில் இருந்து நாம் மீள்தல் வேண்டும்.
 
அருள் ஞானிகள் காட்டிய அருள் வழியில் செல்தல் வேண்டும். நன்மைகள் பல செய்யத் துணிவானாலும் நன்மை செய்த துணிவின் தன்மை கொண்டு அருள் ஒளி என்ற பேரருளை நமக்குள் கூட்டி அந்த நன்மை செய்ததை நிலையானதாக்க வேண்டும்…”
 
தீமையைக் கண்டுணர்ந்து தான் மற்றவர்களுக்கு உதவி செய்கின்றோம். ஆனால்… அப்படிக் கேட்டுணர்ந்த பார்த்துணர்ந்த அந்தத் தீமைகள் நமக்குள் உருப்பெறாது தடைப்படுத்த வேண்டும்.
 
அந்த வழியினைப் பெறச் செய்வதற்குத் தான் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை அவ்வப்பொழுது எடுக்கும் பழக்கம் வருவதற்காக இங்கே பயிற்சி கொடுக்கின்றேன் (ஞானகுரு).